அமெரிக்காவைச் சேர்ந்த படையினர் குழாம் ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ உத்தியோகத்தர்கள் ஆறு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சேவைகைளை ஆற்ற உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
தெற்காசியாவில் அதிகரிக்கும் அபாயகரமான வல்லரசுப் போட்டியின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகிறது.