06.09.2008.
இந்தியா அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் செய்வதற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) முழு விலக்குடன் கூடிய அனுமதி கிடைத்துள்ளது இந்தியாவை விட அமெரிக்காவிற்கே அதிக வெற்றி என்று அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே.ஐயங்கார் கூறியுள்ளார்.
“கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்.எஸ்.ஜி. என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா. அப்போது முதல், ஒரு மிகப்பெரிய சந்தை என்ற வகையில், பல பில்லியன் டாலர் மதிப்பிலான தனது வர்த்தகத்திற்கு இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்தியாவிற்கு விலக்களிக்க வேண்டும் என்று என்.எஸ்ஜி.யை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.” என்றார் ஐயங்கார்.
“அணு சக்தி தொழில்நுட்பங்களை நமக்கு விற்கக் கூடிய ஆஸ்ட்ரெலியா, கனடா உள்ளிட்ட நாடுகள், தங்களின் வர்த்தகத்தின் போது என்ன மாதிரி நடந்துகொள்வார்கள், தங்களின் பொருட்களுக்கு என்ன விலை வைப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆஸ்ட்ரியா, நியூ ஸீலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, அவர்கள் அணு சக்தி தொழில்நுட்ப வர்த்தகர்கள் என்ற முறையில் நாம் மதிப்பளித்தாக வேண்டும். அவர்கள் என்ன வகையான வர்த்தகர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்றார் ஐயங்கார்.