ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் போராட்டங்களும் சோசலித்தை நோக்கிய மக்களின் தேடலும் அணிதிரளலும் அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தேசியவாத – ‘இடதுசாரிகளின்’ வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தை நிலை குலையச் செய்துள்ளது. ஐரோப்பா முழுவதும் புதிய அரசியல் போக்காக இது எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. இவற்றை எதிர்கொள்ளும் மையப் புள்ளியாக உக்ரையினை ஏகாதிபத்திய நாடுகள் தெரிவுசெய்துள்ளன.
உக்கிரையின் நிறவெறி பாசிச அரசிற்கு நேட்டோ கூட்டணி தமது ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது. தவிர, ரஷ்யாவின் மிரட்டலுக்கு எதிராக அணுவாயுதப் போர்த் தயாரிப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவை தீர்மானித்துள்ளன.
ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும் அதற்கு எதிரான தயாரிப்பு ஒன்றை தாமும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் காரணமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் நேட்டோ ராஜதந்திரி ஒருவர் கார்டியன் நாளிதழில் தெரிவித்தார்.
அணுவாயுதத் தடைச் சட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு ரஷ்யாவிற்கு எதிரான பதிலடியாக அதனைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தோற்றுவித்து அதனை எதிரியாக்கி பிரதேசத்தை இராணுவ் மயப்படுத்தியது போலவே ஐரோப்பாவில் ரஷ்யாவை எதிரியாக்கியுள்ளனர்.
இன்று ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் எனக் காரணம் காட்டி தாமும் அணு ஆயுத யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என ஏகாதிபத்திய நாடுகள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.