அமெரிக்காவில் பொருளாதாரத்தை மீட்பதற்கான அவசரத் திட்டங்கள்

19.09.2008.

அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான பிரம்மாண்ட செலவு பிடிக்கும் அவசரத் திட்டங்களை அதிபர் புஷ் அவர்களும் கருவூல செயலர் ஹென்றி பால்சனும் அறிவித்துவருகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்துடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிபர் புஷ் கோரியுள்ளார்.

இத்திட்டங்கள் பத்தாயிரம் கோடி டாலர்கள் கணக்கில் செலவுபிடிக்கும் என்று அமெரிக்க கருவூலத்தின் செயலாளர் ஹென்றி பால்சன் கூறியுள்ளார்.

இது ஒரு தைரியமான அணுகுமுறை என்றும் நிதிச் சந்தைகள் உறைந்துபோய் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி வழங்க முடியாமல் இருப்பதை விட அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் செலவழித்தாலும் பிரச்சினையின் ஆணிவேரைக் களைவது நல்லது என்று அவர் கூறினார்.

நிதி நிறுவனங்கள் வழங்கியிருந்த வீட்டுக் கடன்களில் திரும்பி வராதவற்றை அரசு கையெடுத்துக்கொள்வதாக இத்திட்டம் அமையும்.
BBC.