ஏனைய நாடுகளதும், எதிரிகளதும், கணணிகளிலிருந்து தகவல்களைத் திருடுவதற்காக அமரிக்க அரசு பல பில்லியன் டொலர்களைச் செலவு செய்வதாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள் நாட்டில் கணணித் தகவல் திருடும் குற்றத்தின் பெயரில் பலரைத் கிரிமினல் குற்றம் சுமத்தி சிறைப்பிடிக்கும் அமரிக்க அரசே உலகின் மிகப்பெரும் கணணித் திருடன் என ஊடகவியலாளர் ஜோசெப் மேன் ரொய்டரில் தனது செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். கணணிகளை உளவு பார்ப்பதற்காக அமரிக்க அரசு நிறுவனங்களிடமிருந்து தகவல் திருடும் மென்பொருட்களை ஆயிரக்கணக்கான டோலர்கள் செலவில் வாங்கிக்கொள்வதாகவும், ஹக்கர்களேயே விலைகொடுத்து வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.