இலங்கை நவ காலனித்துவ பாசிச அரசிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில இன்று நடத்திய அமைதிப் பேரணியில் போலிசாரும் இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப் புகைக்குண்டுகள், பிரயோகிக்கப்பட்டன. இரண்டு மாணவிகளை ஒடேல் விற்பனை நிலையத்தின் முன்பாகக் கைது செய்த போலிசார் மிருகத்தனமாகத் தெருவில் போட்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயமுற்ற மாணவிகள் இருவரும் நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பல இடங்களில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மரணம்; நவ-காலனிய அரசே வெளியேறு; கல்வியைத் தனியார் மயப்படுத்தாதே போன்ற சுலோகங்கள் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் பல இடங்களில் இரத்தம் தெறித்தது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். அமைதிப்பேரணியின் மீது ராஜபக்ச கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல் இன்னும் தொடர்கிறது.