Sunday, March 15, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“அன்னை” சோனியாவின் கருணை பெற்ற சுரேன் சுரேந்திரன் : சத்தியமூர்த்தி

இனியொரு... by இனியொரு...
03/23/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
22
Home பிரதான பதிவுகள் | Principle posts

வன்னியில் இரத்தம் பெருக்கெடுத்து நந்திக்கடலை செந்நிறமாக்கிய அந்த நாட்களை நாம் எங்கோ பழைய கனவாகத் தொலைத்திருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது. எத்தனை முதியோர்? பச்சிழம் குழந்தைகள்?? கர்ப்பிணித் தாய்மார்???.. இரசாயனக் ஆயுதங்கள், விண்ணைப் பிழந்து பொழிந்த விமானக் குண்டுகள், கண்ணுக்கெட்டாத தொலைவிலிருந்து பொழிந்த தரைப்படை தாக்குதல்கள்.. இத்தனையும் புலிகளின் பிரசன்னத்தைக் காரணம் காட்டி மட்டுமே நடந்திருக்கிறது.

இதற்கெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து எதிர்பார்த்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. புலம் பெயர் நாடுகளில் மக்களின் கொந்தளிப்பு காற்றோடு கலந்து காணாமலாக்கப்பட்டது.

மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டனர். லட்சோப லட்சம் உலக மக்கள் ஓவென அண்ணார்ந்து பார்த்துக்க்கொண்ட்ருக்க ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்கள் மூன்று நாட்களில் துடிக்கத் துடிக்கக் இரத்தமும் சதையுமாய்ப் முள்ளிவாய்க்காலின் மண்ணில் சாகடிக்கப்பட்டனர்.
செத்துப் போனவர்களைச் சாட்சியின்றி உருக்கிவிட்டு மனிதாபிமானமாக நடந்துகொண்டதாக அத்தனை இலங்கைப் பேரினவாப் பேய்களும் பீற்றிக்கொள்கின்றன. கொன்று குவிக்கப்பட்டவர்களின் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சித்திரவதை, காணாமல் தொலைதல், கைதிகளின் அவலம் என்ற அத்தனை உரிமை மீறல்களையும் இலங்கை அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இதனையும் நடத்தி முடித்த தலைமைச் சூத்திரதாரியை கௌரவிக்க அவனின் அத்தனை இயல்புகளையும் கொண்ட இந்திய அரசு முடிவுசெய்கிறது. ஆம், காமன்வெல்த் போட்டிகளை நிறைவு செய்ய மனிதப் படுகொலையை முன்நின்று நிகழ்த்திய “மாமனிதர்” மகிந்த ராஜபக்சவை இந்திய அரசு அழைத்துக் கௌரவிக்கிறது.

காஷ்மீரிலும், நாகாலாந்திலும், மத்திய இந்தியாவிலும் எத்தனை வன்னிகள்? அத்தனை சிக்கல்களையும் நேர்கோட்டில் தீர்வுகாணச் வழிகாட்டிய மகிந்த ராஜபக்சவை தலைமை விருந்தினராக அழைத்த “அன்னை” சோனியா காந்தியின் கண்களில் தான் எத்தனை கருணை.
புலம் பெயர் நாட்டு “ஏகப் பிரதிநிதி” களில் ஒருவரான சுரேன் சுரேந்திரன் “அன்னை”யின் கண்களில் கண்ட கருணை.

உலகத் தமிழர் பேரவையின் “அதிபர்” சுரேன் ஈழத் தமிழர்கள் சார்பாகப் பேசத் தகுதி பெற்று, சோனியா காந்தியின் கருணையைப் பெற்று ஊடகங்களில் இந்திய ஆதரவுப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அழகைக் கண்டு அண்ணன் கே.பி கூடப் பரவசமடைந்துவிடுவார் போலிருக்கிறது.

போர் அல்லது இனப்படுகொலை முடிந்ததும் இந்தியாவின் துணையின்றி நாம் இத்தனை சாகசங்களையும் நிகழ்த்திக்காட்டியிருக்க முடியாது என்று மகிந்த நட்சாட்சிப் பத்திரம் வழங்குகிறார். தமிழ் நாட்டில் வரக்கூடிய எழுச்சியைக் கூட இந்திய அரசுடன் இணைந்து நாடகமாடி முறியடித்துவிட்டதாக கோதாபய ராஜப்கச முன்மொழிய இந்தியா வழி மொழிகிறது. எங்கெல்லாம் இலங்கை அரசிற்கு எதிர்ப்பு உருவாகுமோ அங்கெல்லாம் “அன்னை” சோனியாவின் கருணைக் கண்களோடு இந்திய அரசு பிரசன்னமாகி அபயமளிக்கும்.

ஒநாய்கள் போல இலங்கையை சூழ்ந்து படுகொலைகள் முடிந்து போகும் வரை காத்திருந்த இந்தியப் பெரு முதலாளிகள், வட – கிழக்கை இலங்கை அரசோடு இணைந்து சூறையாடுகிறார்கள்.

சுரேன்,

இலங்கை அரச பேரினவாதிகளுக்கு இந்தியா நண்பன், உங்களுக்கும் இந்தியா நட்பு சக்தி ஆனால் இலங்கை அரசிற்கு நீங்கள் எதிரி என்கிறீர்களே சுரேன்! மனிதன் பாதி மிருகம் பாதி விளங்க முடியா சமன்பாடாகிப் போனீர்களே!

பல தடவைகள் தான் தமிழர்களின் பக்கம் என்று சோனியா சொனதைக்கேட்டுப் புழகாங்கிதமடைந்தீர்களாமே? ஆக, மொத்த தமிழ்ச் சமூகத்தையுமா கொலைகாரர்கள் ஆக்கப்பாகிறீர்கள்?

தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதைக் கண்டு சோனியா துயர் கொண்டுள்ளதாக அழுத்திக்கூறும் நீங்கள் அவரே அந்த ஒளிப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக வேறு சாட்சியம் சொல்கிறீர்கள். அவரது அரச படைகள் தனது எல்லைக்குள்ளேயே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்ற பெண்களின் வீடியோக்களை அவர் பார்க்க எத்தனித்தால் எஞ்சியிருக்கும் “அன்னையின்” மொத்த வாழ்நாளுமே போதாதாகிவிடும்.

நீங்கள் சார்ந்த GTF உம் நீங்களும் பேசிய தமிழ்த் தேசியம் இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுத்திருக்கிறது.

நாம் எமது போராட்ட வரலாறு முழுவதும் ஆயிரமாயிரன் காட்டிக்கொடுப்புக்களைச் சந்தித்திருக்கிறோம். எமக்காகக் குரல் கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுக்கும் தமிழ் மக்களின் “ஏகப் பிரதிநிதி”யான உங்கள் குருதிபடிந்த கரங்களை இனிமேல் கொலைகரர்களோடு மட்டும் குலுக்கிக் கொள்ளுங்கள்.

பிபிசி தமிழோசைக்கு சுரேன் சுரேந்தர் வழங்கிய நேர்காணல்:

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110319_gtfworshipssonia.shtml

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

திருகோணமலையில் மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Comments 22

  1. Jeeva Prabha Karan says:
    15 years ago

    nakkura naaye ku sekkenna sivalingam enna??!!

  2. யோகா.எஸ் says:
    15 years ago

    இவரை, நீங்கள் கெளரவிக்கும் விதமாக தலைப்புச் செய்தி போட்டிருக்கிறீர்கள்!உங்கள் கருணை கூட அளவிடற்பாலது தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  3. THAMIL MARAN says:
    15 years ago

    ஆடுற மாட்டை ஆடியும் பாடுற மாட்டை பாடியும் கறக்க வேண்டும் எனும் வித்தை மட்டும்தான் நமக்கான வழி.தமிழர் சரணடைந்து நமது விடுதலை எனும் பேச்சையே மரணீக்கச் செய்து விட்டொம்.இனியும் நாம் முள்ளீவாய்க்கால் நினைவுகளீல் நின்றூ சிங்கள இனத்தை வெறூத்துக் கொண்டிருந்தால் நாம் மனிதராய்க் கூட மாற முடியாது.அன்னை சோனியாவும் பெண்தான் அவரால் நம் தமிழ்ப் பெண்களீன் துயரை அறீந்து கொள்ள முடியாது என்றால் நாம் மரத்துப் போன மனிதராய்த்தான் இருக்க முடியும்.வீணே கற்பனைக் குதிரைகளீல் வலம் வந்து தமிழருக்கு சமாதி கட்ட வேண்டாம்.சுரேந்திரன் முயற்சியே இன்றூ தமிழருக்கு நன்மை செய்யும்.கை கோர்ப்போம் கை குலுக்குவோம் காலத்தில் பயிர் செய்வோம்.

    • maniam says:
      15 years ago

      “கை கோர்ப்போம் கை குலுக்குவோம் காலத்தில் பயிர் செய்வோம்.”

      வரலாற்றிலிருந்து நாம் பாடம் படிப்பதில்லையா?
      மீண்டும் மாயைக்குள் மூழ்கவேண்டுமா?
      நாம் முதலில் ‘இந்திய மாயை’ – ‘சிறீலங்கா மாயை’ என்பவற்றிலிருந்து
      விடுபடவெண்டும். எம்மைப்போல் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினருடன்
      இணைந்து நிற்கவேண்டும்!

      • THAMIL MARAN says:
        15 years ago

        கேணல் கடாபிக்காகவும் குரல் கொடுப்பீர்கள் போல் இருக்கிறது.மணீயம் முதலில் நம் வீட்டு ஜன்னல்கள திருத்துவோம் பிறகு பக்கத்து வீட்டைப் பற்றீ யோசிப்போம்.யாரும் மாயைக்குள் இல்லை உண்மைக்குள் வசிக்கிறோம்.

    • முருகபூபதி says:
      15 years ago

      ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் பாடுகிறமாட்டை பாடித்தான் கறக்கவேண்டும் என்ற புகழ் பெற்ற தமிழ்ப்பழமொழி ஒன்று உண்டு. ஒரு மாட்டினுடைய சனநாயக உரிமைகள் குறித்தும் அடிப்படை வாழ்வுரிமை குறித்தும் முன்னொரு காலத்திலே தமிழ்பேசும் சமூகம் சிந்தித்தும் பேசியுமிருக்கிறது. இந்தப் பழமொழியை நான் மனதில் மீட்கும் பொழுதெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இவ்ளவு செளிப்பான சிந்தனைமுறையும் உறவுமுறைகளும் இருந்திருக்கின்றனவா? என ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகின்றன.

      ஒருமாட்டினுடைய அடிப்படை வாழ்வுரிமையை மதித்த ஒரு சமூத்தினது, கன்றுக்குட்டி பால்குடித்த பின்தான் மாட்டிலிருந்து தன் தேவைக்காக பால் கறந்த ஒரு சமூகத்தினது மனித விழுமியங்கள் எப்படி காணமல் போய்விட்டது? யாரால் இல்லாது ஒழிக்கப்பட்டன? என்ற கேள்விகளை நாம் திரும்பத் திரும்ப கேட்பதன் மூலம் இல்லாதொழிக்கப் பட்டவையை மீட்டெடுக்கவும் காணாமல் போனவையை கண்டடைவதற்குமான வாய்ப்புக்களை ஒருக்கால் பெற்றுத்தரலாம் என்றே நம்புகிறேன்.

      இலங்கையில் தமிழ் சிங்கள தேசியவாத அரசியலின் எழுச்சியின் பின்னால்தான் ஆடுகிறமாட்டை அடித்துக் கறக்கின்ற, பாடுகிற மாட்டை பயமுறுத்திக் கறக்கின்ற அரசியல் கலாச்சாரம் தொடங்குகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாலை உதாசினப்படுத்திவிட்டு தமிழ்மொழி பேசுபவர்களுக்கு தமிழ்ப்பாலும் சிங்களவர்களுக்கு சிங்களப்பாலும் அருந்தக் கொடுக்கப்பட்டது. பாலுக்கு பிரதியீடாக தமிழும் சிங்களமும் இரு தேசியவாதிகளினால் பரிந்துரைக்கப்பட்டன. பாலுக்கு பாலகர்கள் அழுதிட பாற்கடலை புலிகளும் சிங்கங்களும் கடைந்து கொடுத்தன. பாலுக்குப் பதிலாக விசத்தைதான் இரு தேசியவாதிகளும் அருந்தக் கொடுத்தார்கள் என்பதை இன்றுள்ள இனமுரண்பாட்டு அரசியலின் தலைகீழ் வளர்ச்சி மிகத் தெளிவாக காட்டியிருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் எல்லோரும் இன்று நன்றாகவே அனுபவித்து உணர்ந்திருக்கின்றார்கள்.

      புலிகளுக்கான புதைகுழியை தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்தே வெட்டிக் கொடுத்தார்கள். ஆடுகிறமாட்டை அடித்தும் பாடுகிறமாட்டை பயமுறுத்தியும் பால்கறந்த புலிகளை விசிலடித்தும் கைதட்டியும் காசும் கொடுத்த தமிழ் அரசியல் கலாச்சாரம் கடைசியில் பாலே குடிக்காத பலவீனமான அரசியற் குழந்தைகளை சர்வதேசமெங்கும் பிரசவித்திருக்கின்றது. ஆடுகிற மாட்டையோ பாடுகிற மாட்டையோ இவர்கள் தங்களின் வாழ்நாளில் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆடுகின்ற பாடுகின்ற மாடுகள் பற்றிய பழமொழியின் அந்த அற்புதமான எல்லாச் சாத்தியங்களையும் புலிகளும் சிங்கங்களும் நஞ்சை உண்ட பாலகரை வைத்தே இலங்கையில் இல்லாதொழித்துவிட்டன.

      • Thamilmaran says:
        15 years ago

        I like your comment   There is something in the end. I believe it’s message. Reminded me something sweet something soar lovely and truly it great    Can anyone try to write like this 

        • Soorya says:
          15 years ago

          ஆங்கிலத்தைக் கொலைசெய்யாமல் தமிழை வாழவையுங்களேன். 
          முகமூடிகளை பலர் மெதுவாக கழட்டத் தொடங்கிவிட்டார்கள். யாரின் பால் குடிக்க?

  4. Mahendra says:
    15 years ago

    ஏன் தமிழர்கள் இப்படி……. இது தமிழினத்தில் மட்டும்தானா அல்லது இத்தகய குணம்கொண்ட வேறினமும் உலகிலுண்டா?..

  5. makinthan says:
    15 years ago

    சோனியாவின் கண்களில் பேரோளியைக்கண்ட மகரிஷி எங்கள் தலைவன் சுரேன். அவரைப் போட்டு இப்படித் தாக்கலாமா தோழரே! அம்மையாரின் தலையைச் சுற்றி அவர் பெரிய ஒளிவட்டத்தையும் கண்டுள்ளார். சோனியா உண்மையாகத்தான் பேசுகிறார் என்ற கண்டுபிடிப்பினை உதிர்த்த சுரேன் , ஒருவகையில் பெரிய மனோதத்துவ கலாநிதி.
    அழித்தவனோடு கைகுலுக்கி, அவன் இன்னமும் எம்மைக் காப்பாற்றுவான் என்று கூறும் ஞானம், எம் தலைவன் சுறேனுக்குத்தான் உண்டு.
    தவளை தன் வாயால் கேட, சேடமிழுத்த 63 காங்கிரஸ் வேட்பாளர்களும், உற்சாகமாக இருக்கிறார்கள், ‘இந்து’ ராமின் புண்ணியத்தில்.
    இந்த ஆண்டிற்கான , ‘காலில் விழும் நபர்’ இற்கான நோபல் பரிசினை கொடுக்க வேண்டுமாயின், இருக்கவே இருக்கிறார் எம் தலைவர், ‘மாக்கியவல்லியின் பேரன்’ சுரேன். அந்த பரிசளிப்பு விழாவை, புது டில்லியில் வைத்தால் நல்லது.

    • Mala Radha says:
      15 years ago

      Dear Suren, You are wasting your time. You are misguiding the Tamils. She is not a women. She has no feelings. Tamil Eelam is the only permonent solution

  6. Varathan says:
    15 years ago

    People in Norteast in Sri Lanka not bother about people like சுரேன் சுரேந்தர் or Nediyavan. Forget these people. They are intersting to media but not to people in Northeast.
    The reality is Politics is not a revenge. No meaning to accuse Sonia Ghandi or Karunanithy. Because they are not commited or genuine even to to their own people. So what’s the point to expect their generosity towards people in North-East in SL. The fact is, LTTE created a golden oppurtunity for Mahinda regime. So mistake is ours not others. Others used this opprtunity to meet their long day dreams

  7. Kumar says:
    15 years ago

    அரசியலில் நிரந்தர நண்பா்கள் எதிரிகள் என்று கணிப்பிடுகின்ற ஒரே இனம் இந்த தமிழ் இனம்போல் உள்ளது. வியட்நாமில் அமெரிக்கப்படைகள் நடத்திய கொடுமைகளைப்பற்றி நம்மவா்கள் புலம்பிக்கொண்டிருக்கின்ற வேளையில் வியட்நாம் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டு உடன்படிக்கைகளையும் உதவிகளையும் பெற முயன்றுகொண்டிருக்கின்றது.

    துரோகம் செய்துவிட்டார்கள் உண்மைதான் ஆனால் சிலவேளை அதற்கு பரிகாரம் தேடலாம் அல்லவா பொறுமையாக இருந்து பார்க்கவேண்டும் இது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நமக்கும் உள்ள பிரச்சனை அல்ல நாம் தனிப்பட்ட முறையில் உன்னோடு கொபம் உன்னோடு நேசம் என்று விளையாடுவதற்கு.

    அமெரிக்கா போட்ட அணுகுண்டிற்காக உலகம் இன்றும் வருந்துகிறது அதற்காக யப்பான் அமெரிக்காவுடன் பகமையா பாராட்டுகின்றது.

  8. Bharathi says:
    15 years ago

    நீண்ட காலத்தின் பிறகு முகம் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். சுரேனுடன் இந்த அதிர்வுகள் நின்று போகவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. கே.பி இன் ஆதரவு பெற்ற தலைமை செயலகம், அனைத்துலகப் செயலகம், நாடு கடந்த தமிழீழம் 1, 2 , ஆகிய எல்லா புலி அமைப்புகள் இடையேயும் கொதிநிலை ஆரம்பமாகி விட்டதாக அறியக் கிடைக்கிறது. தலைமைச் செயலகம் மற்றைய அமைப்புகளை தடைசெய்யப் போகிறது. சரி பிழை என்ற வாதங்களுக்கு அப்பால் இதுகாலம் வரையும் குரல் கொடுத்த புலம் பெயர் மக்கள் இந்த அடிபாடுகளைக் கண்டு விரக்தி அடையக் கூடாது என்பதே எனது அவா.

  9. யோகா.எஸ் says:
    15 years ago

    ஆகா!அருமையான கண்டு பிடிப்பை குமார் சார் கண்டு பிடித்திருக்கிறார்!///அமெரிக்கா போட்ட அணுகுண்டிற்காக உலகம் இன்றும் வருந்துகிறது?!!////அமெரிக்கா அப்பப்போ தன்னுடைய கண்டு பிடிப்புகளை?! பிற நாடுகளில் தான் பரீட்சித்துப் பார்க்கும்!அவ்வாறானதே ஜப்பான் மீதான அணுக்குண்டு வீச்சு!அந்த அணுக்குண்டை ஜப்பானில் வீசியவரே இன்று வரை “தான் நிம்மதியாக இல்லை” என்று கூறியிருக்கிறார்!இலங்கை இறுதி இன அழிப்பின் அன்றாட காட்சிகளை பார்த்து “மகிழ்ந்தவர்”இந்த “இத்தாலிச் சனியாள்”(நன்றி:வேல் தர்மா) ///இது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நமக்கும் உள்ள பிரச்சினை அல்ல நாம் தனிப்பட்ட முறையில் உன்னோடு கோபம்,உன்னோடு நேசம் என்று விளையாடுவதற்கு////உண்மை தான்!நடைபெற்றது,தமிழின அழிப்பு ஆயிற்றே?அதனால் உறவை நீட்டித்து தான் தீர்வு காண வேண்டும்!அப்போது தான் மேனன்களுக்கும்,ராவ்களுக்கும் நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லவென்று “புறூப்”பண்ண முடியும்!கால் பிடித்து,வால் பிடிக்க வேண்டும்.அப்போது தான் இனப் பிரச்சினைக்கான தீர்வை இத்தாலிச் சனியாள் பெற்றுத் தருவார்!

    • Kumar says:
      15 years ago

      நான் கூற முற்படுவது என்னவென்றால் காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் அந்தக்காலத்தின் ஓட்டத்தில் நண்பா்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பா்களாகவும் மாற வாய்ப்புண்டு சிலவேளை நாளைக்கோ நாளை மறுதினமோ இந்தியா தமிழ் ஈழத்தை ஆதரித்தால் எங்கள் தாய்க்கு நன்றிகள் என்று இலட்சம் இலட்சமாக FAX கள் அனுப்புபவா்களில் நீங்களும் அடங்கலாம் ஆனால் என்போன்றவா்கள் இதற்கு அப்பாற்பட்டவா்கள்.

      ஐெயலலிதா ஒரு வார்த்தை சாதகமாக கூறியதற்காக மகிழ்ச்சியில் தம்மை மறந்து நின்றவா்கள் FAX அனுப்பி தமது மகிழ்ச்சியைத்தெரிவித்த மடயா்கள் எதிரியான பிறேமதாசா நண்பனாக மாறியவேளை மெளனமாக நின்றவா்கள், அமெரிக்கா நமது மண்ணில் வேரூண்ட முடியாது என்றவா்கள் பின்பு அவா்கள் எம்மை காக்க வரும் தேவ தூதா்கள் என்று நம்பியவா்கள் இப்படி எத்தனை. 

      யோகா நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்தியா நம்பிக்கைத்துரோகம் செய்தது உண்மை ஆனால் அதற்கு நாமும் காரணம் இதை மறுப்பவா்கள் சந்தா்ப்பவாதிகளாவா்.

      • Bharathi says:
        15 years ago

        குமார், ஒரு மாற்றமும் இல்லை. ஜப்பானில் மக்கள் விரோதிகள் அமரிக்காவுடன் இணைந்தார்கள். ஈழத்திலும் அதுதான் நடக்கிறது.

  10. யோகா.எஸ் says:
    15 years ago

    /////யோகா நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்தியா நம்பிக்கைத்துரோகம் செய்தது உண்மை ஆனால் அதற்கு நாமும் காரணம் இதை மறுப்பவா்கள் சந்தா்ப்பவாதிகளாவா்.///:விளக்குக???????/// சிலவேளை நாளைக்கோ நாளை மறுதினமோ இந்தியா தமிழ் ஈழத்தை ஆதரித்தால்??????!!!!!!!!!!!அத்தைக்கு மீசை முளைத்தால்! எங்கள் தாய்க்கு நன்றிகள் என்று இலட்சம் இலட்சமாக FAX கள் அனுப்புபவா்களில் நீங்களும் அடங்கலாம்???????

  11. Nada Manivannan says:
    15 years ago

    I am I am not commenting on the Surenthirans recent activities..However Thamils needs to be diplomatic not emotional..India did bad things so do we. If we are clear and determind, we can talk to anyone.
    That is the basis. If people uses the freedon struggle stage to promote themself, then they should be removed from the stage in a nice way.

  12. sukinthan says:
    15 years ago

    நாடு கடந்த அரசை உடைக்க ,சிறிலங்கா புலனாய்வாளர்கள் வருகிறார்களாம். இது என்ன புதுக் கதை. கே.பியின் ஆட்கள்தானே பின்னுக்கு நிண்டு இயக்கினம். பிறகேன் புலனாய்வாளர்கள். அவர்களே அந்த கடமையை செய்வார்கள். தலைமைச் செயலகத்தையும் புலிகளின் புதிய தலைவர் கே.பீ தான் இயக்குகிறார்.

  13. siva says:
    15 years ago

    முகமூடிகளை பலர் மெதுவாக கழட்டத் தொடங்கிவிட்டார்கள். யார் அந்த 7
    இராசதந்திரிமார்

  14. thurai says:
    15 years ago

    தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் பேரவை,நாடுகடந்த தமிழீழ அரசு எல்லாம் ஈழ்த்தமிழரின் அழிவில் வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்களின் பின்னணியில் நடப்பவை கோடிக்கணக்கான பணமும் உல்லாச வாழ்க்கையும்.

    இவர்கள் நேரத்திற்கு ஏற்ரவாறு யாருடனும் சேர்வார்கள், பகைப்பார்கள்,
    காலில் விழுவார்கள் எதையெல்லாம் தங்கள் சொத்துக்களை,(மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை ) காக்க பெருக்குவதற்கு செய்ய முடியுமோ
    அதையெல்லாம்செய்வார்கள். இவர்களின் வேடங்கள் உலக்மறிந்த விடயம் தான்.
    இத்தனை அழிவுகளிற்கும்காரணமாய் இருந்துவிட்டு இப்பொ சோனியா வுடன் ஒரு பகுதி,மகிந்தாவுடன் ஒரு பகுதி.ஒபாமாவுடன் ஒருபகுதி,வைக்கோவுடன் ஒருபகுதி, திருமாவளவனுடன் ஒருபகுதி கருணாநைதிதியுடன் ஒரு பகுதி,ஜெயலலிதாவுடன் ஒருபகுதி . இவர்களின் பின்னணி தமிழ் மாபியாக்களே (முன்பு புலிகள்).துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...