யாழ்.குடா நாட்டில் தோன்றியிருக்கிற மக்களை அச்சுறுத்தும் நிலைமைகள் தழிம் மக்களின் மனங்களில் பீதிநிலை ஒன்றினைத் தோற்றுவித்திருக்கிறது.
இவ்வாறு குறிப்பிடுவது குறித்து சிலர் கோபம் கூட அடையலாம். டக்ளஸ் தேவானந்தா, மக்களை மேலும் அச்சம் தரும் சூழலுக்கு தள்ளிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், உண்மைகளை மட்டுமே வெளியில் கொண்டு வருவதற்கு யாருக்கும் சுதந்திரம் உண்டு எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும் யாழ்.குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலை, கொள்ளை, மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதமொன்று அவசியமெனவும், யாழ்.குடாநாட்டில் தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் ஆராய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அமைச்சின் அறிக்கையை அடுத்து (இது குறித்து ஏற்கனவே இனியொருவில் வெளியாகியிருக்கிறது) பேசும் போதே இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார். இதே வேளை யாழ்.குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைவரம் குறித்து நேரில் கண்டறிய எம்.பி.க்கள் குழுவொன்றை அங்கு அனுப்பி வைக்குமாறும் சபாநாயகருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் இடம் பெற்று வரும் மேசாமான நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற விவாதமும், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவும் தேவையாயிருக்கிறது. பாராளுமன்ற வாதிகள் விடும் இவ்வாறான கோரிக்கைகள் தாங்களும் இது குறித்து அக்கறை கொண்டோம், கவலையடைந்தோம்;, பேசினோம் என்ற செய்திக் குறிப்பை விட்டு வைக்கும் ஒரு அரசியல் நாடகம். இந்த அறிக்கை குறிப்புக்களால் பீதியடைந்து போயிருக்கிற யாழ்.மக்களுக்கு எந்த நண்மைகளும் வரப்போவதில்லை.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே இந்த நிலைமைகள் குறித்து கவலையடைந்திருந்தால், யாழ்.மக்கள் அடைந்திருக்கிற அச்சநிலை குறித்து சனநாயகவாதி என்ற வகையில் கவலையுற்றிருந்தால், அவருக்கு யாழ்.செல்வதற்கோ அல்லது தனது கட்சி உறுப்பினர்கள் சிலரை அங்க அனுப்பி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தறிந்து கொள்ளவோ முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் அவருக்கு அந்தவிதமான எந்த நோக்கமும் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து மட்டுமல்ல சிங்கள மக்கள் குறித்தும் இருந்ததில்லை.
இதே வேளை அண்மைக்காலங்களில் யாழில் இடம் பெற்று சமூகச் சீரழிவுகள் குறித்தும் அதிக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றியும், போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு பற்றியும், பொது இடங்களில் நடைபெறும் அநாகரிக செயற்படுகள் பற்றியும் தற்போது செய்திகள் வெளிவந்தமுள்ளன. யாழ்.குடா நாட்டில் இடம் பெற்று வரும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரில் அவதானித்த போது சட்விரோதச் செயல்கள் மிகத் தாரளமாகவே நடைபெற்று வருவதைக் கண்டாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் வன்னியில் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரிகேடியர் சுகந்த ரணசிங்க இது குறித்து பி.பி.சி.க்கு தெரிவிக்கையில் “சில இடங்களில் அவர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லபடுவதாகவும், இது அவர்களின் கடந்த காலம் தொடர்பானதல்ல. விடுதலையான புலி உறுப்பினர்கள் திருட்டு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கிராமத்தவர்கள் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக” தெரிவித்திருக்கிறார்.
குற்றச்செயல்களைக் காரணம்காட்டி எதிர்ப்புக்கள் உருவாகக்கூடிய மூலங்களை அழித்தொழிப்பதற்கான தந்திரோபாயம் கையாளப்படுகிறதான் என்ற கேள்வி இங்கு தொக்கு நிற்கிறது. அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மீது குற்றச்செயல்களை மேற்கொள்வோர் என போலி அவதூறுகளைப் பரப்பும் உள் நோக்கம் வெளிப்படுவதை இங்கு காணலாம்.
யாழில் தோன்றியுள்ள கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் குறித்து டக்ளஸ் தேவானந்தாவின் அக்கறை, யாழ். கலாசாரச் சீரழிவுகள் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கருத்துக்கள் ஆறுதலுக்குப் பதிலாக ஒரு வித அச்ச நிலையையே தோற்றுவித்திருக்கிறது. இந்தத் துயரச் சம்பவங்களின் பின்னணியில் இவர்களின் கருத்துக்கள் “ஏதோ ஒன்று” நடக்கப் போகிறது என்பதைக் காட்டுவதாக அமைகிறது என்றே நம்பப்படுகிறது. அந்த “ஏதோ ஒன்று” மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கப்பபோவதில்லை என்றும் நம்பப்படகிறது.
இவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை உருவாக்குவதற்கான உளவியல் யுத்தத்தமோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
அரச படைகளின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும், சுதந்திரமான கருத்துக்களை கூறும் நபர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
அச்சம் தரும் இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் ‘பெரிய அரசியல் கட்சியான’ த.தே.கூ. எங்கே போய்விட்டது என பலரும் ஆச்சரியப்படலாம். அவர்கள் அரசுடன் நல்லிணக்கமாக நடந்து கொள்ளும் ஒரு அரசியலை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கப்பால் அவர்கள் விரைவில் நடைபெறும் என அவர்களே கட்டவிழ்த்து விட்டுள்ள ‘அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை’ எனும் நிகழ்ச்சி நிரலுக்காக த.க.அ. த்துடன் ஒன்ற கூடி, அரசாங்கத்துடன் பேசும் விடயங்கள் குறித்து ஆராய்வதில் மூழ்கியிருப்பதாக தெரிய வருகிறது. அவர்களைப் பொறுத்த வரை இந்த சிறிய சிறய விடயங்களை விட தமிழர்களின் தேசிய விடுதலை எனும் தூரநோக்குச் சிந்தனையே முக்கியமாக அமைந்திருக்கிறது.
இந்த துயரம் மற்றும் அச்சத்தினை தரும் இந்த விடயம் குறித்து விடத்து இரண்டு பந்திகளை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சா.ஆ.தருமரெத்தினம் அவர்கள் (தினக்குரல் 04.01.2010) முப்பது வருடங்கள் தந்தை செல்வா வழியில் அறவழிப் போராட்டங்களாலும் முப்பது வருடங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தினாலும் பெற முடியாத தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓர் இணக்கமான ஒத்துழைப்பின் மூலம் பெறும் ஓர் எத்தனமாக த.தே.கூ. உறுப்பினர்கள் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களியாது தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் இருந்து விலகியிருந்துள்ளார்கள். வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் என வினா எழுப்பியிருப்பதுடன், வரலாற்றில் தமிழ்த் தலைமைகள் எனக்கூறிக் கொண்டோர் இது போன்று பலதடவை “இணக்கமான ஒத்தழைப்பினை” வழங்கி தாமும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதனையும் விரிவாக எழுதியிருக்கிறார்.
அதேவேளை ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வன் சில்வா, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்த போதிலும் வடக்கு , கிழக்கு மக்களின் சுமூக வாழ்க்கையை மேம்படுத்துவதில் அரசாங்கம் முற்றாக தோல்வி கண்டுள்ளது. இலங்கைத் தேசியப் பிரச்சினையை முதலாளித்துவத்தின் கீழ் தீர்க்க முயடிhது. அதனால் அதை ராஜபக்ஷ அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது பொருத்தமற்ற விடயமாகும். அதை நிறைவேற்ற முடிவது சமத்துவத்தின் அடிப்படையில் சகல மக்களுக்கும் உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய உண்மையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கூடிய சமூக முறையில் மட்டுமேயாகும் என தெரிவித்திருக்கின்றார்.
இதற்கு மேலாக கிழக்கில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் தமிழ், முஸ்லிம் மக்கள் வெள்ளத்தில் வாழ்ந்து வருகின்ற நிலைமை தொடர்கிறது. நிவாரணங்கள் போதியளவில் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலாக பெரும் நம்பிக்கையுடன் விதைக்கப்பட்டு வளர்ந்து குடலையாகியுள்ள நெல் பயிர்கள் வெள்ளத்துள்ள மூழ்கிக் கிடக்கிறது.
வன்னியில் மீள்குடியேறியோரும் கிழிந்த தறப்பாள் குடிசைகளில் அவல வாழ்வினைத் தொடர்கிறார்கள். அவர்களும் அச்சம் தரும் சூழலிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். தடுத்து வைக்கப்பட்டோர் குறித்தும் தெளிவான முடிவுகள் கிட்டவில்லை. காணமல் போனோர் குறித்தும் நம்பிக்கையான செய்திகள் கிடைக்கவில்லை.
மீளக்குடியேற முடியாமல் பலர் அகதிமுகாம்களில் தஞ்சமாகியிருக்கிறார்கள். சில கிராமங்களில் மீளக்குடியேறி வாழ முடியாது என்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. மீளக்குடியேறியோருக்கான நிவாரணங்கள் போதுமானதாக இல்லை. வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுதொகை நிவாரணங்களும் சகலருக்கும் கிடைக்கவில்லை.
பெரும் தொகையான பெண்கள் பாதிக்கப்பட்டு நிவாரணமின்றியும் – மறுவாழ்வக்கான வழியின்றியும் மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகியும் வாழ்ந்து வருகின்ற நிலைமை தொடர்கிறது. விடுவிக்கப்பட்ட வன்னிப் பெண்கள் அனுபவித்து வரும் துயரங்களை வடக்குப் பெண்கள் அமைப்பு வெளியிட்டு வருகிறது.
அநாதை இல்லங்களில் வாழ்கின்ற சிறார்களின் வாழ்நிலைமை தொடர்பாகவும் கவலை தரும் செய்திகள் வருகின்றன.
தேசியப் பிரச்சினையாக மாறியுள்ள பொருட்களின் விலையேறற்ம், சம்பள உயர்வின்மை இந்த அவல வாழ்வில் வாழும் மக்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது.
தமிழ் மக்களிடம் இன்று இறுதியில் எஞ்சியிருக்கிற கேள்வி, அச்சம் தரும் இந்தச் சூழலிலிருந்து விடுதலை பெறுவோமா என்பதுவே.
மரணத்துள் வாழும் நிலைக்கு தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுவும், இமல்டா சுகுமார், டக்ளஸ் தேவானத்தா போன்றோரின் துணையோடு மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனமான உதவியுடனும் தான்.
எது எப்படியோ, நாளை பெரும் கேலாகலமாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் ஆரம்பமாக இருக்கிறது.
.ஏன் புலிகளை சாடாமல் விட்டு விட்டீர்கள்?
தற்போதைய சூழலில் புலிகள் தொடர்பு பட்டிருக்கவில்லை என உறுதியாக கூறமுயடியாததனால்.
விஜய்,ரணில் இதுவுஞ் சொல்வார் இன்னமும் சொல்வார்.அவரது பேச்சையெல்லாம் பொருட்டாக எடுக்கலாமா? இலங்கையின் யூ.என.பி.கட்சியென்பது உலகவொடுக்கு முறையாளர்களான இந்தThe Mont Pelerin Society நவலிபரல்களது வாலாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இன்றையவுலகத்தை இவ்வளவு கொடுமைக்கிட்டவர்கள் எவர்?நவ லிபரல்கள் என்பதை எவரும் அறிவர்.அத்தகைய நவலிபரல் சொசைட்டியின் போர்ட் மென்பர் ரணில்… 🙂
ஆகா!என்னே பெருந்தன்மை!!!!!!!!!!!!!!!!
ஆக்கம் பரவாயில்லை சாமி ஆனா, எல்லாத்தையும் புலியின் தலையில் போட்டு எழுதினால்தானே சூடு கிளம்பும்! ம்.. ம்.. பட்டைய கிளப்புங்க தோழ(ல)ர்களே!!