நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சந்திக்கும் அனைத்து மனித உரிமை சிக்கல்களுக்கும் இந்தியா அரசு பதில் பெற்று தரவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்போம். இதை இந்திய தூதுவர் தமது அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் அனைத்து தமிழர் பார்வையும் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நிற்கின்றது. யுத்தம் முடிந்து மூன்று வருடம் ஆகியும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நோக்கி நகர்வதாக தெரியவில்லை.
இந்நிலையிலேயே ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தை தமிழ் மக்கள் ஆதங்கத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அரசாங்கம் சரியாக செயல்பட்டு இருக்குமானால் எமக்கு சர்வதேசம் தேவைப்பட்டு இருக்காது.
இந்நிலையில் இந்தியா இன்று மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆறுமாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து, சர்வதேசத்தை அதற்கு இணங்க செய்ய போகின்றதா என்பதை தெரிந்து கொள்ள இலங்கை தமிழ் மக்களும், நியாயத்தை வேண்டும் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.
இது உண்மையானால் அடுத்த ஆறு மாதத்திற்கு மேற்சொன்ன விவகாரங்கள் தொடர்பில் இந்தியா அரசாங்கம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சந்திக்கும் அனைத்து மனித உரிமை சிக்கல்களுக்கும் இந்தியா அரசு பதில் பெற்று தரவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்போம்.
இதை இந்திய தூதுவர் தமது அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நம் நாட்டு தலைவர்களை போர்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் எந்த ஒரு அரசியல் கட்சியும் கோரிக்கை முன்வைக்கவில்லை.
அனைத்து தமிழ் கட்சிகளும் இலங்கையில் இன உறவுகள் பாதிக்கப்பட கூடாது என்ற பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளன. போர்குற்றம் பற்றியும், மின்சார நாற்காலி பற்றியும் அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பான்மை தீவிரவாத கட்சிகள்தான் அதிகம் பேசுகிறார்கள். தமது இருப்புக்காக இந்த கோஷங்களை சிங்கள மக்கள் மத்தியில் வைத்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, வட கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைப்பு, ஆயுத குழுக்கள் கலைப்பு , திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கு நீதியும், நிவாரணமும், தடுப்பு காவல் கைதிகள் விவகாரம், தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவை முதனிலை தேவைகளாக இருக்கின்றன.
யுத்தம் முடிந்து மூன்று வருடம் ஆகியும் அரசாங்கம் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நோக்கி நகர்வதாக தெரியவில்லை.
இந்நிலையிலேயே ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தை தமிழ் மக்கள் ஆதங்கத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அரசாங்கம் சரியாக செயல்பட்டு இருக்குமானால் எமக்கு சர்வதேசம் தேவைப்பட்டு இருக்காது.
இந்நிலையில், இலங்கை தொடர்பில் தீர்மானகரமான நிலைப்பாட்டுக்கு இந்தியா வரப்போகிறதா அல்லது அடுத்த ஆறு மாதத்திற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னுமொரு அவகாசம் வழங்கப்போகின்றதா என்பதே தமிழர் மனங்களில் இன்று எழுந்துள்ள கேள்வி.
இது உண்மையானால் அடுத்த ஆறு மாதத்திற்கு மேற்சொன்ன விவகாரங்கள் தொடர்பில் இந்தியா அரசாங்கம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சந்திக்கும் அனைத்து மனித உரிமை சிக்கல்களுக்கும் இந்தியா அரசு பதில் பெற்று தரவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்போம். இதை இந்திய தூதுவர் தமது அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.
கல்லில் நார் உறிக்கப்பார்க்கிறாரா மனோ. இந்தியாவின் காலின் கீழ் சீன என்னும் வெடிகுண்டை வைத்து விட்டு நமட்டுச் சிரிப்புடன்கொலைவெறியர். இந்தியா காட்டிக் கொடுததால் தானும் கம்பி எண்ண வேண்டிய நிர்ப்பந்தம். இப்படியிருக்க தனது நாட்டு தமிழ் மீனவ உறவுகளைக் கொன்று குவிக்கும் சிங்கள கொலைவெறி ராணுவ நடவடிக்கையே தட்டிக் கேட்க முடியாத முதுகெலும்பில்லா நாடு. இவர்கள் எம் கண்ணீரில் கப்பல் விட்டுக் கொண்டிருப்பவர்கள். இவர்களை நம்பி இனியுமா ஏமாற வேண்டும்?