அமெரிக்காவின் பொருளாதார நிலையை இனியும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என வெளிப்படையாக அறிவித்துள்ளது பெடரல் ரிசர்வ் எனப்படும் அமெரிக்க மத்திய வங்கி.
இந்த வங்கியின் சான்பிரான்சிஸ்கோ பிரிவின் தலைவர் ஜேனட் யெல்லன் கூறியுள்ளதாவது:
அமெரிக்கப் பொருளாதாரம் பெருமந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த உண்மையை இனியும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஆண்டின் மூன்று காலாண்டிலும் நாட்டின் மொத்த உற்பத்தி மோசமாகக் குறைந்துவிட்டது.
அடுத்த இரு காலாண்டுகளிலும் கூட இதே நிலை தொடர்வதற்கான அறிகுறிகள்தான் இப்போது தெரிகின்றன.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பெருமந்த நிலையை விட மோசமான சூழல் அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருப்பது உண்மைதான். இதிலிருந்து மீளும் வழிகளை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. வங்கிகளை தேசியமயமாக்குவது கூட இந்த நடவடிக்கைகயின் ஒரு பகுதிதான் என அறிவித்துள்ளது மத்திய வங்கி.
அமெரிக்கா தனது பொருளாதார நிலையை இப்படி வெளிப்படையாக அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஒரு அறிக்கை இப்படி சொல்லுகிறது;
“அமெரிக்காவுக்கு இருக்கும் கடன் பளுவும் அதற்கு இருக்கும்
ஆயுதவலிமையும் அதை காட்டுமிராண்டித்தனத்திற்கே இட்டுச்செல்லும்”