இடிந்தகரை போராட்ட மக்கள் மீது காவல்துறை வன்முறையை கையாள்வதை தடுத்து நிறுத்த உதயகுமார், புஷ்பராயன்
ஆகியோர் முக்கியமானவர்கள் முன்னிலையில் இன்று மாலைக்குள் சரணடைவதற்கு இணங்கிய போதும், உதயகுமாரை சரணடைய விடமாட்டோம் என்று போராட்ட மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர் என்று தெரிகிறது.
இடிந்தகரை மற்றும் கூடங்குளம் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் உள்ள மக்கள் அணு உலையில் எரிபொருள் நிரப்பக் கூடாது என்று இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காவல்துறையினர் போராட்டக் காரர்களை கலைக்க தடியடிப் பிரயோகம் செய்யவேண்டி வந்தது. கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசி போராட்ட மக்களைக் கலைக்க முயன்றனர். இதில் பெரும் கலவரம் வெடித்து மணப்பாடு மீனவர் ஒருவர் உயிரிழக்கும் அபாயமும் நேரிட்டது.
இந்தவேளை, இடிந்தகரை மக்கள் 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்த மக்களை காவல்துறை தடியடிப் பிரயோகம் நடத்தி விரட்டியடித்ததைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அங்கங்கு பல அமைப்பை சேர்ந்தவர்களும், பாமக, மதிமுக விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சி சார்ந்தவர்களும், மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறை அவர்களைக் கைது செய்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இடிந்தகரை மக்களை போராட்டத்திற்கு ஒருங்கிணைத்த உதயகுமார். புஷ்பராயன் உள்ளிட்டோர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சரணடைய உள்ளதாக கூறியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் போராட்ட மக்கள் உதயகுமார் தனிப்பட்ட அவரின் குடும்பத்துக்காக போராட்டத்தில் ஈடுபடவில்லை. எங்களின் நலனுக்காக அவர் போராட்டம் செய்தார். எனவே அவரை சரணடைய நாங்கள் விடமாட்டோம்.
நாங்கள் அராஜக முறையிலா போராட்டம் நடத்தினோம், அமைதியாகத்தானே போராட்டம் நடத்தினோம்.அப்படி இருக்கையில் எங்கள் மீது தமிழக முதல்வர் காவல்துறையை ஏவிவிட்டது ஏன்? எங்களை முதல்வர் நேரில் சந்திக்க மறுப்பது ஏன்? அவர் சார்பில் ஒரு அமைச்சரைக் கூட அனுப்பி வைக்க முடியாதா? மேலும் நாங்கள் மாயவலையில் சிக்கியிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவர்தான் ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கு சாதகமாக பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசுகிறார். எனவே அவர்தான் மாயவலையில் சிக்கியுள்ளார்.
எங்களின் போராட்ட வடிவம் வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், அணு உலையை இழுத்து மூடவேண்டும் என்கிற எங்கள் நோக்கம் ஒன்றுதான். எனவே உதயகுமாரை சரணடைய விடமாட்டோம்’ என போராட்ட இடத்திலிருந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
India has the necessary native technology to handle all kinds problems. Dr. Swapan Kumar Ghosh – 812-237-2418. Terre Haute, Indiana, USA.
சீமான் என்னும் ஜெயலலிதா அடிப்பொடி எங்கே?
எஸ்கேப்டு யா எஸ்கேப்டு……………………
இது மக்களின் இருப்புக்கான போராட்டம்,தயவுசெய்து இங்கே தலைவர்களின் இருப்பைத்தேடாதீர்கள்…
கூடங்குளம் மின்சாரம் – இலங்கைக்கு… இதோ ஆதாரம்..!கொடுக்கலாமா வேண்டாமா http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546
கொடுக்கக் கூடாது என்பது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு அதை இயக்கி நமக்கு மின்சாரம் எடுத்துக்கொள்ள ஆதரவளிக்கவேண்டும். அணு உலையை மூடுவது என்பது அமெரிக்காவிற்கு சாதகமானது. அதே நேரத்தில் ரஷ்ய அணு உலையை நமக்கான சுயமான அணு உலையாக கட்டியமைக்க மாற்றியமைக்கப் போராடவேண்டும்.
Mojo that is something to think about. I am tired of power cuts here at Batticaloa.