இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பரக் ஒபமாவின் விசேட பிரதிநிதிகளுக்கும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கும் தொடர்பில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு தேவை என்றால் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும்எ னவும் அதற்கு தமது அரசாங்கம் தடை விதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே குறித்த அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.