அமைதியை நிலைநாட்டவே அணு உலையை தகர்த்தோம்: வடகொரியா

பியாங்யாங், ஜூன்28-

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட வும், அணு குண்டு ஆபத்து இல்லாத பகுதியாக மாற்ற வுமே வடகொரியா தனது முக்கிய அணு உலையின் குளிரூட்டும் கோபுரத்தை தகர்த்துக்கொண்டது என அந்நாட்டின் உயரதிகாரி தெரிவித்தார்.

தென்கொரியாவை தள மாகக்கொண்டு, சோசலிச வடகொரியாவை அனுதின மும் மிரட்டிவந்தது அமெ ரிக்கா. மேலும் வட கொரியா அணுகுண்டு தயா ரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும், இதனால் கொரிய தீபகற் பத்திற்கு ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்த அமெ ரிக்கா வடகொரியாவை தீமையின் அச்சு என்றும், பயங்கரவாத நாடு என்றும் அடாவடியாக கூறியது. அது மட்டுமின்றி சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு பல்வேறு தடைகளும் விதிக்க ஏற்பாடு செய்தது.

ஒரு கட்டத்தில் அமெ ரிக்காவுக்கும் வடகொரி யாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ் நிலையும் உருவானது.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு சீனா தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியது. வட கொரியா, அமெரிக்கா, தென்கொரியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகள் பங் கேற்ற பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாக பல கட்டங்களாக நடந்து வந்தது.

இப்பேச்சுவார்த்தையில், வடகொரியாவுக்கு சர்வ தேச அளவில் வர்த்தக ரீதியாக தேவையான உதவி களைச் செய்ய மேற்கண்ட நாடுகள் உறுதியளித்தன.

இந்தப் பின்னணியில், வடகொரியா தனது அணு திட்டங்களில், சர்வதேச அணுசக்தி கழகம் உள் ளிட்ட அமைப்புகள் ஆட் சேபித்த சில அம்சங்களை தளர்த்திக்கொள்ள சம்ம தித்தது.

இதனடிப்படையில் அந்நாட்டின் யோங்பியான் எனுமிடத்தில் அமைந் துள்ள ஐந்து மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மிகச்சிறிய அணு உலையின் குளிரூட்டும் கோபுரத்தை வெள்ளியன்று பாதுகாப் பான முறையில் தகர்த்தது.

ஆறு நாடுகள் பேச்சு வார்த்தை முடிவை ஏற்று, அணு உலையின் கோபு ரத்தை தகர்த்துக் கொண் டது, கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், அணு குண்டு ஆபத்தில்லாத நிலை யையும் ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும், இதன்மூலம் சோச லிச வடகொரியா உல கிற்கே வழிகாட்டியுள்ளது என்றும் சர்வதேச நோக்கர் கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

பேச்சுவார்த்தையின்படி வடகொரியா நடந்து கொண்டது; அமெரிக்கா இதுபோல் நடந்துகொள் ளுமா என்பது போக போகத்தான் தெரியுமென் றும் அவர்கள் கூறினர்.