உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர் கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது.
வின்/கேலப் இண்டர்னேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு , 65 நாடுகளில் சுமார் 67,000 பேரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்திருக்கிறது.
ஆனால், பெரும்பாலோனோர் மத்தியில், மக்கள் இடம் பெயர்ந்து குடியேறத் தகுதியான நாடு அமெரிக்காதான் என்ற கருத்தும் இருப்பதாக, இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இந்த ஆய்வில் பங்கெடுத்துக்கொண்டோரில் ஏறக்குறைய பாதிப்பேர் , வரும் ஆண்டு, முடியப்போகும் 2013ஐ விட சற்று மேலும் நன்றாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினர்.
உலகில் அரசியல்வாதிகள் பெரும்பாலோர் பெண்களாக இருந்தால், உலகம் இன்னும் மேம்பட்டதாக இருக்கும் என்று மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் கருதினர்.
http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131230_usworldpeace.shtml