தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதிக் கொடுப்பனவுகளை வழங்கி உலகம் முழுவதும் போராட்டங்களைச் சீர்குலைக்கும் ‘சட்டரீதியான’ வேலைகளை மேற்கொள்ளும் அமைப்பான என்ற அமரிக்க அரசின் உபகூறு இலங்கைக்கு 4.5 மில்லியன் டொலர் பணத்தை வழங்கியுள்ளது. இப்பணம் நீதிபதிகளையும் நீதிமன்ற நிர்வாகக்கிகளையும் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றிற்காக வழங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் ஆசியப்பிராந்தியத்திற்கான உதவி நிர்வாகியும் அமரிக்க செனட்டருமான டெனிஸ் ரோலின்ஸ் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கமான நீதித்துறையை மேம்படுத்தும் திட்டத்திற்காக இப்பணம் வழங்க்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் உருவாவதன் முன்நிபந்தனை பணம் அல்ல. ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுவதே.
இலங்கையில் நடைபெறும் சிங்கள பௌத்தமயமாக்கல் குறித்தோ, நிலப்பறிப்புக் குறித்தோ, இனச்சுத்திகரிப்புக் குறித்தோ அமரிக்க அரசிற்கு அக்கறை இல்லை. இலங்கை அரசிடம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டால் போதுமானது.