அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கிவிடாமல் தேசம் காக்க அணி திரள்வோம:பிரகாஷ் காரத் அழைப்பு!

புதுடில்லி, ஜூலை 14-

அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கைகளில் சிக்கி விடாமல் தேசத்தை பாது காக்க அணி திரள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார்.

நாட்டு மக்களின் முதுகை ஒடிக்கும் கொடும் விலை உயர்வுக்கு தீர்வு காணாமல் அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றத் துடிக்கும் காங்கிரசை அம்பலப்படுத் துவோம் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தவும், அதன் முதல் கட்டமாக சர்வதேச அணுசக்தி முகமையுட னான அணு வர்த்தக பாது காப்பு விதிமுறைகள் ஒப் பந்தத்தை மேற் கொள்ளவும் மன்மோகன் சிங் அரசு தீவிரமாக முயற் சித்து வருகிறது. அதை எதிர்த்து, ஆதரவை வாபஸ் பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், அணுசக்தி உடன் பாட்டை எதிர்த்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த தவ றிய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள் கைகளைக் கண்டித்தும் நாடு தழுவிய பிரச்சாரத்தை திங் களன்று புதுடில்லியில் துவக் கின.

ஜூலை 22-ம்தேதி நாடா ளுமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்க காங்கிரஸ் தலைமை பல்வேறு உதிரிக் கட்சிகளின் எம்.பி.க்களை விலைபேசிக் கொண்டிருக் கும் நிலையில், நாடு முழு வதும் பெரும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இந்தப் பிரச்சாரத்தை நடத்து கின்றன.

டில்லியில் திங்களன்று நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுக்கூட் டத்தில் இடதுசாரிக் கட்சி களின் தலைவர்கள் பிர காஷ் காரத், ஏ.பி.பரதன், தேவபிரதா பிஸ்வாஸ், சந் திரசூடன், சீத்தாராம் யெச் சூரி, து.ராஜா, பிருந்தா காரத், தேவராஜன் உள் ளிட்ட தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக் காவுக்கு ஆதரவான கொள் கைகளையும், மக்கள் விரோதக் கொள்கைகளை யும் பின்பற்றி வருகிறது. விலை உயர்வு சாதாரண மக்களை கொடூரமாகத் தாக்குகிறது. இதனால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கி யுள்ளது. நாட்டு மக்களின் முதுகை ஒடிக்கும் விலை உயர்வுப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் ஜார்ஜ் புஷ்சுக்கு அளித்த உறுதி மொழியை காப்பாற்றவே மன்மோகன் சிங் அரசும், காங்கிரஸ் தலைமையும் துடிக்கிறது. எனவே தான், அரசுக்கு அளித்து வந்த ஆத ரவை விலக்கிக் கொண் டோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இப்பொதுக்கூட்டத் தில் விளக்கினார்.

“நாட்டின் நலன் காக்க அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் அணி திரள வேண்டுமென் றும், காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவோ, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசோ இருப் பதை நாங்கள் விரும்ப வில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும், தொழிலா ளர்களுக்கும் இதர பகுதி மக்களுக்கும் எந்த நலனும் பயக்காத அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என் றும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு இல் லாமலேயே உள்நாட்டு எரி சக்தி வளங்களையும், மாற்று எரிசக்தி வளங்களையும் பயன்படுத்த முடியும் என்ப தையும் விளக்கும் விதத்தில் நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் இந்தப் பிரச் சாரத்தை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார்.

அணுசக்தி உடன்பாடு குறித்து இன்னும் முழுமை யான தகவல் கிடைக்கப் பெறாத மாணவர்களிட மும், இளைஞர்களிடமும் இடதுசாரி அமைப்புகள் இந்தப் பிரச்சாரத்தை தீவிர மாக கொண்டு செல்லும் என்றும் குறிப்பிட்ட பிர காஷ் காரத், நாட்டின் இறையாண்மையையும் மக்களின் வாழ்வையும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்திடமிருந்தும், பெரு முதலாளிகளின் லாப வெறி யிலிருந்தும், மதவெறி அமைப்புகளிடமிருந்தும் பாதுகாத்திட, அனைத்து ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாளை சென்னையில் பொதுக்கூட்டம்

இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஜூலை 16 புதனன்று இடது சாரிக் கட்சிகளின் பிரம் மாண்டப் பொதுக்கூட் டம் நடைபெறுகிறது.