11.12.2008.
பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அடைத்து வைக்க அமெ ரிக்கா பயன்படுத்தும் குவான் டநாமோ சிறையை மூட வேண்டும் என்று கியூபா அயல்துறை அமைச்சர் பெலிப் பெரேஸ் ரோக் கூறினார். கியூபா தீவில் உள்ள குவான்டநாமோவை அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமை அறிவிக் கை வெளியிடப்பட்டதின் 60ம் ஆண்டு விழா ஹவானா வில் நடைபெற்றது. மாநாட்டு அரண்மனையில் நடை பெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ரோக் இவ்வாறு குறிப்பிட் டார். பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா சுய முரண்பாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆக்கிரமிப்பையும், ராணுவ நடவடிக்கையை யும் அமெரிக்கா நியாயப் படுத்துகிறது. ஏராளமான தீவிரமான மனித உரிமை மீறல்களை அது நடத்தியுள் ளது. பொருளாதாரத் தடை களையும் மிரட்டல்களை யும் சட்டமாக்க முயன்றது, ஆதிக்க சக்திகளின் நலன் களைக் காக்க மற்ற நாடுகள் மீது பொருளாதார, அரசி யல் மற்றும் சமூகக் கட்ட மைப்பு ஆகியவைகளைச் சுமத்த முயன்றது என்று ரோக் அமெரிக்காவை விமர் சித்தார்.
அமெரிக்கா குவான்ட நாமோ சிறையில் ஏராள மான அமெரிக்க எதிர்ப்பா ளர்களை அடைத்து வைத் துள்ளது. இது செய்தித் தாட்கள் மற்றும் மனித உரிமை குழுக்களால் கடு மையாக விமர்சிக்கப்பட் டது. அடைக்கப்பட்டவர் களில் பலரிடம் குற்றச்சாட் டுகள் கூறப்படவில்லை. கைதிகளிடம் விசாரணை நடத்துவது என்ற பெயரில் மனிதஉரிமைகள் மீறப்படு கிறது என்றும் ரோக் குறிப் பிட்டார்.