அணுசக்தி ஒப்பந்தமும்; அரசின் நயவஞ்சகமும்!

-கே. வரதராசன்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும் பிரதமரும் ஏற்கனவே பலமுறை தெரி வித்த அனைத்தும் உண்மையல்ல, வெறும் ஏமாற்று nலை என்பது சமீப காலத்தில் மிக வேகமாக அம்பலமாகி வருகின்றன. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்கிற பழமொழிக்குச் சிறந்த உதாரணமாக இது திகழ்கிறது.

ஆரம்பத்தில் சர்வதேச அணுசக்தி முகமையிடம் செல்ல வேண்டும் என்று அவர்கள் நிர்ப்பந்தித்தபோது, ‘‘இந்த ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு எதிரானது, தேசத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத் திடம் அடகு வைக்கும் செயல், காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் கடைப்பிடித்த கூட்டுச் சேரா இயக்கக் கொள்கைக்கு எதிரானது’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி கள் வலுவாகக் குரல் எழுப்பின.

அப்போது ‘சர்வதேச அணுசக்தி முகமையிடம் செல்ல அனுமதியுங்கள். ஆனால் ஒப்பந்தத்தை இறுதியாக்க மாட்டோம், பேச்சுவார்த்தை முடிவுகள் மீது கையெழுத்திட மாட்டோம், ஐமுகூ – இடதுசாரிக் கட்சிகளின் குழு அதனைப் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்வோம் என்பது பிரதமரும், சோனியா காந்தியும் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கும் கொடுத்த உறுதி மொழியாகும்.

பின்னர் ஐமுகூ – இடதுசாரிக் கட்சி களின் குழு பல முறை கூடியபோது, பேச்சுவார்த்தைகளின் முழு விவரங் களையும் அளிக்கக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. வெறும் குறிப்புகளை மட்டும் கொடுத்தார்கள். ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் தர வேண்டும் என்று இடதுசாரிகள் தரப்பில் குரல் எழுப்பப் பட்டபோது, அதனைக் காட்டுவது சர்வ தேச அணுசக்தி முகமையின் விதிக ளுக்கு எதிரானது என்றும் அதனை வெளியிட்டால் கடுமையான பிரச்சனை ஏற்படும் என்றும் ஆகவே அதனை வெளி யிட இயலாது என்றும் அதனை அமைச் சர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்பது சர்வதேச அணுசக்தி முகமை யின் விதி என்றெல்லாம் ஏராளமான கதைகளை அளந்தார்கள். ஆனால் ஜூலை 9ஆம் தேதி சர்வதேச அணு சக்தி முகமையின் செய்தித் தொடர் பாளரும் தலைவருமான மெலிசா ஃப்ளெ மிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசுத்தரப்பில் சொல்லப்பட்ட மேற் கண்ட அனைத்தும் பொய் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ இந்த உடன் பாட்டுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் என் கிற வகையில் அவர்கள் இதனை யாருக்கு தெரிவித்தாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் இந்த நாடுகள் இறுதி முடிவு எடுப்பதற்கோ மற்றவர்களைக் கலந்தாலோசிப்பதற்கோ ஒப்பந்தத்தைக் காட்டுவதைத் தவறு அல்ல என்று பகிரங்கமாகத் தெரிவித்துள் ளார். அதுமட்டுமல்ல, இடதுசாரிகள் புத னன்று அரசுக்கு அளித்து வந்த ஆத ரவை வாபஸ் பெற்றார்கள். மாலை இந்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க இந்த ஒப்பந்தம்., சர்வதேச அணு சக்தி முகமையில் அங்கம் வகிக்கும் நாடு களுக்கு அளிக்கப்படுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையில் அங்கம் வகிக் கும் நாடுகளுக்கு மட்டுமல்ல, இணைய தளத்தின் மூலமாக அமெரிக்கா இதனை உலகம் முழுமைக்கும் அளிக்கிறது. இது வரை ரகசியம், ரகசியம் என்று பேசிய வர்கள் எவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் என் பதற்கு இதை விட விளக்கம் தேவையா?

அதுமட்டுமல்ல, பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானில் இருந்தபோது அவருடன் கலந்து பேசி பிரணாப் முகர்ஜி இந்திய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறுவதற்கு முன்னால் சர்வதேச அணு சக்தி முகமையிடம் அடுத்த கட்ட நட வடிக்கைகளுக்காகச் செல்ல மாட்டோம் என்றும், இதனைப் பிரதமரிடம் கலந்து ஆலோசித்தபின்தான் இந்த நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கின்ற வாக்குறுதி என்றும் தெரிவித்தார், ஜனாதிபதி அவர் கள் வியாழன் அன்று மாலை பிரதமரைச் சந்திக்க இருக்கும் சூழலில் நம்பிக்கை தீர்மானம் பற்றி இனிதான் நாடாளுமன் றத்தில் தேதி தீர்மானிக்க வேண்டும் என்றிருக்கிற நிலையில், ஜனாதிபதி யைச் சந்திப்பதற்கு முன்னாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மன்மோ கன்சிங் தாவிவிட்டார் என்றால் அதற்குப் பொருள் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? இவர்கள் நாட்டு மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் மதிக்க வில்லை, இந்தியாவில் இது குறித்து ஓர் ஒன்றுபட்ட கருத்து உருவாக்க வேண்டு மென்ற ஜனநாயக சிந்தனையும் இல்லை, மாறாக அமெரிக்கா கோரினால் அதுதான் வேதவாக்கு, அது ஆண்டவன் கட்டளை என்று எண்ணுமிடத்திற்கு பிரதமரும், காங்கிரஸ் கட்சியும் சென்றிருக்கின்றனர் என்பது வேதனையிலும் வேதனையா கும். குறிப்பாக, நாட்டு மக்கள் கடும் விலை யேற்றத்தால் தாக்கப்பட்டு, அரிசி, கோதுமை, சமையல்எண்ணெய், காய்கறி கள், பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிக்கொண்டே போகும் நிலையில், கணிசமான பகுதி மக்கள் விழிபிதுங்கி நிற்கிற இந்தச் சூழலில் அதனைப்பற்றி விவாதிக்க மறுக்கிற ஒரு அரசு, அமெரிக்க ஒப்பந்தத்திற்கு இவ்வளவு அவசரப் படுவது ஏன்? என்ற கேள்வி இயல் பானதே.

கடந்த நான்காண்டு காலத்தில் இந்த அரசு குறைந்தபட்ச பொது செயல் திட் டத்தில் அறிவித்த பலவற்றை, சமீபத்திய எண்ணெய்விலை உள்ளிட்ட விலை உயர்வு பிரச்சனையிலும் இடதுசாரிக் கட்சிகள் எழுத்துமூலமாக தெரிவித்த பல ஆலோசனைகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதை இவர் கள் செல்லும் வழியே காட்டுகிறது.

வரிகளைக் குறைத்தால், பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தை தவிர்க்கலாம், அதனால் மற்ற பொருள்கள் விலையேற் றமும் பணவீக்கமும் குறையும் என்று ஆலோசனை வழங்கியது மட்டுமல்லா மல், இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் விற்பனை வரியில் 5 சதவீதம் குறைத்து, ‘‘நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல, செயல் வீரர்கள்’’ என்று நடத்திக்காட்டினார்கள். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக் கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதி லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையில் உள்ள இடதுசாரி அரசுகளும். மக்களின் நலனுக்காக இந்தச் சுமையை ஏற்றுக்கொண்டு வழிகாட்டின.

ஆனால், அதற்குப் பிறகும் மத்திய அரசு ஓர் அங்குலம் கூட நகரவில்லை என்பதும், அடுத்த கட்ட விலையேற்றத் திற்குத் தயாராக இருங்கள் என்று ப.சிதம் பரம் வகையறாக்கள் பேசுவதும், ‘எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும்’ செயலா கும். இந்த அரசாங்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கும்போது இரண்டு காரணங்கள் வெளியிட்டது. ஒன்று, மதவெறி சக்திக ளுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. இரண்டு, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆட்சி அமைய வேண்டும். இரண்டையும் இன்றைக்கு மீறக் கூடிய வகையில் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை செயல்படுத்தா மல் அதற்கு நேரெதிராக நடந்துகொண் டுள்ள அரசு என்பது ஒரு பக்கம், இன் னொரு பக்கம் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக் கைகள் மூலமாக மீண்டும் மதவெறி சக்தி களுக்கு வாய்ப்பளிக்கும் நிலையை ஐமுகூ அரசாங்கம் ஏற்படுத்தி இருக் கிறது.

ஐமுகூ அரசாங்கம் நாட்டின் இறை யாண்மைக்கும் நாட்டு மக்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் சென்று கொண்டிருப்பதால் தான் இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டன. நாட்டு மக்களை அணிதிரட்டி ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாட்டு மக்களின் வலுமிக்க எதிர்ப்பை உருவாக்குவது நாட்டில் பிறந்த ஒவ் வொரு மனிதனின் தேசபக்தக் கடமை யாகும். அதனைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இப்போது துவக்கியுள்ளனர்.