2001-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக பலியாக்கபப்ட்ட காஷ்மீர் இளைஞர் அப்சல் குருவின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கபப்ட்டுள்ள நிலையில் அவர் எப்போது வேண்டுமாலும் தூக்கில் ஏற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2
006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அப்சல் குருவை தூக்கில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் .அந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு மத்திய அர சையும், டெல்லி மாநில அரசையும் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அப்சல்குருவை தூக்கில் போட மத்திய, மாநில அரசுகள் பரிந்துறை செய்தன.ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அனுப்பிய பரிந்துரையில், “பாராளுமன்றத் துக்குள் புகுந்து தாக்கியதன் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை அப்சல் குரு செய்துள்ளார் . அவனுக்கு தூக்குத்தண்டனை நிறை வேற்றப்பட வேண்டும்” என்று கூறி இருந்தது.இதே கருத்துக்களை டெல்லி மாநில அரசும் கூறி யுள்ளது. சட்ட நிபுணர்களும் ஜனாதிபதியிடம் அப்சல் குருவுக்கு கருணை அளிக்க வேண்டியதில்லை என்று ஆலோசனை வழங்கினார்கள்.இதையடுத்து அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நிராகரித்தார். இது பற்றி மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் அப்சல்குரு தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது.