அன்னா ஹசாரே குழு மற்றும் யோகா குரு ராம்தேவ் மீது, இந்தூர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் இந்தர்ஜித் சிங் பாட்டியா, இதுகுறித்து இந்தூர் முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை, ஆகஸ்டு 14ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த வக்கீல் பாட்டியா கூறியதாவது, வலுவான லோக்பால் மசோதா என்ற பெயரில் பெருந்திரளான மக்களை திரட்டியதோடு, அவர்களிடமி்ருந்து பெருமளவிலான பணத்தினைப் பெற்று அதற்கான விபரங்களை தர மறுக்கின்றனர். இதன்மூலம், அக்குழு மக்களை ஏமாற்றியுள்ளது. தான் தொடுத்துள்ள வழக்கில், யோகா குரு ராம்தேவ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
ஊழல் அழிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவரும் இந்தக் குழுக்கள் மீது தொடரப்பட்டுள்ள முதலாவது வலுவான வழக்காக இது கருதப்படுகின்றது.