இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன்.
1950 ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம் அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம்.
-இதனைத் தெரிவித்திருப்பது டக்ளஸ் தேவானந்தா.
பாசிசப் பேரினவாத அரசுடன் இணைந்து வன்னியில் தமிழ்ப்பேசும் மக்களை அணியணியாகக் கொன்று குவித்துவிட்டு மூன்றாம் கட்டத்திற்கு வந்திருக்கும் அரசியல் வியாபாரி தேவானந்தா, 80 களில் ஆயுதம் ஏந்துவதற்கான காரணங்களை விட இன்று இன்னும் அதிகமான காரணங்கள் காணப்படுவதை வசதியாக மறந்துவிடுகிறார்.







