தே.மு.தி.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), அருண் பாண்டியன் (பேராவூரணி) தமிழ் அழகன் (திட்டக்குடி) மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்) ஆகிய 4 பேர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தொகுதி பிரச்சினைகள் குறித்து மனு கொடுத்தனர்.
தமிழக சட்டசபை வைரவிழா வளைவு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இவ்விழாவில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்காக ஒதுக்கப்பட்ட வரிசையில் சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.