அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது : சபையில் ரவி எம்.பி.

 7/10/2008 11:02:24 PMபிளாஸ்டரை ஒட்டி ஊசிகளை ஏற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதியமைச்சின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவகாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.