அமரிக்கா மறுபடி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அமரிக்க காங்கிரசின் கடன் தொகை எல்லை 14.29 ரில்லியன் டாலர்கள் என காங்கிரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த எல்லையை அமரிக்கத் திறைசேரி கடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதனை ஈடு செய்வதற்காக அமரிக்கா எண்ணை போன்ற, கனிமங்கள் போன்ற வளங்கள் காணப்படும் நாடுகள் மீது இராணுவ ஆக்கிரமைப்பை மேற்கொண்டு வருகின்றது. அமரிக்காவின் வேலையற்றோர் தொகை 13 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இது குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை பொருளாதார நெருக்கடி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திய தாக்கத்திலும் அதிகமான தாக்கதை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார். அமரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என பல பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உயிர்களை அழிப்பதன் மூலமே நெருக்கடிகளை தவிர்க்கமுடியம். சிறீலங்காவின் இந்த சித்தாந்தங்களுக்கு முண்டு கொடுத்துதவிய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அத்தகய சித்தாந்தங்களையே பெரும் பொருளாதார நெருக்கடிகளை தீர்பதற்கும் முன்னெடுக்கும். இது 2012 நிஜமாகி வருவதற்கான அறிகுறியாக கொள்ளலாம்.