கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றியீட்டியதுவும், இன்னும் முடிவுறாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போராட்டங்களும், இலங்கையின் ஆகாரங்களைப் பாதித்திருக்கும் ஆசனிக் விஷம் சம்பந்தமான பிரச்சினைகளும், விலைவாசி ஏற்றங்களுக்காகக் கிளர்ந்தெழும் மக்களும், டெங்கு நோய் மரணங்களும் நோயின் பரவலும் என இலங்கை அரசுக்குப் பல தலைவலிகள் அண்மையில் தோன்றியிருக்கின்றன. அவற்றோடு தலையை பல துண்டுகளாகச் சிதறடிக்கக் கூடிய இன்னுமொரு பாரிய தலையிடிக்கு இலங்கை அரசாங்கமானது தற்பொழுது முகங் கொடுத்திருக்கிறது.
‘இலங்கையின் கொலைக் களங்கள்’ எனும் தலைப்போடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களால் தொகுக்கப்பட்ட புதிய காணொளியொன்று சேனல் 4 எனும் பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்பட்டதும், இலங்கையானது அதன் சர்வதேச விம்பம் தொடர்பான சிக்கல்களுக்கு மீண்டும் உள்ளாகியிருக்கிறது. கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டின் போது முதன்முதலாக ஒளிபரப்பப்பட்ட இக் காணொளியானது, அதன் பிறகு கடந்த ஜூன் மாதம், பதினான்காம் திகதி சேனல் 4 அலைவரிசையிலும் ஒளிபரப்பப்பட்டது. இப்பொழுது உலகம் முழுவதிலுமுள்ள பல செய்தி வலைத்தளங்களில் இவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக் காணொளியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனேகமான காட்சிகள் கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குற்றவாளிகளின் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் இக் காணொளியில் பதிவாகியிருக்கின்றன.
கிட்டத்தட்ட 48 நிமிடங்கள் ஓடக் கூடிய, யுத்தக் குற்றங்கள் நடைபெற்றதாக சாட்சிகளோடு ஒப்புவிக்கும் இந்த ஆவணப் படமானது, இலங்கையின் நற்பெயருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென்பது பார்த்தவுடனேயே தெளிவாகிறது. இக் காணொளியானது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் முடிவுகள் பற்றியும் பேசியிருப்பதோடு, இறுதி யுத்தமானது, ஒரு பொது மகனுக்குக் கூட எந்தப் பாதிப்பும் நேராத வண்ணம் செய்யப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை எனச் சொல்லிக் கொள்ளும், உலகிலேயே நேர்மையான இராணுவத்தைத் தான் கொண்டிருப்பதாக மார் தட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலையும் முன் வைத்திருக்கிறது. மனிதக் கேடயங்களாக அதிக எண்ணிக்கையான பொதுமக்களைப் பாவித்து அவர்களை இன்னல்களுக்குள்ளாக்கியமை சம்பந்தமாக இக் காணொளியானது, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இம் முறைப்பாடுகள் மூலமாக இலங்கையானது, சேனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேர்ந்திருப்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் இக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் படுகொலைக் காட்சிகள் பொய்யானவை என நிரூபிப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் தொழில்நுட்பவியலாளர்கள் பின்னால் ஓட நேர்ந்திருக்கிறது.
இலங்கை இராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படக் கூடிய சிலரால், கைகளும் கண்களும் கட்டப்பட்டு நிர்வாணமாக இருக்கும் சிலர் துப்பாக்கியால் சுடப்படுவதைப் போன்ற காட்சியைக் கொண்ட ஒரு காணொளியை இதற்கு முன்பும் சேனல் 4 அலைவரிசை ஒளிபரப்பியிருக்கிறது. இலங்கை அரசாங்கமானது, அந்தக் காணொளிக்கு பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு மட்டுமன்றி, தனது தொழில்நுட்பங்களின் மூலம் அக் காணொளி பொய்யானது என்று சாட்சிகளையும் முன் வைத்தது. எனினும், ஐக்கிய நாடுகளின் போர்க் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டனால் சர்வதேச அளவிலான தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்றைக் கொண்டு அக் காணொளி உண்மையானது என நிரூபிக்கப்பட்டது.
அக் காணொளி கிளப்பிய சர்வதேச அலைகள் அதிர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டமெனக் குறிப்பிடப்படும் இப் புதிய காணொளி வெளியாகியிருக்கிறது. இக் காணொளியை அடிப்படையாக வைத்து, இலங்கையானது தன் மேல் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காவிடின், இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு அது காரணமாக அமையுமென, ஐக்கிய நாடுகள் அமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.
தமக்கெதிரான இக் காணொளி தொடர்பாக, இலங்கை அரசாங்கமானது தனது கருத்தினை பலவிதமாகத் தெரிவித்து வருகிறது. சேனல் 4 அலைவரிசையானது விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் திட்டமிட்டுச் செய்திருக்கும் சதி இதுவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதாபய ராஜபக்ஷ சொல்லிக் கொண்டிருக்கிறார். இது முற்றுமுழுதாகப் பொய்யால் நிரம்பியிருக்கும் ஒரு காணொளி எனவும் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், யுத்த காலங்களில் இராணுவமானது எப்பொழுதுமே பொதுமக்களைக் காப்பாற்றிப் பாதுகாத்ததாகவும், இராணுவம் ஒரு போதுமே அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யவில்லையெனவும் சொல்கிறார். இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்றும் கூட அரச பாதுகாப்போடு மிகவும் நலமாக இருப்பதாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், அதற்கு உதாரணமாக கடற்புலிகளின் தலைவரான சூசையின் மனைவி, பிள்ளைகளும், அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனது மனைவி உட்பட இன்னும் 11,000 உறுப்பினர்களும் தம்மால் நன்கு பராமரிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகம், இலங்கை பாராளுமன்ற அமைச்சர் விஜேசிங்ஹவிடம் இது சம்பந்தமாகக் கருத்தை வினவிய போது அவரும் கூட பணத்துக்காக எதையும் செய்பவர்களே இக் காணொளியைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் இவ்வாறு சொன்ன போதும், இந்த ஆவணப்படமானது உலகம் முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டாயிற்று. தற்பொழுது இந்த ஆவணப்படமானது யூட்யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லையாயினும், உலகம் முழுவதிலுமுள்ள பிரபல அச்சு ஊடகங்களில் இக் காணொளி குறித்தான விமர்சனங்களும் மக்களது கருத்துக்களும் தினமும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே, இலங்கை அரசும், அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு இப்படி ஆவேசமாக மறுப்புக் கருத்துக்களை சொல்லித் திரிவதை விடவும், தாம் குற்றமற்றவர்களெனில், அதனை நிரூபிப்பதுதான் சரியானது. அத்தோடு, இக் காணொளியில் காண்பிக்கப்படும் சம்பவங்களது உண்மைத்தன்மை குறித்து நீதியானதும், முழுமையானதுமான விசாரணையொன்றை நடத்தி அதன் முடிவுகளை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டியதுவும் அரசின் கடமை.
சேனல் 4 முன்வைக்கும் குற்றச்சாட்டானது, ஒரு சிறுபான்மை இனத்துக்கு அரசினால் இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பாரிய அநீதத்தை அதன் மூலம் கண்டுகொள்ளலாம். அவ்வாறான அநீதத்தை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தால் அக் குற்றச் சாட்டிலிருந்து இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது. சேனல் 4 தொலைக்காட்சியானது தன் மீது பொய்க் குற்றச்சாட்டொன்றை முன் வைத்திருந்தால், இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரும் ஒரு காணொளியை ஒளிபரப்பச் சொல்லி பிரித்தானிய சட்டமன்றத்திடம் தைரியமாகக் கோரலாம். அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருப்பதுபோல இக் காணொளியில் காண்பிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை எனில், அதனை நிரூபிப்பதற்காக சேனல் 4 ஊடக நிறுவனத்துக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் வழக்குத் தொடர முடியும். அதைச் செய்ய ஏன் தயங்குகிறது அரசு? அவை மட்டுமே இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்கும்.
இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால், பிரித்தானியாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோ இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பது அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பினால் அல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் அப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் அந் நாடுகளிடம் மறைந்திருக்கின்றன. அந் நாடுகளிடம் எவ்வளவுதான் அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்காமல் தன் மீது சாட்டப்பட்டுள்ள இக் குற்றச் சாட்டிலிருந்து விலகிக் கொள்ள இலங்கை அரசாங்கத்தால் முடியாது. தன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றச் சாட்டுக்களிலிருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்வதைப் போல இதிலிருந்து அரசாங்கத்தால் இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இது சர்வதேசம் முன் வைத்திருக்கும் யுத்தக் குற்றச் சாட்டு.
இதற்கு முன்பும் இலங்கையில் முன்னைய ஆட்சிகளின் போது அரசாங்கத்தினாலேயே பல மனிதப் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. என்ற போதும் இதற்கு முன்பு இது போன்ற சாட்சிகளுடன் கூடிய பாரிய குற்றச்சாட்டு பிற நாடுகளிலிருந்து அரசைக் குறி வைத்து முன்வைக்கப்படவில்லை. பிற நாடுகளைத் தவிர்த்து, அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள பொதுமக்கள் கூட அரசை நோக்கி எந்தக் குற்றச் சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் படுகொலைகளுக்கும், ஆட்கடத்தல்களுக்கும் நீதமான விசாரணையொன்றை நடத்தி, நீதியை நிலைநாட்டும் விதத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லி எந்தச் சமூகமுமே கோரவில்லை. அப் படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது. தம்மை எதிர்த்து எவரும் வரமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த அரசுகள் மிகத் தைரியமாக குற்றங்களைச் செய்யத் தொடங்கின. எல்லா மரங்களையும் கொத்திச் செல்லும் மரங்கொத்திப் பறவையானது வாழை மரத்தில் கொத்தப் போய் மாட்டிக் கொள்வதைப் போல இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது இக் காணொளி விடயத்தில் மாட்டித் தவிக்கிறது.
முப்பது வருட கால யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக, நாட்டு மக்களிடம் ஒவ்வொரு முறையும் மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது, யுத்த வெற்றி தினத்தை வருடந்தோறும் கொண்டாடுகிறது. இலங்கை ஜனாதிபதி பற்றிய ஏதேனுமொரு நற்செய்தியை தினந்தோறும் ஒளிபரப்பாத அரச ஊடகங்கள் இல்லவே இல்லை. இவ்வாறாகவும், அச் செய்திகளில் யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்படவேயில்லை எனக் கூறியும் நாட்டு மக்களின் மத்தியில் தனது ஆட்சி குறித்துக் கட்டியெழுப்பியிருக்கும் பிரமாண்ட விம்பமானது, சட்டென உடைந்து நொறுங்கிவிடும் அபாயம் சேனல் 4 உடன் இக் குற்றச் சாட்டு குறித்து மோதுவதில் இருக்கின்றதென்பதை அரசாங்கம் உணர்ந்தே இருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் இலங்கைக்குள் இக் காணொளி குறித்து பொதுமக்களிடம் என்னென்ன கதைகள் பரப்பினாலும், அக் கதைகளை எடுத்துக் கொண்டு பிரித்தானியா வரை செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.
http://www.channel4.com/programmes/no-fire-zone/4od
– எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை
mrishansha@gmail.com
Some one said it right. That the Sinhaleseare Aryans with a good sense of humour. The Karma is for all the people. Then all the people are for the Rajapakse Family.1952.
But what’s your Philosophy about ?
காலம் பதில் சொல்லும் நம் தமிழ் மண் நிச்சயம் வெல்லும்
It is happening all over the world in Occupied lands and oppressed communities. It is the way, the masses try to survive, when the times are not right to rebel. But it will change, as no human born to live as Slave forever.
நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே.ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள். எனக்குத் தெரிந்த நிறைய நண்பர்கள் இப்படித் திரிந்தார்கள். இயக்கங்களின் ஆரம்ப நாட்களிலேயே இது உருவாகியிருக்கலாம். ஆனால் இது ஒரு பெரும் போக்காக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்திலேயே உருவானது.
இப்படியான வேடங்கட்டுபவர்கள் மீது புலிகளிற்கு பயங்கர ஆத்திரமிருந்தது. போராளியென்று ஒரு பொதுமகன் கூறித் திரிவதை அறிந்தாலோ அல்லது காரியம் சாதித்தாலோ அவர்கள் கடுமையான தண்டனை வழங்கத் தவறுவதேயில்லை. அனேக சந்தர்ப்பங்களில் தண்டனையை பொறுக்க முடியாமல் வேடங்கட்டியவர் உண்மையாகவே இயக்கமாகி விடுவார். அப்படியென்றால்த்தான் தண்டனையிலிருந்து தப்பலாம்.
இப்படி வேடங்கட்டியவர்கள் நிறையப் பேரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அத்தனைபேருமே ஆண்கள்தான். பெண்கள் யாரும் இப்படி வேடங்கட்டியதை நான் அறிந்திருக்கவில்லை. இதனை ஒரு விதிமீறலாகவோ கலாச்சார பாதகமென்ற அடிப்படையிலோ நான் குறிப்பிடவில்லை. அப்படியொரு தகவல் கிடைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் கூறினேன்.ஆனால் காலம் அப்படியான ஒரு குறையை எனக்கு வைக்கவில்லை. இனி விடுதலைப்புலிகளின் அத்தியாயமே இருக்காதென்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில்- புலிகள் இயக்கம் அழிந்து நான்கு வருடங்களின் பின்- பெண்னொருவர் புலி வேடமிட்டதை நான் முதல்முதலாக கண்டேன். நானறிந்தவரையில் இப்படி விடுதலைப்புலி வேடங்கட்டிய முதல் தமிழ்பெண்மணி அனந்திதான்.
ananthi1தேர்தலிற்கு சில நாட்களின் முன்னர், உரையாடலொன்றில் நண்பரொருவர் அனந்தி இயக்கமா எனக் கேட்டார். நான் மற்றது என்றேன். அவருக்கு சட்டென முகம் கறுத்துவிட்டது. இந்த சொல்லிற்கிருக்கும் பலவித அர்த்தங்கள் காரணமாக இருந்திருக்கலாம். விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் மாதிரி பாவனை பண்ணிய ஒருவர் பற்றிய பிரபலமான நகைச்சுவை துணுக்கு – ‘மற்றது’ ஆகும். ஓவ்வொரு சொல்லிற்கும் காலத்தை பொறுத்தும், சூழலைப் பொறுத்தும் அர்த்தங்கள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் முக்கியமானதும் இரகசியமானதுமான் ஓரிரு பிரிவுகளை சேர்ந்தவர்களை பொதுமக்கள் அப்படி அழைத்தனர். இதனை விளங்கப்படுத்திய பின்னர்தான் அவர் இயல்பிற்கு வந்தார்.
வடமாகாணசபை வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே இந்தக் கேள்வியை பலரிடமிருந்து எதிர்கொண்டேன். நாளாக நாளாக இந்தக் கேள்வி அதிகரித்துக் கொண்டே சென்றது. காரணம், தேர்தலை அண்மித்த நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்தான் அனந்தி தன்னை முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தார். இதற்கு யாழ்ப்பாணத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலுமுள்ள ஊடகங்கள் நிறைய உதவின.
அவர் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியல்ல என்றால், போராளிகள் அதற்கெதிராக ஏன் ஒரு சொல்தன்னும் சொல்லவில்லை என்ற கேள்வி எழலாம்.
ananthi2சமகால ஈழச்சூழலில் இப்படியான எதிர்க்குரல் சாத்தியமேயற்ற விடயம். தேர்தல் சமயத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் சிலரை கொண்டு வந்து இராணுவம் அனந்திக்கெதிரான ஆர்ப்பட்டம் ஒன்றையும் நடத்தியது. அது தன்னெழுச்சியானது அல்ல. மாறாக இப்படியான பொதுவேலைத்திட்டங்களில் தன்னெழுச்சியாக ஒன்று திரள்வதற்கான அல்லது ஒரு அமைப்பாக இணைந்து குறைந்தபட்சம் பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான வாய்ப்பு இல்லையென்பதும், அந்த மனநிலையில் முன்னாள் போராளிகள் இல்லையென்பதும் கவனிக்கத்தக்க யதார்த்தங்கள்.
ஆரம்பத்தில் அனந்தி தன்னை காணாமல் போனவர்களின் பிரதிநிதியாகத்தான் முன்னிறுத்த தொடங்கினார். அவரது கணவரான முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் யுத்தத்தின் இறுதியில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளார். விடுதலைப்புலிகளின் முதல்மட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் குடும்பமாக மரணித்து விட்டதும், சரணடைந்த காணாமல்போன இரண்டாம், மூன்றாம் மட்ட முக்கியஸ்தர்களின் மனைவியரை விட ஒப்பீட்டளவில் படித்த துடிதுடிப்பானவராக அனந்தி இருந்ததும், தொடர்ந்தும் உள்நாட்டில் தங்கியிருந்ததும் அவருக்கு பிரகாசமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தன. இவை எல்லாவற்றையும் விடவும் மிக முக்கியமான நூதனமான இன்னொரு காரணமுமுண்டு. புலிகள் அமைப்பின் முக்கியமான அல்லது ஆபத்தானவர்கள் அல்லது மீளவும் அமைப்பொன்றை ஒருங்கிணைக்கவல்லவர்கள் என அரசாங்கம் நம்பும் தளபதிகளின் உயிர்பிழைத்த மனைவியர் இராணுவப்பாதுகாப்பில் அல்லது கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த வகையானவர்களை பொது அரங்கில் தலைகாட்ட அனுமதிக்காமல் வைத்திருப்பதும், புலிகள் அமைப்பிற்குள் வெகு சாதாரணமானவர்களாகவும், ஊடகங்களுடன் தொடர்புபட்டிருந்தமையினால் இல்லாத கிறிஸ்பூதம் போல ஊதிப்பெருப்பிக்கப்பட்ட தயா, எழிலன் போன்ற அரசியல்துறை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் மனைவியர் முன்னிலைக்கு வந்தார்கள். அல்லது கருத்துச் சொல்பவர்கள் ஆனார்கள்.
யுத்தத்தில் எற்பட்ட மரணங்களும் காணாமல் போதல்களும் ஒவ்வொரு வீடுகளிலும் தீராத துயரமாகவும், வாழ்வில் மீளெழ முடியாத சறுக்கல்களாகவும் இருக்கின்றன. இந்த இழப்புக்களும் துயரங்களும் போரில் ஈடுபட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் யாருக்குமே எந்த பயனையும், முதலீட்டையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. சில தென்னிந்திய மற்றும் புலம்பெயர் தமிழர்களை தவிர. பிரபாகரனின் உறவினர்கள் தொடங்கி யுத்தத்தின் இறுதிநாளில் கட்டாயமாக படைக்கு சேர்க்கப்பட்டவனின் குடும்பம் வரை தாயகத்தில் இருக்கும் யாருக்கும் எந்த முதலீட்டையும் கொடுக்கவில்லை. துரதிஸ்டமாக இவர்கள் அத்தனை பேரின் முதலீட்டையும் அனந்தி ஒருவர் மட்டுமே அனுபவிக்கட்டும் என காலம் ஒரு விசித்திரமான கதையெழுதியிருக்கிறது. காணாமல் போன தனது கணவனை முன்வைத்து அனந்தி இரண்டு முதலீட்டை செய்திருந்தார். முதலில் அவர் சுவிற்சர்லாந்து செல்வதற்கு முயன்றார். அது வெற்றியளிக்காதென்று தெரிந்தபோது, ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டிற்காகவது சென்றுவிட முயன்றார். காணாமல் போனவர்கள் தொடர்பாக எப்பொழுதாவது அனந்திவிடும் ஓரிரண்டு அறிக்கைகள் போதிய அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. அதனால் அவரை நம்பி பெரும்தொகை பணத்தை முதலிட புலம்பெயர்ந்தவர்கள் யாரும் தயாராகவில்லை. அதன் பின்னர் அவர் சில காலம் காத்திருக்க வேண்டியதானது. மாகாணசபை தேர்தலின் வடிவத்தில் அவருக்கு காலம் கனிந்தது. கிளிநொச்சிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அனந்தியை வேட்பாளராக சிபரிசு செய்தார்.
அனந்தி மாகாணசபை உறுப்பினராகும்வரை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்த விடுதலைப்புலியாக சிறிதரனே இருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பினர், யாழ்ப்பாணத்து ஊடகக்காரர்கள், மற்றும் தமிழ்ச்சனங்களில் பெரும்பாலனவர்கள் அப்படித்தான் பார்த்தார்கள். அதற்கு காரணமுமண்டு. நாடாளுமன்ற உறுப்பினரின் மைத்துனன்தான் தளபதி தீபன். அதனால் அவரை விடுதலைப்புலிகளின் ஒரு பிரதிநிதியாக அல்லது தொடர்புபட்டவராகத்தான் சனங்கள் பார்த்தார்கள். அல்லது பார்க்க வைக்கப்பட்டார்கள். ஏனெனில் நமது தமிழ் ஊடகவியலாளர்கள் அப்படித்தான் ஒரு பிம்பத்தை கட்டியமைத்தார்கள். அல்லது அவர்கள் உண்மையிலேயெ அப்படித்தான் நினைத்தார்கள்.
இதுதான் அனந்தி விடயத்திலும் நடந்தது. ஒப்பீட்டளவில் சிறிதரனை விடவும் அனந்தி விடுதலைப்புலி ஒருவருக்கு நெருக்கமானவர். சிறிதரனிற்கு மச்சான்தான் இயக்கமென்றால், அனந்திக்கு கணவனே இயக்கம். இதனால் யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் அவரை விடுதலைப்புலி என்றுதான் நினைத்தார்கள். அதனை விட எழிலனை விடுதலைப்புலிகளின் மாபெரும் தளபதி என்றும் நினைத்தார்கள். யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்களின் கதையே இப்படியிருந்தால், புலம்பெயர் தமிழக ஊடகங்களை பற்றி கதைக்கவே வேண்டியதில்லை. ஆனந்தவிகடனில் அருள்எழிலன் கூட பிரபாகரன் ரேஞ்சில் அனந்தியை பில்டப் செய்திருந்தார்.
கூரையற்ற வீட்டிற்குள் வானத்தை பார்த்து படுத்திருந்த போது வானம்பிளந்து செல்வம் கொட்டியதை ஒத்த மாபெரும் அதிஸ்டம்தான் அனந்திக்கு அடித்தது. விடுதலைப்புலிகளை செய்திகளாக மட்டும் அறிந்த பெருந்தொகை ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் பிரதிநிதியென்று சொல்லத்தக்க உருப்படியான யாரும் வெளியில் இல்லாமை, விடுதலைப்புலிகளின் அழிப்புடனான பெரும் இனப்படுகொலை குறித்த மாறாத காயம் எல்லாம் அனந்திக்கு வாய்ப்பாகிவிட்டது.
கணிக்க முடியாத வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் காட்டாறு ஒன்றிற்குள் விழுந்த சிறு எறும்மைப்போலத்தான் அவரிருந்தார். உண்மையில் வேட்பாளரான பின்னர் எதுவும் அனந்தியின் திட்டமிடலில் நடந்ததில்லை. அந்த வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்காக வேகத்திற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருந்தார். இதனால் தாராளமாக பொய்கள் சொன்னார். இல்லாதவற்றிற்கு உரிமை கொண்டாடினார். அவரது பொய்களை தங்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு ஊடகவியலாளர்கள் அலைந்த திரிந்தார்கள்.
ஆரம்பத்தில் உதயன் பத்திரிகை அனந்தியை ஆதரிக்கவில்லை. தனது வட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து தனக்கு தெரியாமல் ஒரு வேட்பாளர் முளைத்ததை சரவணபவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அனந்தி குறித்த விளம்பரங்களை பிரசுரிக்கவே கூடாது என உதயன் நிர்வாகத்திற்கு கட்டளையிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில்த்தான் நியூ யப்னா இணையத்தளம் அனந்தியின் முதலாவது விளம்பரத்தை இலவசமாக பிரசுரித்தது. அதன் பின்னான நாட்களில் அனந்தி ஒரு இரகசிய பேச்சவார்த்தையை சரவணபவனுடன் நடத்த விரும்பினார். ஓரு ஊடகவியலாளர்தான் இருவருக்குமான தூதராக இருந்தார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். (ஆரம்பத்தில் இப்படித்தான் விக்னேஸ்வரனை உதயன் எதிர்த்தது. விக்கி முதலமைச்சர் வேட்பாளராவது உறுதியானதும், சரவணபவன் பல்டியடித்து விக்கியுடன் சமரசமொன்றிற்கு வந்தார். அதாவது விக்கியை உதயன் ஆதரிப்பதாகவும், வடமாகாணசபையின் விளம்பரங்களை உதயனிற்கு வழங்குவதாகவும்) அனந்திக்கும் சரவணபவனிற்குமிடையில் ஏதாவது உடன்பாடுகள் எட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடந்ததற்கு மறுநாளில் இருந்து அனந்தியை உதயன் கேள்விக்கிடமின்றி ஆதரித்தது.
அந்த நாட்களில் உதயனில் அனந்தியின் பேட்டி ஒன்று வெளியானது. ஓப்பீட்டளவில் பிற பேட்டிகளை விட சில வெளிப்படையான கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்ததுதான். ஆனால் அனந்தி அந்த பேட்டியில் நிறைய பொய்கள் சொல்லி அவற்றை கடந்து சென்றுவிட்டார்.அவரது கணவன் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியை திமிர்த்தனமாக கடந்து சென்றார். கட்டாய ஆட்சேர்ப்பு நடந்த நாட்களில் அதில் ஈடுபட்ட பொறுப்பாளர்களின் மனைவிமார் இவைபற்றிய கவலைகளின்றி திமர்த்தனமாக நடந்து கொண்ட எண்ணற்ற சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் அனந்தியும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் நான்கு வருடங்கள் கழிந்த பின்னரும்- தனது கணவரை இழந்த பின்னரும்- அது குறித்த சுயவிமர்சனங்கள் எதுவுமின்றி அவர் இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியானது. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு விடுதலைப்புலிகள் சொன்ன அத்தனை நியாயங்களையும் அவர் அந்த பேட்டியில் சொன்னார். உச்சபட்சமாக, ஒரு தொகுதி போராளிகள் போராடிக் கொண்டிருக்க பெரும்பகுதியானவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்றார். தனது கணவன் அப்படியான பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்றார். தமிழ்ச்செல்வன் மரணமான பின்னர்தான் தனது கணவன் ஆட்சேர்ப்புடன் தொடர்புபட்ட கொள்கை முன்னெடுப்புப் பிரிவில் இணைந்தார் என்றார். இவை அத்தனையும் பொய்கள். 1998ம் ஆண்டு எழிலனுடன் கொள்கை முன்னெடுப்புப் பிரிவில் இணைந்த போhளியொருவர் இந்தப் பேட்டியை படித்துவிட்டு திறந்த வாய் மூட முடியாமல் இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும்பகுதியை ஆட்சேர்ப்பதிலேயே எழிலன் செலவிட்டார்.
யுத்தகால நினைவுகள் குறித்து ஏற்கனவே நான் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும் எழிலன் தவிர்க்க முடியாத பாத்திரமாக உள்ளார். யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் ஒரு சில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிச்சயம் எழிலனது பெயரும் இருக்கும். சிறார்கள் பெண்கள், இளைஞர்களை கட்டாயமாக படைக்கிணைத்தது, சனங்களை தப்பிச் செல்லவிடாமல் தடுத்தது, தப்பிசெல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை என்னால் தயக்கமில்லாமல் எழிலன் மீது சுமத்த முடியும். ஏனெனில் இவற்றை நான் எனது கண்களினால் கண்டிருக்கிறேன். வலைஞர்மடம் செபமாலை மாதா ஆலயத்தை சுற்றிவளைத்து சுமார் 500 இற்கும் அதிகமான ஆண்களையும், பெண்களையும் இழுத்துச் சென்ற நடவடிக்கையை எழிலன்தான் தலைமை தாங்கினார். ஏற்கனவே ‘குற்ற உணர்வு’ என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் இது பற்றிய பதிவுகள் உள்ளன. அந்த நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேரளவில் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தப்பட்டனர்.
மாத்தளன் கப்பலடி கலவரத்தை எழிலன் தலைமையிலான அணிதான் அடக்கியது. இதில் நான்கு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நீளமான வாளொன்றுடன் எழிலன் அந்த வீதியில் திரிந்ததை கண்டிருக்கிறேன்.
வலைஞர்மடம் குருசடிச்சந்தியில் தப்பிச் செல்ல முயன்ற சனங்கள் தடுத்து நிறுத்தபட்டிருந்தார்கள். எழிலனும் தங்கனும்தான் அந்த சம்பவத்தில் பொறுப்பாக இருந்தவர்கள். கைக்குழந்தையொன்றுடன் வந்த இளம்தாயொருவர் தனது குழந்தைக்கு பால்மா இல்லையென்றும், மக்களை இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் தடுக்கலாமா என்றும் ஆவேசமாக நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது எழிலன் தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை உருவி அந்தத் தாயின் நடுநெற்றியில் இரண்டு சூடு வைத்தார். இவையெல்லாம் மேலோட்டமான உதாரணங்கள். முழுமையான விசாரணைப்பட்டியல் அல்ல. ஆனால் அனந்தி பொய் கூறுகிறார் என்பதற்கான உதாரணங்களாகத்தான் சுட்டிக்காட்டினேன்.
இதேபோலத்தான் அனந்தி தேர்தலின் பின்பாக வெளியிட்ட இரண்டு அறிக்கைகளையும் கவனித்தவர்களிற்கு இன்னொரு விடயம் புலப்ப
ஐயா ராகவன் நீர் புலிகளை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஏன் கூறுகிறிர்கள் புலிகள் தப்பு செய்து இருக்கலம் ஆனால் அதற்காக இல்லாதவற்றை கூறுவதில் உமக்கு என்ன லாபம் விடுதலைப் புலிகள் மட்டுமில்லாவிட்டால் நீர் இன்று உயிருடன் இருப்பதே சந்தேகம் புலிகள் யார் தமிழர்கள் நீர் யார் சிங்களவரா உமக்கு சினிமா படம் பார்க்க தடை போட்டது யார் வன்னியில் விடுதலைப் புலிகளின் எத்தனை திரையரங்கள் இருந்தன தெரியுமா உமக்கு சிங்களவனுடன் வாழ்ந்து பழகிய உங்களுக்கு தமிழனின் இதயத்தின் வலி என்ன வென்று புரியும்!
If Ragavan revelas his identity someone can verify the truth. May be he will come forward and do it like a gentleman.
புலி முகப் பெண்- From யோ.கர்ணன்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று – கண்ணதாசன்
ஆம்!..உண்மைதான்!.. மனிதன் தன் வாழ்வு இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கும் என்றுதான் எண்ணுகிறான்.. தன் மரணத்தை எண்ணிப் பார்த்திராத அந்த மனிதன்.. அவன் எதிர்பார்த்திராத ஒரு சமயத்தில்.. மரணம் ஒரு திருடனைப் போல் அவன் வாழ்வில் நுழைந்து அவனை காவிச் சென்று விடும் என்பதை அவன் என்றுமே எண்ணிப் பார்ப்பதில்லை!..
தனது மரணம் இப்படித்தான் நடைபெறப் போகிறது என்பதை ஒரு மனிதன் முன் கூட்டியே அறிந்திருந்தால்.. அவன் நிட்சயம் தவறான பாதையொன்றில் தன் வாழ்க்கையை அமைக்க மாட்டான்!.. தன் வாழ்நாளில் பிறருக்கு தீங்கிழைக்க மனதாலும் நினைக்க மாட்டான்!.. மண்.. பெண்.. பொன் ஆசைகளுக்கு அடிமையாக மாட்டான்!.. பெயரையும் புகழையும் சம்பாதிக்க நினைக்க மாட்டான்!…
மாறாக தான் உயிருடன் உள்ளவரை மனித குலத்திற்கு தன்னாலியன்ற நன்மைகளை செய்து.. மனிதர்களை பிளவு படுத்தும் மனக் குரோதத்தையும்.. இன பேதத்தையும் கூடவே மத பேதத்தையும் பெரிது படுத்தாமல்.. அனைவரையும் சக மனிதர்களாக பாவித்து.. அவர்களை அரவணைத்து.. அவர்களுடன் அன்புடன் பழகி.. அவர்களை ஒன்றிணைத்து தன் இறுதி மூச்சுவரை ஒரு மாசற்ற உண்மையான மனிதனாக வாழ முயற்சிப்பான் அல்லவா!!..
ஆனால் என்ன செய்வது .. தனக்காக மரணம் என்ற ஒன்று காத்திருக்கிறது.. அது எந்த நிமிடத்திலும் நிகழலாம் என்பதை எண்ணிப் பார்க்காத அந்த மனிதன்.. தான் இந்த உலகில் நிரந்தரமாக இருக்க வந்தவன் என்ற எண்ணத்தில்.. தன் சொந்த சுபாவத்தால் தன்னையும் கெடுத்து.. பிறரையும் கெடுத்து.. ஒரு தன்னலவாதியாக வாழ பழகி விட்டானே!
ஆம்.. அன்று வன்னிப் பிரதேசத்தில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த பிரபாகரன்.. இப்படியெல்லாம் தான் எதிர்பார்த்திராத சமயமொன்றில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மரணம் என்ற ஒன்று நேரிடப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால் அவரது வாழ்க்கைப் பாதை திசை திருப்பப் பட்டிருக்கும்.. அவருடைய போராட்டம் ஆரோக்கியமான வழியொன்றில் நகர்த்தப்பட்டிருக்கும்.. தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிரபாகரன்.. அதேபோல் பிறரது குடும்பங்களுக்கும் ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயற்சித்திருப்பார்!..
ஆனால் தனது வாழ்வு இப்படித்தான் என்றும் வழமுடன் நிலைத்திருக்கும் என்று எண்ணிய பிரபாகரன் தனது மனைவி மதிவதனியை விதம் விதமாக பொன்னாலும் பொருளாலும் பட்டுச் சேலைகளாலும் அலங்கரித்துப் பார்த்த அதே சமயத்தில்.. அவர் ஆட்சி செலுத்திய வன்னிப் பிரதேசத்திலோ எதனையோ பெண்கள் மாற்றிக் கட்டுவதற்கு கூட மாற்றுத் துணியில்லாமல் அவதிப்பட்டதை கண்டு கொண்டதில்லை!..
தனது மகன் சார்ள்ஸ் அன்ரனியும் மகள் துவாராகாவையும் வெளி நாட்டிற்கு பட்டப் படிப்புக்காக அனுப்பி வைத்த அவரால்… தன்னினத்தின் மற்றைய குழ்ந்தைகளின் கல்வியை பற்றி.. அவர்கள் எதிர்காலத்தை பற்றி சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை!..
வன்னிப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருந்த மாணவர்களையும் மாணவிகளையும் அவர்களது கல்வியை துறக்க வைத்து .. தனது படையணிகளில் பலோத்காரமாக இணைய வைத்து.. கொடும் போருக்கு அனுப்பி வைத்த போதெல்லாம்.. அவர்களும் தன்னுடைய பிள்ளைகளைப்போல் ஒரு பெற்றோர் பெற்ற பிள்ளைகள்தானே என்று எண்ணிப் பார்த்ததில்லை!….
தன்னுடைய கடைசி மகன் பாலச்சந்திரனுக்கு கூட வீட்டில் நல்ல உணவும்.. விளையாடுவதற்கு வெளிநாட்டு விளையாட்டுப் பொருட்களும்.. நீந்துவதற்கு நீச்சல் தடாகமும் அமைத்துக் கொடுத்த பிரபாகரன்.. வன்னிப் பிரதேசத்தில் சுமார் 60 வீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் குடிப்பதற்கு பாலோ.. உண்பதற்கு சீரான உண்வோ இல்லாமல் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்ற யூனிசெஃப்வின் அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டதில்லை!..
அந்த குழந்தைகளின் பசிக்கும் பட்டினிக்கும் போசாகின்மைக்கும் காரணம் மகிந்தா உணவுப் பொருட்களை வன்னிக்கு தடை செய்ததுதான்.. என்று அந்த பழியை மகிந்தாவின் தலை மீது சுமத்தி விட்டு அதிலிருந்து தந்திரமாக விலகிக் கொண்டார் … இந்த காலப் பகுதியில் பல கோடி டாலர் பெறுமதியான ஆயுதங்களை உலகின் பல பாகங்களில் இருந்து வன்னிக்குள் கடத்திவர வழி தெரிந்த அவருக்கு.. அந்த குழந்தைகளுக்கு தேவையான போசாக்கான உணவுகளை வன்னிக்குள் கடத்திவர வழி தெரியாமல் போயிருக்குமா என்ன?..
பிரபாகரன் காலத்தில் வன்னியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் மாடி வீடு கட்டி வழமுடன் வாழ்ந்தவர்கள் அல்ல.. அவர்களில் பெரும்போலோர் விவசாயிகளாகவும் அன்றாட கூலி வேலை செய்து பிழைபவர்ககளுமாகவே வாழ்ந்து வந்தார்கள்.. அவர்களிடமே ஐயாயிரம் தா.. பத்தாயிரம் தா.. இல்லையேல் உன் பிள்ளைகளில் ஒன்றை தா.. என்று நிபந்தனை போட்டவர்தான் அவர்.. வெளி நாடுகளில் இருந்து கோடிகோடியாக புலிப்பினாமிகள் பணம் திரட்டி அனுப்பிய போதும் போதவில்லை அவருக்கு..அந்த பணத்தை கூட செலுத்த வழியில்லாத எத்தனையோ ஏழைகள் தாங்கள் பெற்று வழர்ந்த தங்கள் பிள்ளைச் செல்வங்களை அவர் போர் வெறிக்கு தாரை வார்ப்பதை தவிர வேறு வழியொன்றும் இருக்கவில்லை அவர்களுக்கு….
அந்த பிள்ளைகளில் பலர் பெண் பிள்ளைகள் என்றும் பாராமல்.. தனது அடியாட்கள் மூலம் பலோத்தாகரமாக இழுத்து வரும்படி கட்டளையிட்ட போதெல்லாம்.. தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே.. அவளுக்கு ஒரு இப்படி ஒரு அவல நிலை ஏற்ட்டால் தனது மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை அவர் சிறிதளவேனும் எண்ணிப் எண்ணிப் பார்த்ததில்லை..
அவருக்கு மட்டும் மனச் சாட்சி என்று ஒன்று இருந்திருந்தால்..தனது மகள் துவாராகாவின் கழுத்தில் தங்கச் சங்கலி போட்டு.. கைகளில் பூச்செண்டு கொடுத்து அழகு பார்த்த அவர்.. அந்த அப்பாவி எழை மக்களின் மகள்களின் கழுத்தில் சயனைட் குப்பி மாலை அணிவித்து கைகளில் துப்பாக்கி கொடுத்து அழகு பார்த்திருக்க மாட்டார்!..
அவர் மட்டும் அன்று மனது வைத்திருந்தால்.. மனிதாபிமானத்துடன் செயல் பட்டிருந்தால் இன்று தமிழர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது எனபது யதார்த்தமான உண்மையாகும்..
எனது தொடர்கட்டுரையின் இடைச் செருகலின் இறுதிப் பகுதி இது.. இந்த மூன்று பாகங்களிலும் கடந்த காலத்தில் இலங்கையில் தமிழீழம் அமைக்க புறப்பட்ட பிரபாகரனின் உண்மை முகத்தை அறிந்திராத தமிழக இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர் சமூகத்தினர்.. அவரைப் பற்றி சரிவர அறிந்திராத.. அவர்களுக்கு மறைக்கப்பட்ட பல உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன….
அன்புமிக்க தமிழக இளைஞர்களே!..
நீங்கள் நினைப்பதுபோல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழமொன்றே தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு என்று அன்று கற்பனைகூட செய்து பார்த்திராத.. முன்னொரு காலப் பகுதி ஒன்றில்.. உங்கள் தமிழக தன்னலவாத அரசியல்வாதிகள்போல.. எங்கள் தன்னலவாத தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி தங்களுக்கு ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டதுதான் இந்த தமிழீழ கோரிக்கை..
நாளடைவில் அது பிரபாகரனுக்கு கைமாறி.. அவரது இரும்புப் பிடியில் சிக்கி தவித்து சீரளிந்தது அது.. அதன் பலனாக எங்கள் இலங்கை தமிழர் சமுதாயம் தங்கள் இல்லிடங்களையும்.. உடமைகளையும் கூடவே தங்கள் உற்றார் உறவினர்களையும் பிள்ளை செல்வங்களையும் கண்முன்னே பறி கொடுத்தார்கள் .. இன்று முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இலங்கை அதிபர் மகிந்தாவே காரணம் என்று கூக்குரலிடும் நீங்கள் ஒன்றை மட்டும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. அதாவது இந்த பேரழிவுக்கு வித்திட்டு அதை வழர்த்தெடுக்க முக்கிய காரண கர்த்தாவாக செயல்பட்டவர் இன்று அறிந்தோ அறியாமலோ நீங்கள் பின்பற்றும் இந்த பிரபாகரன் என்பவர்தான்!..
தமிழ் சிங்கள விவசாயிகளுக்கு நீர் வழங்கி வந்த மாவிலாறு குளத்தை பூட்டி அதன் மூலம் அதை எப்படியாவது திறக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமைக்கு மகிந்தாவின் அரசாங்கத்தை தள்ளிச் சென்று.. அதன் மூலம் ஓய்ந்து போயிருந்த போரை முதன் முதலில் வலுக்கட்டாயமாக ஆரம்பித்து வைத்தரும் பிரபாகரன் அவர்களே!..
இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் அந்த குளத்தை திறக்க வைக்க இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சி வெற்றியளித்தது.. புலிகளையும் அந்த இராணுவ நடவடிக்கை பின்வாங்க வைத்தது.. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறிய இலங்கை இராணுவம்.. விடுதலை புலிகளை எப்படியாவது சரணடைய வைத்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது..
இந்த காலகட்டத்தில் புலிகள் தோல்வியை சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள்.. இந்த சமயத்தில் புலிகளை சரணையும்படி இலங்கை இராணுவம் வேண்டுகோள் விடுத்தது.. அந்த வேண்டுகோளை ஏற்று புலிகள் சரணடைந்திருந்தால் பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. ஆனால் அதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை.. அவருடைய அடுத்த திட்டம் இந்த போரில் சர்வதேசத்தை தலையிட வைத்து எப்படியாவது தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதாக அமைந்திருந்தது..
அதற்காக அவர் மனித நேயமற்ற ஒரு வழியை கையாண்டார்.. அதாவது பொது மக்கள் மத்தியில் இருந்து இலங்கை இராணுவத்தை தாக்குவதன் மூலம்.. இலங்கை இராணுவம் தனது தாக்குதலை பொது மக்களையும் நோக்கி நடத்தும் அப்போது அந்த போர் நிறுத்தப்படும்.. இதனால் தாங்கள் தப்புவதற்கு ஒரு வழி பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.. ஆகவே இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுடன் பொது மக்களாக கலந்திருந்து இலங்கை இராணுவத்தை நோக்கி தாக்குதலை நடந்தியது பிரபாகரனின் புலிக் கூட்டம்… இதை நன்கறிந்திருந்த சர்வ தேசமும் மௌனம் சாதித்தது….
ஏற்கெனவே சிங்கள பொது மக்களையும் தமிழர்களின் எதிரிகளாக சித்தரித்து அவர் பிரச்சாரம் செய்து.. அந்த பிரச்சாரத்திற்கு வலுவேற்ற தென்னிலங்கை சிங்கள பொது மக்கள் மத்தியில் பல குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தார் பிரபாகரன்.. இந்த தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான சிங்கள பொதுமக்கள் பரிதாபமாக செத்து மடிந்திருந்தார்கள்..
ஆகவே தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினரை இழந்த ஒவ்வொரு சிங்கள தாயும் புலிகளை பழிவாங்க இன்னொரு உறுபினரை இந்த போருக்கு அனுப்பி வைத்திருந்தாள்.. அதனால் இலங்கை இராணுவம் ஒரு புதிய வலுவையும் பெற்றிருந்தது. புலிகளை எப்படியாவது அழித்தொழிப்பது என்ற முழு மூச்சுடன் முன்னேறிய அந்த இராணுவம்.. புலிகள் பதுங்கியிருந்த இடங்களை நோக்கி முழு மூச்சுடன் தங்கள் தாக்குதலை நடத்தியது.. தற்போது அனைத்தையும் இழந்து..செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில்.. தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு.. தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக சரணடைய முற்பட்ட புலிகள்.. இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
இப்போது சொல்லுங்கள் முள்ளிவாய்க்கால் மனித படுகொலைகளுக்கு மகிந்தா மட்டுமா குற்றம் சாட்டப்பட வேண்டியவர்?.. இதற்குரிய முக்கிய காரணகர்த்தாவான பிரபாகரனை தூயவராக சித்தரிப்பதில் எந்த வகையில் நியாயம் இருக்கிறது?..
உண்மையில் இலங்கையில் புலிகளின் தலைமையில் அமைக்கப்பட இருந்த தமிழீழம் இலங்கை தமிழர்களுக்காகவா?.. இல்லை!.. இல்லவே இல்லை!! தமிழர்களுக்கு அந்த தமிழீழம் எந்த வகையிலும் ஒரு விடுதலையை பெற்றுத் தந்திருக்க மாட்டாது!.. அது புலிகளுக்காக.. பிரபாகரனையும் அவரது வெளிநாட்டு துதிபாடிகளையும் ஒரு பகட்டான வாழ்க்கையின் வாழ வைப்பதற்காக!..
புலிகளின் காலத்தின் இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள் உங்களுக்கு தெரியுமா?..தொலைக் காட்சியில் சினிமா படம் பார்ப்பது முதல் வானொலியில் சினிமா பாடல் கேட்பது வரை பிரபாகரன் வடக்கு கிழக்கை தனது அதிகாரத்தினால் அடக்கியாண்ட காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தன.. அவரது கட்டளையை மீறி எவராது வீடுகளில் படம் பார்த்தாலோ அல்லது அல்லது வானொலியில் சினிமா பாடல் கேட்டாலோ அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.. இப்படி சாதாரண மனித அபிலாசைகளுக்கே தடை விதித்த பிரபாகரனின் தமிழீழத்தில் எப்படி இலங்கை தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்க முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்!..
அதனால்தான் சுமார் நான்கு வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்ற அடக்க முரையாளர் கொலை செய்யப்பட்டபோது இலங்கை தமிழர்கள் எவருமே அவருக்கு அனுதாபம் தெரிவிக்க முன்வரவில்லை…. ஏன் இன்றுவரை இந்தியாவில் நீங்கள் நடத்தும் உங்கள் போராட்டம் எதற்குமே தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லையே!.. ஏன் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு போஸ்டர்கூட யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ ஒட்டப்படவில்லை!..
ஆம் இவைகள் ஒன்றுமே எங்களுக்குத் தேவையில்லாத ஒன்றுதான் இலங்கை தமிழர்கள் கருதுகிறார்கள்.. அதுமட்டுமல்ல நீங்கள் தமிழகத்தின் நடத்தும் போராட்டங்களும்.. அங்கு வருகை தரும் அப்பாவி சிங்கள மக்கள் மேல் நீங்கள் நடத்தும் தாக்குதல்களும்.. மீண்டும் தங்கள் வாழ்க்கையை ஒரு மரணப் பள்ளத்தாக்கிற்குள் தள்ளிச் சென்று விடுமோ என்று அஞ்சுகிறார்கள்!..
அன்புமிக்க தமிழக இளைஞர்களே!..
மாணவர்களே!.. இன்று நீங்கள் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்காக கண்ணீர் வடித்து அந்த சிறுவனுக்கு சிலை வைக்கும் முயற்சிவரை முன்றேறியிருக்கிறீர்கள்.. அன்றொருநாள் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் ஒன்று கலந்து வாழ்ந்து வந்த முஸ்லீம்களையும் தமிழர்களின் எதிரிகளாக சித்தரித்த பிரபாகரன் அவர்களை உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட போது எத்தனையோ பாலச்சந்திரன்கள் கதறியழுதபடி தங்கள் பெற்றோருடன் வெளியேறிச் சென்றார்கள் தெரியுமா?..
அது மட்டுமல்ல இந்த கட்டுரையின் தலைப்பாக இணைக்கப்பட்டிருக்கும் படத்தை பாருங்கள்.. வன்னியில் பாடசாலை மாணவிகளும் குடும்பப் பெண்களும் புலிகளால் பலோத்காரமாக இராணுவ பயற்சியளிக்கப்பட்டபோது பாலச்சந்திரனைவிட பல வயது குறைந்த இந்த நான்கு வயது சிறுவனுக்கும் அவர்களுடன் சேர்த்து பயிற்சியளிக்கப்பட்டது.. மண் அளைந்து விளையாடும் அந்த சிறுவனின் சிந்தனையில் போர் வெறியை தூண்டி விடும் இந்த பயிற்சி எத்தனை பரிதாபமானது.. எத்தனை கொடுமையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்!.. இந்த வகையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் எவ்வளவோ கொடுத்து வைத்தவன் அல்லவா!..
கிழக்கிலங்கையில் தமிழர்களுடன் புட்டும் தேங்காய் பூவும்போல் வாழ்ந்த முஸ்லீம்களை அங்கும் தமிழர்களின் எதிரிகளாக்க அவர்கள் மசூதிகளில் தொழுகை நேரத்தில் நுழைந்து புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்கள் மத்தியில் எத்தனையோ பாலச்சந்திரன்களும் இருந்தார்களே!.. அவர்கள் உங்கள் கண்களில் பட்டதில்லையா? அவர்கள் மதத்தால் வேறுபட்டவர்களாக் இருந்த போதியிலும் அவர்கள் தாய் மொழியும் எங்கள் தமிழ்தானே என்று நீங்கள் சிந்தித்து பார்த்ததில்லையா?..
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளை கூட சுவரில் மோதி புலிகள் அன்று நடத்திய கொடுமை உங்களுக
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளை கூட சுவரில் மோதி புலிகள் அன்று நடத்திய கொடுமை உங்களுக்கு தெரியுமா?.. பிரபாகரனின் ஆசியுடன் நடத்தப்பட்ட இந்த படுகொலைகளுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருக்கின்றன.. அவற்றில் ஒரு ஆதாராமாக இந்த வீடியோ லிங்கை இணைத்திருக்கிறேன்.. இதை பார்த்தாவது உங்கள் சிந்தனைகளை திசை திருப்பிக் கொள்ளுங்கள்!….
சினிமாக்காரர் ச்ச்சீமான் தனது சினிமாதனத்திகே உரிய கற்பனை வளத்துடன் பிரபாகரனை உங்கள் முன் சுபாஸ் சந்திபோஷின் லெவலுக்கு சித்தரித்து உங்கள் சிந்தனைகளை மழுங்கடித்திருக்கிறார்.. பிரபாகரனின் உண்மை முகம் அப்படிப்பட்டத்தல்ல.. அன்று இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி அகிம்சை போராட்ட வழியிலும் சுபாஸ் சந்திரபோஷ் ஆயுதப் போராட்ட வழியிலும் முன்னெடுத்தார்கள்.. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்ததில்லை.. பகைத்துக் கொண்டதில்லை..
சுதந்திர வேட்கை கொண்ட அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள என்றுமே முயற்சித்ததில்லை.. மாறாக இருவருமே தங்கள் தங்கள் வழிகளில் அந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.. இந்த காலகட்டத்தில் சுபாஸ் சந்திரபோஷிற்கு “நேதாஜி” என்ற பட்டப் பெயரை வழங்கியவர் சாட்சாத் மகாத்மா காந்தி அவர்கள!.. அதே போல சுபாஷின் போராட்டம் தோல்வியை சந்தித்த சமயத்தில் சிங்கப்பூரில் வைத்து மகாத்மா காந்திக்கு “தேசபிதா” என்று பட்டமளித்து அவரை கௌரவித்தவரும் சாட்சாத் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களே!..
ஆனால் எமது இலங்கை தீவில் தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்காக உண்மையான் விடுதலை வேட்கையுடன் புறப்பட்ட மற்றைய இயக்கங்களை.. தனது தலைமை பதவி வெறிக்காக அழித்து.. தமிழீழ போராட்டத்தை வலுவிழக்கச் செய்து.. முடிவில் அதை இல்லைதொழிக்க காரணமாக இருந்தவர் நீங்கள் போற்றும் இந்த பிரபாகரன் என்பவர்தான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!…
பிரபாகரன் வாழ்கை முழுவதும் பயத்திலேயே வாழ்ந்தவர். அவரை யாராவது கொலை செய்டுவிடுவார்கள் என்று எப்போதும் பயந்துகொண்டிருந்ததே பல அழிப்புகளுக்குக் காரணம். எனது அண்ணன் சிதம்பராக் கல்லூரியில் அவருடன் படித்தவர் அந்தக் காலத்தில் இருந்தே அவருக்கு அந்தப் பயம் இருந்தது. கல்வியன் காடு செட்டியுடன் கூட்டுவைத்து துரையப்பாவை சுட்டது அந்தப் பயத்தை அதிகரித்தது. எவளவு பேரை கொலை செய்திருக்கிறார். எத்தினை பேர் புலிகளின் சிறையில் இருந்திருக்கிறார்கள். எவ்வளோ சித்திரவதைகள். கடைசியில் மக்களை பணயமாக வைத்து விமானம் குண்டுபோட மண்மூட்டை போல மக்களைப் பயன்படுத்தினார்கள். இப்பிடியெல்லாம் நடக்க கே.பி இன் சொல்லைக் கேட்டு தன்னைக் காப்பாத்த சரணைடைந்து மாண்டு போனார். பிரபாகரனை கொழும்புக்கு கூட்டிவந்து சார்ள் அன்டனியை சரணடையச் சொன்னார்கள். அவர் படத்தை எடுத்து பிரபாகரனுக்கு காட்டினார்கள். பிரபாகரனை கொண்டு பாலச்சந்திரனை சரணடைய வைத்தார்கள். அவர் படத்தை எடுத்து பிரபாகரனுக்கு காட்டினார்கள். இரண்டு படத்தையும் பார்த்த பிரபாகரன் எல்லா போராளிகளையும் சரண்டைய ஓடர் குடுத்தார். நானும் சரண்டைந்தேன். முழுப் பகுதியையும் பிடித்து முடித்ததும் பிரபாகரனையும் முடித்தார்கள். கொழும்பில் வைத்து சிங்கள ராணுவம் எனக்கு கைதொலைபேசியில் சரணடைந்த பிறகு டக்ளஸ் சித்திரவதை செய்யும் படத்தை காட்டி எனக்கு அடித்தார்.தொடரும்.
Sounds like Kalyana Parisu Danal Thangavelu !
உமக்கு மூளை சுகமில்லை. ஏதோ ஒண்டை காட்டி, அல்லது குடுத்து பிழைக்கும் தன்மைக்கும் மூளை வேண்டும். உமக்கு அது சரிவராது. நீர் புலிகளின் கொள்கை ரீதியான எதிரி அல்ல,
robert raja (mathil) என்பவரைச் சொன்னன். புலிகளும் உம்மை போன்றோரை கூத்தாடிகளாக வைத்திருந்து ஏனையோரை எதிரிகளாக பார்த்ததால் தான் அழிந்து போனார்கள்
பின்னூட்டம் என்னுடையது அல்ல போ(ப)க்கிரிகளின் இணையம் ஒன்றில் புலிகளின் புண்ணியத்தில் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து இன்று அரசாங்கத்துடன் ஒட்டு உண்ணியாக வாழும் “யோ.கர்ணன்” என்பவருடையது இவரை அம்பலப் படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.
எனவே ஓரளவு சம்மந்தமுடைய ரிஷான் ஷெரீப் இன் கட்டுரையில் பின்நூட்டமாக்கினேன்.
புலிகள் மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் அத்து மீறல் களை கண்டிக்கும் பலர் அதற் குரிய யோக்கியதை அற்றவர்கள்.
குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக விசத்தை கக்கும் எஸ்.எம்.எம்.பஷீர் முஸ்லிம் பள்ளிவாசல்கள் ஊடாக நிறுவன மயப் படுத்திய இன அழிப்பு படையான முஸ்லிம் ஊர்காவல் படைகளின் கூட்டு இனப் படுகொலையை மறைத்து தமிழர்களை முஸ்லிம் இனத்தின் பொதுஎதிரியாக பார்க்கும் மனோ பக்குவத்தை முஸ்லிகள் மத்தியில் விதைக்கும் இவர்களும், கேரளாவில் இருந்து சின்ன மேளங்களாக வந்து யாழ்ப்பாணத்து கோவில் களில் கூத்தாடிய பரம்பரையைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் D.P.S ஜேஜராஜ் போன்றோர் இன்னும் பலர், தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய கூட்டு இனப் படுகொலையை மறைக்க போடும் கதையளப்புகள் மனித சிந்தனை ஓட்டங்களில் வரும் பிறழ்வுகளை காட்ட வல்லன.
நான் வேறு ஒருவரின் கட்டுரையை பின்னூட்டமாக போட்டது விமர்சன நோக்கோடு என்பதை ஏனையோருக்கு சொல்ல விரும்புகிறேன்.
புலிகள் போராடியதால் தான் நான் சிங்களவர்களினால் கொலை செய்யப் படாது உயிர் வாழ்வதாக குறிப்பிடப் படுவது புலிகளின் போராட்ட வடிவம் என்ன என்பதை அறிந்தவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். புலிகள் நினைத்து இருந்ததால் இல்லை கட்டாயம் நினைத்து இருக்க வேண்டியது இலங்கை அரசு வன்னியில் செய்யப் போகும் ஏன் செய்ய திட்ட மிட்டிருந்த கூட்டு இனப் படுகொலையை புலிகள் பகுதியளவில் குறைத்து இருக்க முடியும் என்பதில் என்னிடம் கனதியான கவலையும் கண்டனமும் உண்டு. அதே நேரம் எமது சக இனமான முஸ்லிம் மக்கள் வெளி ஏற்றம் என்பதும் இன அழிப்பே என்பதிலும் நாம் உடன் பட்டே ஆக வேண்டும்.
ஆனால் இந்த ஒப்புதலை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப் பாரிய மனித பேரவலமான இனப் படுகொலையை மூடி மறைக்க பயன் படுத்துவதை அனுமதிக்க முடியாது.