அன்சாரிக்குத் தூக்குத் தண்டனையை நிறுத்து வைத்தது உச்ச நீதிமன்றம்.கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க கால் சென்டரில் 2002 ஜனவரி மாதம் 22 ஆ-ம் தியதி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அப்தாப் அன்சாரி என்பவரை பிரதான குற்றவாளியாக கைது செய்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கொல்கொத்தா உயர்நீதிமன்றம் அன்சாரிக்கும் அவரது கூட்டாளி ஜமீலுதின் நசீருக்கும் தூக்குத் தண்டனை வழங்கியது. பின்னர் அதை உறுதியும் செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அன்சாரி மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி உள்ளிட்ட மூவருக்குமான கீழ் கோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.