வருகிற ஜூன் 2- முதல் 4 வரை கொழும்பில் நடத்தப்படுவதாக இருந்த
iifa என்னும் இந்தியப் படவிழாவின் தூதராக நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்திய நிலையில் இன்று புதன்கிழமை iifa அமைப்பின் விழாத் தூதுவர் அமைப்பில் இருந்து தான் விலகுவதாகவும் ஐஸ்வர்யராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்டோர் அவ்விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில் iifa அமைப்பு கொழும்பில் நடத்தும் விழாவுக்கான புதிய தூதராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சல்மான் கானுக்கு எதிராக விரைவில் போராட்டம்-சீமான் அறிவிப்பு.
ங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நாம்தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.லாரா தத்தா,விவேக் ஓபராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இன்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும் திராவிடர்களுக்கும்,சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில் எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது.அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.. .
TQ MR ABITHA AND FLY
ஈழத்தமிழர்களின் வாழ்வில் அக்கறை கொண்டோரிற்கு முன் ஆர்பாட்டம்
செய்துதான்
உண்ர்த்த வேண்டுமென்பதில்லை. இது ஓர் மறைமுகமான் புலிகளின் பயங்கரவாதம். புலிகள் செய்த கொலகளிற்கும்
குற்ரங்களிற்கும் ஒத்தாசை புரிவோரும் தமிழரின் பெயரால் அரசியல்லாபம்
தேடும் சுயநலவாதிக்ழுமே இவர்கள். துரை
வாய மூடுடா சிங்கள **!
விறூமான்டியினது போன்ற இடுகைகளல் என்ன நன்மை?
இத்தகைய மொழியின் தரமும் பச்சை இனத் துவேஷமும் இனியொருவுக்குத் தக்கதா?
துரை, சீமானின் சந்தர்ப்பவாதம் காரணமாக இந்திய சினிமா வணிகத்தின் இன்னொரு அவலட்சணமான முகத்தைக் காணத் தவறலாகுமா?
புலி எதிர்ப்புப் பரிமாணத்தை மட்டுமே துரை எங்கும் காண முனைவது நல்லதல்ல.
அதன் எதிர்வினைகள் நம்மை மேலும் ஆரோக்கியமற்ற திசையில் தள்ளும் என்பதற்கு விறூமான்டியினது இடுகை ஒரு சான்று.
சிங்களவர் இவ்வளவுதூரம் தமிழர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணம்
புலிகளின்
அரசியல் ஆதர்ரமற்ர பயங்கரவாத்மேயாகும். இன்னமும் புலிகளின் பாணியில் நடப்பவர்க்ளால் மேலும்
சிங்கள்வர்கள் தமிழர் மீது செலுத்தும் ஆதிக்கம் அதிகமாகும். ஈழ்த்தமிழர்களிற்காக தமிழகத்தமிழர்கள் இந்தியாவின் பகைவர்களாகவும், நம்பிக்கை அற்ரவர்களாக்வும் மாறுவது
தடுக்கப்படவேண்டும். தவ்றின் ஈழத்தமிழர் போல் தமிழகமும் அவ்தியுறும். இதற்காக
எந்த ஈழ்த்தமிழனும் கண்ணீர்விடமாட்டான் என்பதை ஈழ்த்தில் பிறந்து கண்முன்னே
அனுபவித்தவற்ரை சாட்சியாக் வைத்து கூறுகின்றேன்.
தமிழரின் பெயரால் தமிழரிடம் பிழைப்பு நட்துபவர்கள் சிங்கள் அடக்கு முறையாளர்களை விட் கொடியவர்களே.
துரை
துரை, தவறுகளை வெறுமே புலிகள் மீது சுமத்தி விட இயலுமா? இந்த வன்முறைக் கலாசாரத்தின் வேர்கள் தமிழர் கூட்டணியில் தெரியவில்லையா?
இந்தியாவின் நோக்கம் எவருக்கும் உதவுவதல்ல. இந்தியா யார் தரப்பிலும் இல்லை.
இந்தியாவைப் பகையாதிருப்பது, நாம் இந்திய நோக்கங்கட்குப் பணிந்து போனாலே இயலும்.
புலிகள் இந்தியப் படைகளை நாட்டை விட்டுப் போகச் செய்த்தது மெச்சத்தக்கது.
வலிந்து பகை தேடும் விதமாகப் புலிகள் செய்த காரியங்கள், இந்தியப் படைகள் திருப்பி அனுப்பப்பட்ட போது சினக்காத இந்திய மக்களையும் பகைக்கச் செய்தன.
மாற்று அரசியலைச் சகியாமையும் அரசியற் படுகொலைகளும் விடுதலைக்குக் கேட்டையே செய்தன. ஆனால் எல்லாப் பெரிய இயக்கங்களிலும் அப் போக்கு இருந்தது.
அதை இந்திய 1980களில் ஊக்குவித்தது.
பிரச்சனையைத் தனியே தமிழர்-சிங்களவர் பிரச்சனையக்கியதும் தமிழரை மேலும் தனிமைப் படுத்தியது.
ஒரு சிறுபான்மை பெருந்தொகையான புலம்பெயர்ந்தோரைத் தவறாக வழிநடத்தும் போது, தவறுகளைப் பொறுமையாக விளக்காவிடின் யார் மனதையும் மாற்ற இயலாது.
தெரிந்தும் தவறு செய்வோருக்கும் தவறாக வழிநடத்தப்பட்டோருக்கும் இடையில் வேறுபாடு காண்பது முக்கியம்.