ஈழத் தமிழர்கள் மத்தியில் அரசியல் தலைமை எதுவுமற்ற நிலையில், இலங்கை ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்புமையமாக மாறி வருகிறது. இந்தியா, ஐரோப்பா,சீனா, அமரிக்கா போன்ற பிரந்தியத்தி ஆதிக்கத்தை வலியுறுத்தும் வல்லரசுகள் மக்களை அவர்களின் அதிகாரத்திற்குப் பயன்படுத்தி அழிவிற்கு உட்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமரிக்கப் படையினர் இருவர் துப்பாக்கிகளுடன் கட்டுனாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்கப் படைத்தரப்பைச் சேர்ந் தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இவ் விரு அமெரிக்கர்களும் கடந்த 18ஆம் திகதி கட்டார் விமான சேவை விமானத்தின் ஊடாக கட்டு நாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தபோதே கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் பொதிகள் கட்டுநா யக்கா விமானநிலையத்தில் சோத னைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதற்குள் துப்பாக்கி ஒன்று பாகம் பாகமாக கழற்றி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.ஆனால் இத் துப்பாக்கி அமெரிக் கப் படைத்தரப்பினரால் பொதுவாக உபயோகிக்கப்படும் எம் 16 ரகத் தைச் சேர்ந்தது என தற்போது தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் படைத்தரப்பில் பணி யாற்றும் இவ்விருவரும் விடுமுறை யைக் கழிக்கவே கொழும்புக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளபோ திலும், விடுமுறைக்குச் சென்றவர்கள் எதற்குத் துப்பாக்கியை வைத்தி ருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
துப்பாக்கியை விமானத்தில் கொண்டுசெல்வது சட்டப்படி குற்ற மாக கருதப்படும் நிலையில், அமெ ரிக்க விமான நிலையத்தின் பாது காப்பு நடைமுறைகளிலிருந்து தப்பி இவர்கள் துப்பாக்கியை எவ் வாறு எடுத்துவந்திருக்க முடியும் என கொழும்பு பாதுகாப்பு வட்டாரங் களில் கேள்வி எழுந்துள்ளது.இதனால், இவ்விரு அமெரிக் கப் படையினரிடமும் பொலிஸா ரின் உயர்மட்டக் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரகசிய நடவடிக் கை எதையும் மேற்கொள்ளும் திட் டத்துடன் இவர்கள் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளனரா என்ற அச் சம் கொழும்பு பாதுகாப்பு வட்டாரங் களில் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இரு அமெரிக்கப் படையினர் கைதுசெய்யப்பட்டமை குறித்து இலங்கைக்கான அமெரிக் கத் தூதரகம் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை
நான் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க தொழிலாளிவர்க்கத்திற்கு எந்தவிதத்தில் விரோதத்தன்மை கொண்டவன் அல்ல. உலகஒழுங்கு முறையில் அமெரிக்காவின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அமெரிக்க மூலதனஅதிகாரம் இதில் தலையிடவில்லை என்றால் உலகயுற்பத்தி முறையிலும் அதை பங்கிடுவதிலும் பெரும் மாற்றங்களை மனிதவரலாறு எதிர் கொண்டிருக்க முடியும். இல்லையா..?.
உலகயதிகாரத்திலும் தனது பொருளாதார வல்லாதிக்கத்தை இழந்த இந்தநேரத்தில் இதுஎதை செய்யமுடியும் என்பதை கணக்கிடுவது ஒரு கஷ்ரமான பிரச்சனையே இல்லை.
ஈராக்மக்களின் வாழ்வை சூனியமாக்கியது லிபியாவில் மனிதநேயத்தை நிலைநாட்ட ஐரோப்பிய அமெரிக்க கூட்டு. அதில் பிரிவிவை ஐரோப்பிய-அமெரிக்காவுக்
கான உடன்பாடுகள். அதில் இன்றுவரை பலியாகிப் போனவன் டொமினிக் ஸ்ரவுஸ் கான் அவர்கள். முழுமையான முடிவுகள் வெளிவராதபோதும் இவர்களுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் தெளிவாக தெரிகின்றன.
அமெரிக்க இராணுவம் பொழுதுபோக்க வருவதாகயிருந்தால் உல்லாசம் தேடுவதாக இருந்தால் யாரும் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு அமெரிக்க அதிகாரம் உள்ளவர்களின் காலடியையும் அளக்கவேண்டியது தொழிலாள
வர்க்க நலன்யுடையவர்களுடைய கடமையாகும்.
அமெரிக்கா இல்லாவிட்டால் அக்பர்களூம்,சுல்தான் களூம் உலகை சூறயாடி ஜனநாயக்த்தை படுகுழியில் புதைத்து சமாதி கட்டி விடுவார்கள்.உல்க் இரட்சகராக அமெரிக்கா இருப்பதே இன்றூ உலகிற்கான வெற்றீ.