உலகத்திற்கு நாகரீகத்தைப் போதிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க அரசின் இராணுவத்தின் உள்ளேயே ஒவ்வொரு மணித்தியாலமும் மூன்று பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடைபெறுகிறது என இராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது. பென்டகன் அமரிக்க பாதுகாப்புச் செயலகமே வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 70 வரையிலான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினுள் நடைபெறுவதாக பென்டகன் பாதுகாப்பு தலையமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் மட்டும் இருபத்தி ஆறாயிரம் இராணுவ உறுப்பினர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. சமூகக் காரணங்களாலும், பழிவாங்கல் குறித்த அச்சத்தினாலும், நீதித்துறை குறித்த சந்தேகங்களாலும் மேலும் பலர் பாலியல் வன்முறை குறித்து முறைப்பாடு செய்யாமலிருக்கலாம் என கருதப்ப்டுகின்றது.
இத்தொகை சேர்த்துக்கொள்ளப்பட்டால் வன்முறைக்கு உள்ளாகுவோரின் தொகை பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாலியல் வன்முறைக்கு எதிரான இராணுவப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட கேணல் ஜேவ் குரூசின்ஸ்கி என்பவரே மே மாதம் ஆறம் திகதி தனது அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டார் என்பதிலிருந்து அமரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை நேரடியாகவும் ஏனைய நாடுகளைத் தமது பினாமிகள் ஊடாகவும் ஆக்கிரமிக்கும் அமரிக்காவினது கோரக் கரங்களை அதன் உள்வீட்டு அருவருப்புக்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.
அமரிக்க நாகரீகத்தின் குடும்ப உறவுகள் வெளிப்படையானது, அமரிக்கர்கள் ஒருவரை ஒருவர் நெடுநாளைக்குப் பின்பு சந்திக்கும் சந்தர்ப்பங்களில், ஆண் என்றால், தன் மனைவியை அறிமுகப்படுத்தும் போது இது என் எத்தனையாவது மனைவி என்று சர்வ சாதரணமாக அறிமுகப்படுத்துவான். அதுபோலவே, பெண் என்றால் தன் கணவனை அறிமுகப்படுத்தும் போது, இது என் எத்தனையாவது கணவன் என்று அறிமுகப்படுத்துவாள். பாலியல் வன்புணர்வு என்பது, புணர்வுக்குப் பின்னரே அதுவன்புணர்வா, இன்பப்புணர்வா என்பதும் அவர்களால் நிதானமாகத் தீர்மானிக்கப்படுவதாகவே கொள்ள முடியும்.
It is in the US you will come to know it. Do you believe it doesn’t happen with the armed forces in India or China. There everything is swept under the carpet. That is the difference.
இந்தப் பண்பு நல்ல பண்பா கெட்டதா என்று நான் ஆராய முற்படவில்லை. இந்தியா, சீனா அல்ல உலகம் முழுவதுமே இது நடைபெறுகிறது. அமரிக்கா இதில் வெளிப்படையாக உள்ளது.