அன்பான பிரபாகரனுக்கு,
நீங்கள், கொடுமை மிக்க சித்திரவதைகளுக்கு, மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பீர்கள் என அஞ்சுகின்றேன்.
பொலீஸாரின் சித்திரவதைகளை ஒரு காலத்தில் நானும் இலங்கையில் அனுபவித்தவன். அடக்குமுறைகொண்ட கொடிய அரச கருவிகளின் தொழிற்பாடு எங்கும் ஒன்றுதான்.
இன்று காலையில் எழுந்தவுடன், உங்கள் நிலை அறிய பத்தி ரிகைகளையும் ,இணையங்களையும், முகப் புத்தகங்களையும் தேடினேன். தகவல் பெற முடியவில்லை.
உங்களின் “செருப்படியை” கொண்டாடிய முகப் புத்தக நண்பர்களின் பக்கங்களிலும் உங்கள் நிலை பற்றி அறிய முடியவில்லை. அவர்கள் அடுத்த ” பலிக்கடாவை” கொண்டாடுவதற்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.
உங்களுக்கு ஏதாவதொருவகையில் உதவ முடியுமா என எண்ணினேன். உங்களின் குடும்ப வாழ்வு பற்றி எதுவும் எனக்கு தெரியாது. எனினும், இலங்கையிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையில் நீங்கள் வாழ்வதாக அறிந்துகொண்டேன்.
பிரபாகரன், உங்களின் உணர்வுகளை – உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன்.
முன்னொரு காலத்தில், உங்களைப்போன்றுதான் நாங்களும் இருந்தோம்.எமது தலைவர்கள் சுட்டிக்காட்டிய “துரோகிகள்” எல்லோருக்கும் முதலில் முட்டைகள் அடித்தோம்.செருப்புக்கள் வீசினோம்.கற்களைக்கொண்டும், தடிகளைக்கொண்டும் மண்டைகளை உடைத்தோம்.நாங்களும் எமக்கான “துரோகிகளை” உருவாக்கிக் கொண்டோம்.
“துரோகிகள்” உயிர்வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என எமது தலைவர்கள் சூளுரைத்தார்கள். நாம் ‘தனிநபர் பயங்கரவாதத்தை’ தேர்ந்தெடுத்தோம்.
துப்பாக்கிகளுக்கு வேலை கொடுத்தோம்.பல “துரோகிகளது” வாழ்வை முடித்து வைத்தோம்.
காலமும் – அரசியல் புரிதலும் ஏற்பட்டபோது, கடந்தகால இந்த அனுபவங்களும், செயற்பாடுகளும் எமது “கோரமுகத்தை” எங்களுக்கு காட்டியது.
எம்மைப்போல்தான், ஒருகாலத்தில் தோழர் லெனின் அவர்களின் அண்ணணார் அலெக்ஸாந்தரும் இருந்தார்.தனிநபர் பயங்கரவாதமே அனைத்திற்கும் தீர்வு என நம்பினார்.ஜார் மன்னனை கொலை செய்ய முயன்று தோல்வியுற்றார்.
அப்போது, தோழர் லெனின் இவ்வாறு கூறினார்.
“…அலெக்ஸாந்தர் நீ ஜாரை வெறுத்தாய். ஜாரை கொல்ல விரும்பினாய்.அவனைக்கொன்றுவிட்டால் சமூக அமைப்பு மாறிவிடும் மக்களின் வாழ்க்கை மேம்படும் என நீ நினைத்தாய். ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாச் மாதம் முதல் தேதியன்று மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஜார் இரண்டாம் அலெக்ஸாந்தரை கொன்றார்கள். அதனால் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவிட்டதா என்ன? கொஞ்சம்கூட இல்லை.இரண்டாம் அலெக்ஸாந்தரின் இடத்தில் அமர்ந்தான் புதிய ஜார்- மூன்றாம் அலெக்ஸாந்தர்.நிலமை சீர்பட்டதா? இல்லவே இல்லை.எனவே வேறுவிதமாகப் போராடவேண்டும் என்றுபடுகிறது “…
அன்பான பிரபாகரன், வரலாறுகள் எமக்கு பலவற்றை படிப்பிக்கின்றது. நாம்தாம் அனைத்தையும் நிராகரிப்பவர்களாக மாறிக்கொண்டு வாழ்கின்றோம்.
பிரபாகரனைத் தூண்டிவிட்டவர்கள் எஸ்கேப்ட்டு!! அவருக்காக வாதாட வழக்குரைஞர்களை நியமிக்கவில்லை. அவரது கைதிற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தவில்லை. பாவம் பிரபாகரன்.
கட்டுரையாளர் அசோக் பிரபாகரன் மேல் காட்டும் பரிவும் பரிதாபமும் போற்றுதலுக்குரியது.
ஆனால் எனது ஆதங்கம் எல்லாம் அசோக் அவர்கள் பிரபாகரன் கைதாவதற்கு சில தினங்கள் முன்னர் கைதான் கோவனை அம்போவென கைவிட்டு விட்டார் என்பதே ,
பிராபகரனின் செயலை போற்றி புகழும் ஊடகங்கள் போலிசாரால் அவர் கைதான பின்னர் அவரை மறந்து விட்டதாகவும் கை விட்டதாகவும் ஒப்பாரி வைக்கும் கட்டுரையாளர் ,கோவன் விடயத்தில் தானும் அவ்வாறே நடந்து கொண்டுள்ளார் என்பதை எப்போது உணரப்போகிறார் .
பிரபாகரன் கண்ணில் வெண்ணெயும் , கோவன் கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதேனோ ?
பிரபாககனை யாரோ தூண்டி விட்டார்கள் . பாவம் அவராக இதை செய்யவில்லை என ஆதங்கப்படும் ஒருவர் கோவனை யார் தூண்டி விட்டு யாருடைய பிரசாரத்துக்காக பறையடித்தார் என எதுவும் தெரிவிக்காது கள்ள மவுனம் சாதிப்பதேன் ?
அலெக்சாண்டர் ஜாரை வெறுத்து அவரை கொலை செய்த பின் சமூக அமைப்பு மாறி விடாதென போதிப்பவர் . மது விலக்க்கு பிரசாரத்துக்கு த்மிழக முதல்வர் மீது தனிநபர் தாக்குதலை மேற்கொள்வது மட்டும் எப்படி சரியாகும் . அவரை பதவியிலிருந்து நீக்கி விட்டால் போதுமா ? இன்னொரு சாரய புரோக்கர் ஆட்சியில் வந்து அமர்ந்து விட மாட்டாரா ?
மேற்படி விடயத்தில் கோவனுக்கு புத்திமதி சொல்லி ஏன் கட்டுரை வரையவில்லை ?
கொவன் கைதான அன்று காலையில் எழுந்து அவரின் நிலை அறிய இணையங்களையும் ஊடகங்களையும் தேடவில்லையா ?
அவற்றிலிருந்து என்ன அறிந்து கொண்டீர்கள் ?
ஆகா முதலவரையே பறையடித்து பாட்டு பாடி விமர்சித்து விட்ட வீரன் என்றுதானே இருந்தது . தமிழக அராஜக முதல்வரிம் நேரடி கோபத்தின் பேரில் உத்தரவின் பேரில் போலிசாரினால் கைதான கோவனின்நிலை என்ன என்பது பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா ?
அல்லது முற்போக்குவாதிகளாக இருக்கும் தாங்கள் பிரபாகரன் எனும் தமிழ் தேசியவாதி மீது மட்டும்தான் பச்சாதாபம் கொள்வீர்களா ?
லாலா,
கோவனுக்காக நூற்றுக்கணக்கான போராட்டங்கள் இந்திய முழுவதும் நடந்தன. அவர் சார்ந்த அமைப்பு அவருக்காகப் போராடி வருகிறது. வழக்குரைஞர் குழு ஒன்றே கோவனின் விடுதலைக்காகப் போராடி வருகிறது. பிரபாகரனின் கதை அதுவல்ல. அவரைத் தூண்டிவிட்டவர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவரது ஊரிலிருந்த ஒரு வழக்குரஞர் மட்டுமே விடுதலைக்காக மனுச் செய்தார். இது தான் அசோக்கின் அக்கறையின் முதலாவது அடிப்படை.
கோவனை யாரும் தூண்டிவிடவில்லை. அவர் ஒரு அமைப்பில் இணைந்து முப்பது வருடங்களாக முழு நேர அரசியலில் ஈடுபடுகிறார்.
லாலா, நீங்கள் மனோ நிலை பாதிக்கப்பட்ட முதியவர் போல உங்கள் எழுத்துக்கள் கூறுகின்றன. தயவு செய்து மனிதனை நேசிப்பதிலிருந்து ஆரம்பியுங்கள் உங்களுக்கு பீபீ டப்லட்ஸ் கூடத் தேவையில்லை.