அணுசக்தி உடன்பாடு : மனிதச் ச்ங்கிலிப் போராட்டம்.

12/08/08
அமெரிக்காவுடனான துரோக உடன்பாட்டை எதிர்த்தும், விஷம் போல் ஏறி வரும் விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரியும், விவசாயத்துறை நெருக்க டிக்கு தீர்வு காணக் கோரி யும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் விடுதலைத் திரு நாளுக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி பேரியக்கம் நடை பெற உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்த இயக் கத்தை நடத்திட உள்ளன. இந்த இயக்கத்தில் பல்லா யிரக்கணக்கான தேசப்பக் தர்கள் கரம் கோர்த்து சுதந் திரம் காப்போம், நாட்டின் இறையாண்மையை பாது காப்போம் என்று முழக்க மிட உள்ளனர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மன் மோகன் சிங் அரசு முனைப் பாக உள்ளது. அதே நேரத்தில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசியை குறைக்க எந்தவொரு உருப் படியான நடவடிக்கை யையும் எடுக்க மறுக்கிறது. பாஜக தலைமையிலான மதவெறி ச