அமரிக்க அரசின் மூடுவிழா இன்று -01.10.2013- ஆரம்பமாகிறது. ஒரு மில்லியன் அரச ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். இதற்கு முன்னர் 17 வருடங்களின் முன்னருன் இதேவகையான கலைப்பு நடைபெற்றாலும் இம்முறை இது அமைப்பியல் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்ப்படுகின்றது. தவிர, திவாலாகிக்கொண்டிருந்த அமரிக்க நாட்டை தற்காலிகமாக நீட்சியடையச் செய்வதற்கான இடைக்கால நாடகமாகவும் இது கருதப்படுகின்றது.
தேசியப் பூங்காவிலிருந்து, பல ஆய்வுத் திட்டங்கள் இன்றோடு நிறுத்தப்படுகின்றன.
மூடப்படுவதை வெள்ளை மாளிகையே தீர்மானித்தது. இராணுவம் மற்றும் பாதுகாப்புக் குறித்த செயற்பாடுகளும் விமான சேவை போன்றவையும் தொடர்ர்சியாக இயங்கும். காங்க்ரஸ் உடன்பாடிற்கு வருமானால் மீண்டும் அரசு இயங்க வாய்ப்புண்டு. எது எவ்வறாயினும் மீள இயங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நீண்ட காலத்தினுள் பல அழிவுகளும் கொள்ளைகளும் நடைபெறும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இராணுவ உறுப்பினர்களுக்கு தொடர்ச்சையான ஊதியம் கிடைப்பதற்கான ஆவணம் ஒன்றை அரசு மூடப்படுவதற்கு சற்று முன்னதாக ஒபாமா கைச்சாத்திட்டார்.
காலாவதியான பின்னரும் வன்முறைகளூடாக முதலாளித்துவ உற்பத்தி முறையை தக்கவைத்துக் கொண்டவர்கள் இப்போது மரணக் கிடங்கிற்கு அனுப்ப்படுகிறார்கள். மேலும் தமது தற்காலிக வாழ்கையை நீட்சியடையச் செய்யவும் பேரும்பான்மை மக்களின் ஜனநாயக அரசான கம்யூனிச அரச உருவாக்கத்தைத் தடுக்கவும் இன்னும் நாடகங்கள் நடத்தப்படலாம்.
அமரிக்க அரசு மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் வரை மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கான புதிய திட்டங்கள் பல ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.
மேலதிக வாசிப்பிற்கு:
இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம்
Yes, and the world stopped spinning 🙁
http://youtu.be/xg_hBWlR3h0
வீதிகளில் ராணுவமோ கவச வாகனங்களோ இல்லை. விமானங்கள் குண்டுகள் பொழியவில்லை. யாரும் அலறி அடித்து ஓடவில்லை. அச்சப்படவும் இல்லை. பங்கர்கள் எதுவும் இல்லை. பஞ்சமும் இல்லை. எந்த போராட்டமும் இல்லை. அதற்கான தயாரிப்புக்கள் தலைமைகள் எதுவுமேயில்லை. எப்படி எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்?
சும்மா ஒரு யூகம்தான், கட்டியக்காரன் சொன்னானோ தெரியாது.