அண்ணாவை மற; பெரியாரை நினை : இராமியா

anna_periyarகடவுள் நம்பிக்கையால் மனித குலம் சீரழிவதைக் கண்ட பெரியார் “கடவுளை மற; மனிதனை நினை.” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

பார்ப்பன / முதலாளித்துவ ஆதிக்கத் தேர்தல் முறையினால் ஏற்படும் சீரழிவுகளைக் கண்டால், இத்தேர்தல் முறையைத் தேர்ந்தெடுத்த “அண்ணாவை மற!” சமூக விழிப்புணர்வுக்குப் பாதை வகுத்த, “பெரியாரை நினை” என்ற முழக்கத்தை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

ஏடறிந்த இந்திய வரலாறு முழுமையும், பார்ப்பன ஆதிக்க வரலாறு தான். முடியாட்சிக் காலத்தில் மனு அநீதி வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது. முதலாளித்துவம் முகிழ்த்த பின், பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் தோன்றி போராடிக் கொண்டு இருந்த போது, மனு அநீதியை வெளிப்படையாகச் சரியானது என்று சொல்ல வெட்கமாக இருந்த நிலையிலும் பார்ப்பனர்கள் அந்த அநீதியைக் கைவிட ஒப்பவில்லை. ஆகவே தங்கள் கையில் இருந்த / இருக்கும் அரசதிகார வலிமையை வைத்துக் கொண்டு, சூழ்ச்சியான முறைகளில் அதே அநீகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த அரசதிகார வலிமையை முறியடிக்க வேண்டும் என்றால், அரசு, சமூக, பொருளாதாரக் களங்களில் அனைத்து நிலைகளிலும், அனைத்து வகுப்பு மக்களும், அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இப்பொழுது இருப்பது போல், அதிகாரம் உள்ள உயர்நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலை உருத் தெரியாமல் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

அதனால் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்திய சமூகத்தைப் பற்றி விளக்கிக் கூறும் போது, மகாத்மா சோதிராவ் ஃபுலே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் தான், அவர்களுக்கு உரிய பங்கில் சிறிதளவேனும் அடைய முடியும் என்ற கோரிக்கையை வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரியாரும் அம்பேத்கரும் அதே கோரிக்கைக்காகப் போராடினார்கள். இவர்கள் யாருமே தேர்தல் அரசியல் மூலம் இக்கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று முயலவில்லை; எண்ணவும் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வென்றெடுக்க முயன்றனர். தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குச் சார்பான கருத்தியலை வளர்த்து, விழிப்ணர்வைப் போதுமான அளவிற்கு ஏற்படுத்துவது அவசியம் என்று எண்ணினர். இது ஓரளவிற்குப் பயனைத் தரவே செய்தது.

ஆனால் காலம் கனிவதற்கு முன்பாகவே, அதாவது தேவையான அளவு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் முன்னரே, தேர்தல் அரசியலில் ஆசைப்பட்டு அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்து, தி.மு.க.வை ஆரமபித்தார். அப்படிப பிரிந்த பின் தி.மு.க. குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பெற்று ஆட்சியையும் பிடித்தது. ஆனால் “கடவுள் இல்லை” என்ற கொள்கையில் இருந்து சறுக்கி “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்று சொல்ல நேரிட்டது.

ஒரு அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்தால், அதன் அடிப்படைக் கொள்கையை உடனே செயலாக்க வேண்டும்.

லெனின் ஆட்சியைப் பிடித்த மறு கணமே, நிலம் அனைத்தும் இனி தனியார் உடைமையில் இருக்காது; மக்கள் அனைவருக்கும் உடைமையாக இருக்கும் என்று கூறும் ‘நிலம் பற்றிய அரசாணை’யை எழுதினார். அது போல தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்த உடனேயே, அனைத்து வகுப்பு மக்களும், அவரவர் உரிமைகளைப் பெறும் வகையில் விகிதாச்சாரப் பங்கீட்டுக் கொள்கையை அமலாக்கி இருக்க வேண்டும். அப்படி முடியாத நிலையில், ஆட்சியைப் பிடித்து இருக்கவே கூடாது.

மக்களுடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஆட்சியைப் பிடித்ததன் விளைவாக, இன்று அக்கட்சியினர் பல ஊழல் வழக்குகளில் சிக்சி உள்ளனர். அனைத்து வகுப்பு அரசியல்வாதிகளும் ஊழல் செய்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தான் ஊழல் வழக்குகளில் சீரழிக்கப்படுகிறார்கள்; மேலும் மிரட்டப்பட்டு, தங்கள் வகுப்பு மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

ஆனால் பார்ப்பனர்களின் ஊழல்கள் கண்டு கொள்ளப்படுவது இல்லை. ஆனால் அப்படிக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காகப் பெயருக்குச் சில வழக்குகள் பதியப்பட்டு, இறுதியில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் தப்ப விடப்படுகிறார்கள். மறைக்கவே முடியாத கூட்டல் கழித்தல் தவறுகளை, வேண்டும் என்றே செய்து விட்டு, ஒரு தவறும் நேரவில்லை என்பது போன்ற முகபாவனையுடன் வெற்றி விழாவும் கொண்டாடுகிறார்கள்.

இது போன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் 25.5.2015 அன்று வ்ணடுகோள் விடுத்தார். அதற்கு உடனடியான எதிர்வினையும் தென்படாமல் போகவே 26.5.2015 அன்று தங்கள் கட்சிக்கு மேல் முறையீடு செய்யும் கடமை உண்டு என்று அறிவித்தார்.

மேல் முறையீடு செய்தால் நீதி கிடைத்து விடுமா? அதிகார மையங்களில் பெரும்பாலாகப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் நிரம்பி வழிகையில் அவர் நீதியை எப்படி எதிர்பார்க்கிறார்?

அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் 3% மட்டுமே இருந்து மீதமுள்ளோர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால் / இருந்தால் இப்படிப்பட்ட தீர்ப்புகள் / முடிவுகள் வர முடியாது.

பெரியாரும் அம்பேத்கரும் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருந்து பணி புரிந்து தான், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இன்று கிடைத்து இருக்கும் சிறதளவு உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். பார்ப்பனர்களின் அரசதிகார வலிமை போதுமான அளவு பலவீனம் அடைந்த பின்னரே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விழிப்புணர்வு போதுமான அளவு வலுப்பெற்ற பின்னரே தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைப் பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் தி.மு.க.வினர் காலம் கனிவதற்கு முன்பே தேர்தலில் ஈடுபட்டு, பெரியார் வளர்த்து வைத்த ஆற்றலை வீணடித்து விட்டனர் / வீணடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும், அண்ணா வகுத்த தேர்தல் பாதையை மறந்து, பெரியார் வகுத்த விழிப்புணர்வுப் போராட்டப் பாதையில் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும். ஆதவே நம் உரிமைகளை நாம் பெறுவதற்கான வழியாகும்.

அண்ணாவை மற; பெரியாரை நினை.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.6.2015 இதழில் வெளி வந்துள்ளது)

24 thoughts on “அண்ணாவை மற; பெரியாரை நினை : இராமியா”

 1. Before you forget Anna stop worshipping Bill Gates, Ellison et. al. in the temples of Microsoft, Oracle, IBM etc. in the holy land of US of A. That will be one step forward

  1. You are right Mr.Ruban. Even to stop worshiping Bill Gates and others, Brahmins’ domination will come across to prevent you from doing that. Therefore getting rid of Brahmins’ domination becomes a priority.

 2. பெரியார் தெலுங்கன், அண்ணாதுரை தமிழன் நீங்கள் தமிழினத்துக்கு எதிரானவர் என்பது தெரியவில்லையா? தமிழனுக்கு ஒரு நாடு தேவை! ஆட்சி தேவை!

  1. Bun Anna was a Parayan that tends to hurt the author I believe 🙂

    1. மேளகார முதலியாராமே ? யாழ்பாணத்துல சாதி குறைந்தவங்க அல்லவே அவங்க ??

 3. சீமான் மாதிரியான கோமாளிகள் தமிழ் தெலுன்ங்கு மலையாளம் என தங்கள் லாபத்துக்காகப் பேசி வருகின்றனர். யாழ்ப்பாணத் தமிழ் மலையாளத்துக்கு ஒத்தது. தமிழ் நாட்டில் யாழ்ப்பாணத் தமிழ் பேசினால் மலையாளிகள் என்றே கேட்பார்கள். பிட்டு, இடியப்பம், போன்ற உணவு வகையில் அருகிலிருக்கும் தமிழ் நாட்டைக் கடந்து கேரளாவை ஒத்தே உள்ளது. யாழ்ப்பாணத்தின் திருமண முறைகள் கேரளாவில் உள்ளது போன்றது. ஆக,யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையாளிகள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இதனால் யாழ்பாண வாசிகளை அழித்த ராஜபக்சேவை தியாகி என கோமாளி சீமான் விரைவில் தீர்மானம் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 4. கேரளாவுக்கும் யாழுக்கும் ஏதோ ஒற்றுமையை பட்டியலிட்டு விடவேண்டுமென்பதற்காக மேம்போக்காக ஏதேதோ கூறியுள்ளார் . அதன் பின் ராஜபக்ஷவை இழுத்து விட்டு பின் சீமானோடு கோர்த்து விட்டு உளறியிருக்கிறார் .

  முதலில் யாழ் திருமண முறை பெரும்பாலும் தமிழ்நாட்டு திருமண முறையை ஒத்ததுதான் .நண்பர் கேரள திருமண முறையை பார்த்ததில்லை போலும் .
  மேலும் பிட்டு இடியாப்பம் மலயாளிகள் மாத்திரமல்ல சிங்களவர்களும்தான் உண்கிறார்கள் .இலங்கை தமிழர்களும் , சிங்களவர்களும் உண்பதைத்தான் மலையாளிகளும் உண்கிறார்கள் . இதற்கு காரணம் அந்த பிரதேசங்களில் தேங்காய் சிவத்த அரிசி போன்றவை அதிகமாக கிடைப்பதுதான்.

  கேரளத்தவர்கள் வெறும் ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னரே மலையாளிகளாக மாற்றப்பட்டர்கள் . அதற்கு முன் அவர்கள் பேசியது மலபார் தமிழ். அப்போது அவர்கள் மலபார் தமிழர்களாக இருந்தார்கள் .
  மலயாளிகளுக்கு வரலாறு வெறும் 500 வருடங்கள்தான் .
  தமிழர்களுக்கு வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் .
  எனவேதான் இலங்கை தமிழர்களையும் கேரள மலையாளிகளையும் ஒப்பிடுபவர்களை வரலாற்று அறிவிலிகல் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 5. lala
  திருமண உறவு முறை என்று குறிப்பிடுவது திருமணம் நடக்கும் முறையை அல்ல. ஆண் பெண் சொந்தபந்த உறவு முறை பற்றி; ஆங்கிலத்தில் அதனை kinship என்பார்கள். எம்.என்.சிறீனிவாசன் போன்ற மனிதவியலாளர்கள் இது தொடர்பான நிறைய மனிதவள ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். தமிழ் நாட்டில் வழக்கிலுள்ள தாய்மாமன் உறவு முறை யாழ்ப்பாணத்தில் இல்லை. பல சடங்குகள் கேரளத்தை ஒத்தவையே. மொழிவழக்கும் அப்படித்தான். லாலாவுடைய அறிவுக்கு ஏற்றபடி ரிவி சீரியல்களில் வரும் மாமியார் கொடுமை பெண் கணவன் வீட்டில் குடிபுகுவதை இன்றும் விளக்கும். இதைவிட சிங்களவர்கள் இடியப்பம் சாப்பிடுவதும் கேரள உறவு முறைதான். கேரளாவிற்கு ஐந்து நூற்றாண்டு வரலாறு உண்டெனின், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பதாக சிங்களவர்களில் பெரும்பகுதியினர் தமிழர்களே. கரையோரச் சிங்களவர்கள் ஒல்லாந்தர் ஆட்சிவரைக்கும் தமிழ்ப் பேசியவர்களே. சிவப்பரிசியும் தேங்காயும் கிடைக்கும் கொங்கோ நாட்டில் இடியப்பத்தோடா அலைகிறார்கள். லாலா, சும்மா குசும்பு பண்ணாதைங்கோ. பனை வளரும் இடங்களில் எல்லாம் பன்னாடை கிடைக்கும் என்பதால் லாலாவும் கிடைக்கும் என நான் எழுதமாட்டேன் ஐயா!

  1. ##திருமண உறவு முறை என்று குறிப்பிடுவது திருமணம் நடக்கும் முறையை அல்ல.##

   அவர் தனது கருத்தில் குறிப்பிடும்போது திருமண முறை என்றுதான் கூறியிருந்தார். திருமண உறவு முறை என்றல்ல .

   மேலும் திருமண உறவு முறை என்றே பார்த்தாலும் தாய் மாமனை கட்டிக்கொள்ளாத கலாசாரம் இலங்கை , கேரளாவில் மட்டுமல்ல தமிழ்னாட்டின் சில சமூகங்களிலும் இருக்கிறது . தமிழ்நாட்டின் எல்லா சமூகங்கள் மத்தியிலும் இந்த கலாசாரம் இருக்கிறதெனெ கருதுவது தவறானது.

   ##, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பதாக சிங்களவர்களில் பெரும்பகுதியினர் தமிழர்களே. ##

   இப்போதுள்ள சிங்கள இனம் வெறும் மொழி மாற்றத்தினால் மட்டும் தமிழிலிருந்து பிரிந்து சிங்கள இனமாக மாறி விடவில்லை . வட இந்தியப்பகுதிகளான கலிங்கம் , ஒடிசா போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்ட கலப்பினமே சிங்களம்.
   ஆனால் மலபாரில் வாழ்ந்த மலபார் தமிழர்கள் மலையாளிகளாக மாறியது வெறும் மொழி , எழுத்துரு மாற்றத்தின் மூலமே .

   எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.

   ## சிவப்பரிசியும் தேங்காயும் கிடைக்கும் கொங்கோ நாட்டில் இடியப்பத்தோடா அலைகிறார்கள். ##

   அப்படியா ? அப்படியென்றால் , தாய்மாமன் திருமண உறவு முறையில்லாத கலாசாரத்தை கொண்ட இனங்களை உலகம் முழுவதும் தேடிப்பிடித்து யாழ் தமிழர்கள் அந்த இனங்களையும் ஒத்தவர்கள் . பெரும் ஒற்றுமையிருக்கிறது . அதற்கு ஆதாரமும் இருக்கிறது என ஆரம்பித்து விடாதீர்கள்

   1. தாய் மாமனைத் திருமணம் செய்யாதவர்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதைவிட மச்சான் மச்சாள் உறவிலான திருமணத்தை வைத்து ஆரம்பிப்பது பொருத்தமானது.
    இலங்கைத் தமிழ் கேரள உறவுமுறைக்கு நாம் பயன்படுத்தும் சொற்கள் உணவுமுறை சாதியமைப்பில் உள்ள ஒற்றுமைகள் என்று பல விடயங்கள் உள்ளன. ஆனால் இவை எமக்கிடையேயிருந்த வர்த்தகத் தொடர்புகளை நிறுவப் போதுமானவையே ஒழிய அங்கிருந்து நாம் வந்தோம் என்று நிறுவ அல்ல.
    இன்றுள்ள சிங்களவர்கள் தென்னிந்தியாவிலிருந்தே வந்தார்கள். மகாவம்சத்தின் படி கூட 700 பேர் மட்டுமே வட இந்தியாவிலிருந்து வந்தார்கள். (இவர்களின் தலைவன் மட்டும் சிங்கமொன்றின் பேரன் என்பது மகாவம்சம் கூறும் அடுத்த புலுடா) இவர்கள் பெண் எடுத்ததெல்லாம் தென் இந்தியாவில் தான். மற்றப்படி பல்வேறு சிங்கள அரசர்களிற்கு பெரும் அளவிலான படை உதவிகள் தென்னிந்தியாவிலிருந்து பாண்டியர்களிடமிருந்து வந்தது. இவர்களில் பலர் காலப் போக்கில் சிங்களவர்களாக மாறி விட்டார்கள். சிலாபம் நீர்கொழும்பு பகுதியில் இருந்த இருக்கின்ற பலர் கையெழுத்து மட்டும் தமிழில் போடத் தெரிந்த மற்றப்படி சிங்களம் பேசுகின்ற சிங்கள மொழியில் கல்வி கற்ற தமிழர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் தான்.

    1. “தாய் மாமனைத் திருமணம் செய்யாதவர்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதைவிட மச்சான் மச்சாள் உறவிலான திருமணத்தை வைத்து ஆரம்பிப்பது பொருத்தமானது”,very wrong to get married among blood relatives, there is scientific evidence to support it. In the Batticaloa District Kannaki Vazipaadu is a big deal to Indicate they have stronger affiliation to Madurai area Tamils. Puttu and Idiappam aren’t only for Malyalees who infact were Tamils about 800 years or so back , Tamils from Madurai area too have this kind of eating habits. The mythological story about Lord Siva carrying the sandbags for Puttu as his wages is well known among Tamils for example.

 6. பெரியாரை நினை அண்ணாவை மற என்பதின் அர்த்தமே
  தமிழினம் மனிதத்தை முதலில் மதிக்க வேண்டும் அதன்
  பின்னரே அவர்களிற்கு அரசியல் விடுதலை என்பதெல்லாம்
  பொருத்தமானது என்பதற்காகவேயாகும்.

  இதனை ஏற்காது சாதிப்பயங்கர வாதிகள் தமது சுயநலன் களிற்காக தமிழினத்தின் அரசியல் உருமைப்போரட்டத்தை
  தமிழ் பயங்கரமாக மாற்றி விட்டார்கள். இவர்கள் சிங்களவரை எதிரியாக இலங்கையில் காட்டி முப்பது வருடம் பிழைத்தார்கள். இந்தியாவில் திராவிடம்
  இந்தி எதிர்ப்பு என ஏமாற்றி ஜெயா கருணாநிதியை
  உருவாக்கி உள்ளார்கள். இதே போல தமிழீழபோராட்டமும்
  உலகமெங்கும் பலரை உருவாக்கி விட்டு சென்று விட்டது.

  1. If the Singhalese weren’t the enemy to the Tamils why did they discriminate them by race in SL ? Big talks don’t change the facts !

   1. சாதி பாகுபாட்டுடன் தமிழினமாக வாழ்வதுபோல
    இன பாகுபாட்டுடன் இலங்கையர்களாக வாழ்வதில்
    என்ன தவறு? இப்படி கேட்டவர்களை துரோகிகள்
    என்று போராட்டம் நடத்தி தமிழினத்தை பலி கொடுத்தவர்கள் இன்று சிங்கள அரசின் நண்பர்கள்.
    இதனை விட சிங்கள இனம் தமிழறிற்கு துரோகமோ
    பாகுபாடோ காட்டியுள்ளதா?

   2. Karuppu Peralagan,
    From what you are writing, I could realise that you must be from Tamil Nadu! Ok, Sinhala ruling class is different from Sinhala people. In 1983 there were Sinhala youths joint Tamil movements to fight for Tamils self determination; in return Tamil movements went and massacred innocent Sinhala peoples in south of Sri Lanka; hence certain portion of Sinhala people had to take refuge with discriminating majoritarian parties. Indian state is led by a Hindu fascist party which doesn’t mean all the Indians are Hindu fascists!

    1. You have a very short memory I believe. For starters I am not from Tamil Nadu or India for that matter. The descriminationstarted much before 83 and by the time 83 came it was much worse. You are in some gaga land thinking Singhalese youth fought for the Tamils. Probably a few did and they were principled like that. That couldn’t have prevented the madness that followed at all.

   3. Are you trying to say that all the Tamils who are not just discriminated, but oppressed and treated like animals almost half a century ago (still most of the practices are followed in some parts) were enemies of Tamils who considered themselves as “Vellalar”?

    Discrimination is there all over the world in various forms. It has to be eradicated, but the people should be considered as friends.

    1. There is a big difference between the prejudices people have among themselves and laws enacted by the government in power to discriminate a segment of the population. As a society the Jaffna people had this big ego about them, they are the only people in the island who speak about our Yaalpanaththu Makkal. The Batticaloa man or the Galle man or the Kandian man will never use such a phrase. I can see that even among the people who have lived overseas for years. When they meet a fellow SL Tamil for the first time they ask the question which part of Jaffna they are from. Every other place in the island is oblivious to them. I really don’t know why. But I still admire their perseverance whether they are from high caste or low caste.

     When the minds of people are polluted by rogue politicians it is hard to have love towards the people who have repeatedly elected the same politicians to power so that they can reap cheap benefits from the laws they have enacted. Don’t expect the common man to be lord Buddha.

 7. முதலில் நீ திருந்து மற்றவர்கள் திருந்துவார்கள் என்ற ஆன்மீகவாதம் ஆகும். சாதியவாத சிந்தனையின் வெளிப்பாடு. சாதியச் சிரங்குக்குள் இருந்து சொறிந்து பார்க்கும்
  பார்வையாகும். இங்கு பலர் சாதியந்தன் புத்தி குலனந்தன் ஆசாரம் என்ற சிந்தனை வடிவத்தில்
  இருந்து சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை பார்க்கின்றார்.
  அண்மையில் தமிழக இடதுசாரியுடன் உரையாடும் போது இந்த தீய சிந்தனை பரவியுள்ளதை ஏற்றுக் கொண்டார்.
  வர்க்கப்பார்வையற்ற அராஜக வரலாற்று ஆய்வியல் அணுகுமுறைப் போக்கு சமூகத்தின் வளர்ச்சியைக்
  கூட சிதைத்துவிடும் வல்லமை உள்ளது.
  இங்கு பலர் தமது முன்னோர்களின் அரசபரம்பரையில் தேடுகின்றார்கள். சோழ, பாண்டி, சேர மரபென்பது

  சாதிய மையவாதச் சிந்தனையில் இருந்து சமூகத்தினையும் அதன் எதிர்விழைவுகளையும் பார்க்கும்
  இதன் பொருள் சாதியக் கருத்துருவாக்கத்தினால் சமூகத்திற்கு பாதிப்பு இல்லை என்பது அர்த்தமல்ல.இது தொடங்கியது தலித்தியவாதத்தில் இருந்து பின்னர் சாதியக் கட்சிகளாக உருவாகி இப்போ சிரங்கு சொறிந்து சீழ் ஆகி சாதியவட்டத்தினுள் சிந்தித்து சமூகத்தின் பின்வழியாக நகர்த்துகின்றது. இதனை இலங்கையில் செய்ய முற்படுகின்றார்கள். இதற்கு so called left எனப்படுபவர்களும் பலியாகி உள்ளார்கள். யாழ் சைவவேளாளத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் அகநிலைப் பார்வையை முன்வைப்பவர்களாக உள்ளனர், ** புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து அவற்றை விளக்குவதில் திறமைபெற்றிருப்பது மிக முக்கியமான பிரச்சினை அல்ல: பதிலுக்கு ஊக்கமாக உலகை மாற்றுவதற்கு அவ்விதிகள் பற்றிய அறிவை பிரயோகிப்பது தான் மிக முக்கியமான பிரச்சினை என்று மார்க்சிச தத்துவம் கருதுகிறது.
  -மாவோ –

 8. அண்ணா அரசியலில் புகுந்தபடியால்தான் பலதை சாதிக்க முடிந்தது. ஒரு சனநாய அரசியல் அமைப்பில் அரசியலில் ஈடுபடுவது கட்டாயம். அதைத் தவிர்க்க முடியாது. யாழ்ப்பாணத்தவர்கள் தமிழில் பேசினால் நீங்கள் மலையாளமா என்பதற்கு காரணம் அவருக்கு யாழ்ப்பாண்த்தவர் பேசும் தமிழ் விளங்கவில்லை என்பதாகும். இலங்கைக்கு சென்ற தமிழர்கள் பலர் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். சிங்கள மன்னர்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் இடையில் பெண் கொடுத்து வாங்கும் வழக்கம் இருந்தது. விஜயன் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம். வங்களா – கலிங்க குடியேற்றத்துக்கு அவன் ஒரு குறியீடு. விஜயனுக்குப் பின் நாகர்கள் இலங்கையை ஆண்டார்கள். இவர்கள் பவுத்தர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்த போதுதான் சிங்கள மொழி தோன்றியது. சிங்கள மொழி தமிழ், வடமொழி, பாளி, எலு(பூர்வீக மக்களால் பேசப்பட்ட மொழி) மொழிகளின் கலப்பு மொழி. நீர்கொழும்பில் வாழந்த கத்தோலிக்க பரதவர் தமிழ்தான் பேசி வந்தார்கள். எட்மென்ட் பீரிஸ் எனற் கத்தோலிக்க பாதிரியார் கற்கை மொழியை தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினார். விளைவு? தமிழர்கள் சிங்களவர்காளக மாறினார்கள். இன்றும் மலை நாட்டுத் தமிழர்கள் சிங்களப் பெண்களை மணந்து இனம் மாறி வருகிறார்கள். இலங்கை சுதந்திரம் பெறு முன்னர் ஏராளமான மலையாளிகள் கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் பலர் வெளியேற எஞ்சியவர்கள் தங்களை சிங்களவர் என அடையாளப்படுத்தினர்.

Comments are closed.