இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க தூதரக அதிகாரி நடத்திய சந் திப்பின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.
எனினும் மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பு சரத்பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக அல்ல எனக் குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும் அவை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும் அமெரிக்க தூதரக அதிகாரியயாருவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இலங்கை இனப்பிரச்சனை குறித்த அக்கறை இன்மை காரணமாக அமரிக்கா போன்ற ஏகபோக வல்லூறுகள் பிரச்சனைகளத் தமக்குச் சார்பானதாக மாற்றியுள்ளன.
இலங்கை அரசிடமிருந்து வேண்டியதைப் பெற்றுக்கொள்ள அழுத்ததைப் பிரயோக்கும் அமரிக்க போன்ற வல்லூறுகள் உலகின் போராடும் மக்கள் அனைவருக்கும் எதிரானவையே.
இலங்கை அரசிற்கும் உலக ஏகதிபத்தியங்களுக்கும் எதிரான உலக அளவிலான ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இணைவை மக்களுக்கு அரசியல் பாடங்களாக இவ்வாறான நிகழ்வுகள் கற்றுத் தருகின்றன.
புலிகளை அழித்ததில் சரத்’தின் பங்கு சிறியதே.இதனால்தான்,சிங்கள பௌத்த பேரினவாதம் சரத்’தை சிறையில் போட்டு விட்டு,கருணா’வை அமைச்சராக வைத்துக் கொண்டிருக்கிறது.
வருடாந்த இராணுவக் கேளிக்கையில் கோத்தபாயாவே கருணா’வை அழைத்து கூத்தாடிய செய்தியின் முக்கியத்துவம் இதுதான்:
“இராணுவ முயற்சியை விட,”ஆழ ஊடுருவும் அணி”யினர் அதிக வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதே.”
“don’t make an issue saying no ,no. It is I who invited him.we have a lot of things to do in the future using him.”
“இல்லை,இல்லை என்று சொல்லி,எடுப்பு எடுக்காதீர்.அவனை,நானே அழைத்தவன்.எதிர்காலத்தில் ,அதீத விடையங்களுக்கு, அவனை நாங்கள் உபயோகப்படுத்துவோம். ” கோத்தபாய.
http://www.lankaenews.com/English/news.php?id=12359
இருப்பினும் இந்த ஒப்பீட்டை இவ்வளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை நோர்வே போன்று மூன்றாம் நாடு என்ற பாத்திரத்தை வகிக்கவில்லை. இலங்கையில் தனது தோல்விக்கான பலிக்கடாவை கண்டுபிடித்து நோர்வே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்திருக்குமென யாரும் கருத முடியாது