இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று இலங்கை செல்கிறார்.212 இல் ராஜபக்ச குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களைச் சந்திக்கும் இரண்டாவது இந்திய அரச பிரதானி இவர்.
நாளை மாலை கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில்,அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அப்துல் கலாம் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்.
திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். அதே போல கொழும்பு, மொரதுவா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.
மேலும் இலங்கை விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது 4 நாள் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை அவர் இந்தியா திரும்புவார்.