Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 05

இனியொரு... by இனியொரு...
02/22/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
18
Home பிரதான பதிவுகள் | Principle posts

புளொட்டின் பின்தளமகாநாட்டை நடாத்துவதற்கு பின்தளம் சென்றவர்கள் குறிப்பாக நீங்கள், ஈஸ்வரன், சுப்பையா (கெளரிகாந்தன்) போன்றவர்கள் எந்த அரசியல் அடிப்படையில் ஈ.என்.டி.எல்.எப் ல் இணைந்தீர்கள் ?

குலம்.

சில வரலாற்றுக் குறிப்புக்களோடு இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன்.

தளமாநாட்டில் பின்தளத்தில் புளொட் அமைப்பின் பின்தள மாநாட்டை நடத்துவதற்கு ஒரு குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அதில் கெளரிகாந்தன் தீபநேசன், பிரசாத், ஜெயந்தி, முத்து ,ராஜன், தவநாதன், செல்வம், அர்ச்சுணா endlfமுதலியோர் தெரிவு செய்யப்பட்டனர். (இன்னும் சிலபேர் தெரிவு செய்யப்பட்டார்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை. தெரிந்த தோழர்கள் தெரியப்படுத்தவும்) தெரிவு செய்யப்பட்ட இக் குழுவினரோடு தளத்திலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களாகிய குமரன், ஈஸ்வரன், நானும் இணைந்து பின் தளம் சென்றோம்.

அங்கு சென்ற பின்தான் புளொட்டின் அவல நிலை தெரியவந்தது. புளொட் பயிற்சி முகாம்களிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளியேறி இருந்தார்கள். ராஜனோடு கணிசமான தோழர்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவுத் தோழர்கள் வெளியேறி இருந்தனர். மத்தியகுழு உறுப்பினர்களான சரோஜீனி ,ஆதவன் ,பாபுஜீ ,செந்தில் போன்றவர்களும் வெளியேறி ராஜன் குழுவினருக்கு ஆதரவளித்திருந்தனர்.

david_iyaடேவிட் ஐயா, சண்முகலிங்கம், துளசி, யூலி, தங்கராஜா தோழர், மணியம் போன்றோர்களும் ராஜனோடு ஆதரவாக நின்றார்கள். முகாம்களில் எல்லாம் ஓரே குழப்ப நிலை. ஒவ்வொரு நாளும் தோழர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். எங்களால் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. உமாமகேஸ்வரன் குழுவிடமிருந்து பலத்த அச்சுறுத்தல்களும், நெருக்கடிகளும் எம்மை தொடர்ந்தன. எங்களை நம்பி பல தோழர்கள் உமாகுழுவினரோடு முரண்பட்டு முகாம்களிலிருந்து வெளியேறி எங்களிடம் வரத் தொடங்கினார்கள். இது எங்களுக்கு பலத்த நெருக்கடியை தந்தது. எங்களுக்கே பாதுகாப்பு, இருப்பிடவசதி, பணப்பிரச்சனை என்று தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந் நிலையில் ராஜனிடம் எங்களுக்கும், எங்களோடு வெளியேறிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் பாதுகாப்பும், இருப்பிட வசதியும் கோருவதென்று முடிவு எடுக்கப்பட்டது. ராஜன் குழுவினர் இவற்றை செய்து தந்தார்கள். இதன் பின் வெளியேறிய எல்லாத் தோழர்களையும் இணைத்து பின்தள மாநாட்டை நடாத்துவதென முடீவு செய்தோம்.

தஞ்சாவூரில் ஐந்து நாட்கள் இவ் பின்தள மாநாடு நடைபெற்றது. தளத்தில் நடைபெற்ற மாநாடு போன்றே தீர்மானங்களும் செயல் திட்டங்களும் உருவாக்கப்பட்டது. அத்தோடு இம் மாநாடே புளொட்டினுடைய உத்தியோக பூர்வ மாநாடு என அறிவிக்கப்பட்டது. இதன் பின் சென்னையில் பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் நாங்கள்தான் புளொட் என உரிமைகோரி அறிக்கை வெளியிடப்பட்டது. அத்தோடு பெரும்பாண்மை மத்திய குழு உறுப்பினர்கள் உமாவைவிட்டு வெளியேறி இருந்தமையால் மத்திய குழு உறுப்பினர் சார்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கெளரிகாந்தன், வ.ஐ.ச. ஜெயபாலன், தீபநேசன், பிரசாத், ஈஸ்வரன் முதலானோர் கலந்துகொண்டனர். பின் நாங்கள் புளொட் என்ற பெயரில் இயங்கத் தொடங்கினோம். எங்களுக்கு பல பக்கங்களிருந்தும் குறிப்பாக தமிழ்நாடு-இந்திய அரசு சார்ந்த பக்கங்களிருந்து புளொட்டின் பெயரோடு நாங்கள் இயங்குவதற்கு பல தடைகள் உருவாகின. உமாவின் புளொட்டையே அவர்கள் உத்தியோக பூர்வமான அமைப்பாக அங்கீகரித்தார்கள்.

manikathasan_kannanஇக் காலத்தில் உமாகுழுவின் பக்கத்திலிருந்து கொலை பயமுறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கின. பலர் எம்மைவிட்டு வெளியேறத் தொடங்கினர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந் நேரத்தில் இப் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு எம்மை அழைத்த கண்ணன், வாசுதேவா ஆகியோர்களை சந்திக்க அசோக்நகர் காரியாலயம் சென்ற ஈஸ்வரன், நான் அடங்கிய தோழர்கள் மீது மாணிக்கதாசன் நடாத்திய துப்பாக்கி சூட்டில் நான் படுகாயமுற்றேன். தோழர்கள் சிறுகாயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தற்காப்புக்காக தோழர் ஒருவர் சுட்டதில் அவர்கள் பக்கத்தில் ஒருவர் படுகாயமுற்று பின்னர் மரணமானார். . இது எங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், பாதுகாப்பு இன்மையையும் தந்தது. இக் காலங்களில் இலங்கைக்குச் செல்லக்கூடிய தோழர்கள் சென்றார்கள். பல தோழர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் இருப்பிட வசதிகளை தேடிக் கொண்டார்கள்.ஒரு சிலர் வெளிநாடு சென்றார்கள். மிஞ்சியவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம்.

douglasஎங்களோடு மிஞ்சிய தோழர்கள் பெரும்பான்மையானவர்கள் கிழக்கு மாகாணத் தோழர்கள். மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு தோழர்கள். இந் நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் லிருந்து டக்ளஸ் தேவானந்தா, ரமேஸ் (அற்புதன்), அசோக் (சந்திரகுமார்), இப்ராகிம், இராஜமாணிக்கம் ஜீவன் போன்றோர் தனியாக விலகி இருந்தனர். அவர்களோடு நிறையத் தோழர்களும் வெளியேறி இருந்தனர். எனவே இவர்களோடு சேர்ந்து புதிய பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கலாம் என எண்ணினோம். அவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி ஈ.என் .டி.எல் .எப் எனும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை தொடங்கினோம். இந்தப் பெயரை முன்மொழிந்தது ரமேஸ் எனும் அற்புதனகும். நாங்களும் இப் பெயரை ஏற்றுக்கொண்டோம். டக்ளஸ் குழுவினரோடு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்து வந்த பி.எல்.எப்.ரி தோழர்களும், ஈரோசிலிருந்து பிரிந்துவந்த தோழர்களும் இணைந்திருந்தனர். ஈ.என்.டி.எல்.எப்க்கான அரசியல்- இராணுவ அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்புக்கள் தனிநபர் அன்றி கூட்டுத் தலைமைகளாகவே உருவாக்கப்பட்டன. இதில் ராஜனும் ஒருவர். சுமார் ஐந்து மாதங்கள் எங்களுடைய இயங்குதலும், வேலைத் திட்டமும் இருந்தது. அதற்கிடையில் ராஜனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பலத்த முரண்பாடு உருவாகத் தொடங்கிற்று.
இதனால் டக்ளஸ் தேவானந்தா குழுவினர் ஈ.என்.டி.எல்.எப் விட்டு வெளியேறினர். இந்த வெளியேற்றதினால் நாங்கள் ராஜனோடு முரண்பட்டோம். நாங்களும் டக்ளஸ் தேவானந்தா குழுவைத் தொடர்ந்து வெளியேறினோம். ஈ.என்.டி.எல்.எப் உடனான எங்கள் ‘’அரசியல் வாழ்க்கைக் காலம்’’ சுமார் ஆறு மாதங்கள்தான். அதன் பின் ஈ.என்.டி.எல்.எப் க்கும் எங்களுக்கும் எந்த உறவுகளும் இருந்ததில்லை.

வெளியேறிய நாங்கள் மிகவும் கொடுமையான துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்தோம். கிழக்கு மாகாணத் தோழர்கள் என்பதால் உடனடியாக தோழர் களை இலங்கைக்கு அனுப்பமுடியவில்லை. மிக மிக உளச்சுமைகளை இக் காலங்களில் நான் அனுபவித்தேன். தோழர்களை நாட்டுக்கு மிகவும் பாதுகாப்பாக அனுப்பிவைப்பதில் எங்கள் காலம் கழிந்தது. அதன் பின் தோழர் ஈஸ்வரன் நாட்டிற்கு சென்றார். என்னால் செல்லமுடியவில்லை. நானும் மிஞ்சிய தோழர்களும் தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் விவசாயத் தோட்டம் ஒன்றைச் செய்தோம். அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டினோம்.

1992ல் நான் பிரான்ஸ் வந்தேன். அதன் பின் ஒருசில தோழர்களை என் தனிப்பட்ட உழைப்பின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிவைத்தேன். ஏனைய தோழர்கள் இந்தியாவில் இன்றுவரை இருக்கிறார்கள்.இதுதான் நண்பர்களே தோழர்களே ‘’ஈ.என்.டி.எல்.எப் அசோக்கின்’’ வரலாறு !.

அந்நேரங்களில் தோழர்களின் துன்ப துயரங்களிலிருந்து தப்பியோடியவர்களும், இன்று தங்கள் சொகுசான வாழ்க்கைக்கான வளங்களை உத்தரவாதப்படுத்திக்கொண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் பின் ‘’பிழைப்பு அரசியல்’’ செய்யவந்தவர்களுமே இன்று எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். புளொட் தோழர்களின் துயரங்களோடும், கண்ணீரோடும் பங்குகொண்டவர்கள்- அவர்களின் துயரங்களை போக்கியவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுக்களை, கட்டுக்கதைகளை, வதந்திகளை என்றுமே உருவாக்கியதில்லை. அவர்கள்தான் இன்றும்கூட எம்மக்களுக்காக, எம்மால் கைவிடப்பட்ட துயர்கொண்ட எம் தோழர்களுக்காக உதவிக்கரம் நீட்டுபவர்களாகவும் அவர்களின் கண்ணீரை துடைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் பாடுமீன்கள் இருப்தாக சொல்லப்படுகிறதே இது உண்மையா? நீங்கள் இவ் மீன்களின் இசையை கேட்டுள்ளீர்களா?

RANGA

batticaloaநண்பரே, உங்களைப்போல்தான் நானும். வெறும் கேள்விப்படலே. கேட்டதில்லை. என்னுடைய நண்பர்கள் பலர் இவ் இசையை கேட்டதாக கூறியுள்ளார்கள். ‘’சிங்கிங் பீஸ்’’ என அழைக்கப்படும் இவ் இசை ஒருவகை ஊரிகளினால் இசைக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஊரி எனப்படுவது சங்கு இனத்தைச்சேர்ந்தவை என்றும், இவை மட்டக்களப்பு வாவியின் அடியில் காணப்படும் பாறைகளில் படிந்துகிடப்பனவென்றும், நீர் கலங்கமற்று, வானமும் கலங்கமற்ற காலமாகிய சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் பெளர்ணமி நிலவு காலங்களில், நீரின் அடியிலிருந்து ஓசை இடுவதாக இப் பகுதிகளில் வாழும் அனுபவம் வாய்ந்த மீன்பிடியாளர்கள் கூறுவதாக மட்டக்களப்பு தமிழகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. விபுலாந்த அடிகளார் இதுபற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். விபுலாந்த அடிகளார் இவ்விசையை ‘’நீரக மகளீர் இசை’’ என அழைக்கிறார்.

சிலர் நூற்றுக்கணக்கான வயலின் கொண்டு இசைக்கப்படும் ஒலி வடிவத்தை ஒத்ததாக இது இருப்பதாக கூறியுள்ளார்கள். இது பற்றி இவ் இசையை கேட்டவர்கள்- தெரிந்தவர்கள் தெரிவித்தால் நல்லது.

புளொட் உட்கட்சிப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது ?.

விஜய் -இலங்கை

இதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடியும். அடிப்படையில் புளொட் ஒரு புரட்சிகர அமைப்பல்ல. அது புரட்சிகர மேற்கோள்களை கோசங்களாக முன்வைத்ததேயன்றி மார்க்ஸியத்தின் வழிகாட்டலின் ஊடாக தன் பயணத்தை தொடங்கவில்லை. மத்தியதரவர்க்க குணாம்சம் கொண்டவர்கள் பெரும்பான்மையாகவும், புரட்சிகர சக்திகள் சிறுபான்மையினராகவுமே இருந்தனர்.

இவர்களும்கூட அடையாள இருப்புக்காக ‘மார்க்ஸிய சொல்லாடல்களை’ சொல்லிக்கொள்வோர்களாகவே காணப்பட்டனர். ஒரு புரட்சிகர கட்சிக்குரிய அரசியல் கோட்பாடுகளையும் அதன்வழியமைந்த செயல்பாடுகளையும் போராட்ட குணாம்சங்களையும் கொண்டிராத, அதிகாரமும் கண்காணிப்பும் கொண்ட ஒரு சர்வாதிகார மையமாகவே தலைமை இருந்தது.

இந்த மையத்தை கைப்பற்றுவது அல்லது அதன் மீது தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வது என்பதிலேயே புளொட்டினுடைய உள்ளக முரண்பாடு தொடங்கியது. இவ் அதிகாரப்போட்டியை உட்கட்சி போராட்டமாக ஒரு பகுதி பின்தளத்தில் ‘’படங்காட்ட’’ பல நல்ல தோழர்கள் இதனால் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டார்கள். இதுவே பின்தள உட்கட்சி போராட்ட வரலாறாக இருந்தது.

ஆனால் தளத்தில் சூழ்நிலை வேறுகொண்டமைந்தது.மத்தியதர வர்க்க குணாம்சத்தை கொண்டிருந்தபோதிலும் அரசியல் மயப்பட்ட மக்கள்நலன் சார்ந்த போராட்ட உணர்வு கொண்டவர்களாக தோழர்கள் இருந்தார்கள். மக்களோடு மக்களாக களப்பணியாற்றியதால் ஏற்பட்ட அனுபவபூர்வமான ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சிந்தனைகளும், தோழர்களை மார்க்ஸிய வழிப்பட்ட போராட்ட முறைமைகள் மீது ஆர்வத்தையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியிருந்தன. தளப்பிரதேசம் ஓரளவு ஜனநாயக தன்மைகளை கொண்டதாக இருந்தது. இதனால் புளொட்டின் அதிகார தலைமைக்கெதிராக தளத்தில் உட்கட்சிப்போராட்டம் நடாத்துவதில் வெற்றிபெற முடிந்தது.

ஆனால் பின் தளத்திற்கு நாங்கள் சென்றபோது உட்கட்சிபோராட்டத்தை நடத்துவதற்கான தத்துவார்த்த அரசியல் செயலூக்கம் கொண்ட எந்த வெளியும் ஜனநாயகமும் அங்கு காணப்படவில்லை. அதிகாரமும் கண்காணிப்பும் பயமுறுத்தல்களும் எங்களையும் அங்குள்ள தோழர்களைளயும் தோல்வி அடையச் செய்துவிட்டன.

umamaheswaranஅத்தோடு பின் தளம் எங்களுக்கு பழக்கமற்ற புதியதொரு வெளி. அங்கு எங்களுக்கான ஆதரவு சக்திகளோ, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடுகளோ எதனையும் எங்களால் சுயமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை. உட்கட்சி போராட்டத்தின் மையக்குறியான இயக்க தலைமை மிக கொடூர மானதாகவும், இந்திய- தமிழக அதிகார மையங்களோடு அதன் பிணைப்பும் எங்களை வலுவிழக்கச் செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.
இவை என்னுடைய பார்வையாக இருந்தாலும் உண்மையில் புளொட்டினுடைய உட்கட்சிப் போராட்டத்த்தின் தோல்வியை அரசியல் சமூகப் பார்வை கொண்டு மேலும் ஆராய்வது ஆரோக்கியமானது.

முன்னயவை:

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 02
அசோக் யோகனிடம் கேள்வி…..

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு : குண்டுபோடும் அமரிக்காவின் அக்கறை

Comments 18

  1. அரிச்சந்திரன் says:
    13 years ago

    தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களிடம்…

    ‎”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?”

    -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது.

    “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.

    – முகநூல் –

    துப்பாக்கியை வேரொறுவர்
    எடுத்து அநீதிக்கு எதிராக
    போராடுவார்கள் என்றால் நான்
    கொல்லப்படுவதை பற்றி கவனம்
    செலுத்தமாட்டேன்”
    _சேகுவேரா

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Late Dr. Ambalavaner Sivarajah (1944), Professor of Political Science, Peradeniya Campus came to the Devanayagam Hall and gave a talk titled, Third Party Mediation as President Chandrika Bndaranaike Kumaranatunga used to call and chat with him. Honourable Ranil Wickremasinghe kept his word with lawyer politician N. Srikantha and laid the foundation stone in 2002 to bring last peace to this beautiful island paradise. He of course met the fate of Dr. Earnesto de Che Guevarra and Rohana Wijeweera on May 18, 2009. United States Army Central Command at Fort Myers, Florida, USA. 

    • C.kumar says:
      13 years ago

      தமிழ் இயக்கங்களின் தலைவர்களின் மனநிலையும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. பின்னர் மாறிவிட்டது. பிரபாகரனும்  இறுதிக்கட்டத்டில் சதாம் ஹூசேன், ஹிட்லர் போன்ற நிலைக்கு மாறிவிட்டார்.

  2. mahen masil says:
    13 years ago

     இந் நேரத்தில் இப் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு எம்மை அழைத்த கண்ணன், வாசுதேவா ஆகியோர்களை சந்திக்க அசோக்நகர் காரியாலயம் சென்ற ஈஸ்வரன், நான் அடங்கிய தோழர்கள் மீது மாணிக்கதாசன் நடாத்திய துப்பாக்கி சூட்டில் நான் படுகாயமுற்றேன். தோழர்கள் சிறுகாயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தற்காப்புக்காக தோழர் ஒருவர் சுட்டதில் அவர்கள் பக்கத்தில் ஒருவர் படுகாயமுற்று பின்னர் மரணமானார். 
    **************************************************************************************************
    கனம் கோட்டார் அவர்களே! இந்த சம்பவத்தில் அசோக் பொய் சொல்லுகிறார்
    விரைவில் உண்மை வெளிவரும் தற்காப்புக்காக சுட்டவர் ஆதவன்(யக்கடையா) என்று சொல்லி அசோக் நழுவுவார் ஏனெனில் ஆதவன் இறந்து விட்டார் ஆனால் சுட்டவர் உயிருடன் உள்ளார். முந்தினால் தப்பலாமென நம்பி மீன் தூண்டிலுக்கு வந்திருக்கு.

  3. செய்வினை says:
    13 years ago

    1987 இல் வெளிநாட்டிலிருந்து வந்த பணத்தை வாங்க வந்தவனுக்கு,வாசலில் வைத்து(அன்றும் முடியற்ற மனிதனாக உங்கள் முகம் ) அனுப்பியதும்,பின் அவன் மீண்டும் வந்த போது,பரந்தன் ராசனால்,அவனுக்கு கொலை மிரட்டப்பட்டதும் ஞாபகம் இருக்கிறதா அசோக்? இருந்தால் அது பற்றி விபரம் தேவை.

  4. mahen masil says:
    13 years ago

    புளொட் உட்கட்சிப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது ?.
    விஜய் -இலங்கை
    இதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடியும். அடிப்படையில் புளொட் ஒரு புரட்சிகர அமைப்பல்ல. அது புரட்சிகர மேற்கோள்களை கோசங்களாக முன்வைத்ததேயன்றி மார்க்ஸியத்தின் வழிகாட்டலின் ஊடாக தன் பயணத்தை தொடங்கவில்லை. மத்தியதரவர்க்க குணாம்சம் கொண்டவர்கள் பெரும்பான்மையாகவும், புரட்சிகர சக்திகள் சிறுபான்மையினராகவுமே இருந்தனர்.
    *****************************************************************************************************
    உண்மைதான் அசோக் நானும் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அந்த இயக்கத்தின் மத்தியகுழுவிலும் பதின்ம வயதை கடந்த அரசியல் முதிர்ச்சியுடனும் போய் சேர்ந்தீர்களே ராஜன் குழு, ஈஎன்டிஎலெவ் இவற்றை அமைப்பென்று கூற முடியுமா? இதன் மூலம் தங்களை எந்த தராசில் வைத்து அளவிடுவது.

  5. kiruban says:
    13 years ago

    நண்பர் அரிச்சந்திரன் நீங்கள் சுமந்திநிற்கும் பெயரின் மதிப்பினை உணர்ந்தாவது உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள் . தேசியத்தை தலையில் சுமக்கும் தலைவர் அப்படித்தான் சொல்வார் … அதை நம்ம வாசகர்கள் என்ன வரலாறு தெரியாதவரகளா? இதற்கு சேகுவேரா வின் பெயரைஎல்லாம் குறிப்பிட்டு அந்த உண்மைபோராளிமீது சேறடிக்காதீர். இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு ஒப்பானது உம்மைப்போன்றவர்கள் சேகுவேராவை ஈழபோராட்டத்துடன் சம்மந்தப்படுத்துவது. அசோக் எதையோ பற்றி எழுத நீர் வேறு எதையோ பற்றி சம்மந்தம் இல்லாமல் எழுதுசிறீர்.
    அசோக் எழுதும் கம்பவங்களில் உள்ள உண்மை பொய்களுக்கப்பால் மாக்சிய லெனினிய கொட்பாடுகளை வெறும் கொசமாக கொண்டு தம்மை இடதுசாரிகள்க காட்டிக்கொண்ட இயக்கதலைமைகளுக்குள் சிக்கிக்ய உண்மையான நேசிப்புடைய தோழர்கள் தாம் சார்ந்த இயக்கத்தையும் அதில் சிக்குண்ட தோழர்களையும் மீட்பதற்கு மேற்கொண்ட போராட்டங்கள் தாங்கிக்கொண்ட துன்பங்கள் கொலைஅச்சுறுத்தல் தலைமறைவுவாழ்க்கை காடுகளில் தஞ்கம் பசி பட்டினி …. இதில் உயிரை இழந்த உன்னதமான தோழர்கள் போக எஞ்சியவர்கள் மரணத்தின் வாசல் வரை சென்றுவந்தவர்களே இவர்களது தியாகங்களும் வரலரற்றில் குறித்துக்கொள்வதுடன் கற்றுத்தந்த பாடங்களாகவும் அமையவேண்டும்…. ஆனாலும் இவ்வாறான அனுபவங்களுக்கூ டாக மீண்டுவந்த பல தோழர்கள் பின்நாட்களில் சந்தற்பவாதிகளாக மாறிவிட்டது துரதிஸ்டமானது.

    • அரிச்சந்திரன் says:
      13 years ago

      நண்பர் கிருபன், தங்கள் வாசகர்களுக்கும் வரலாறு தெரியும் எமக்கும் தெரியும் அதைவிட அம்மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு எங்கள் அனைவரினதும் வரலாறுகளும் கூத்துகளும் நன்கு தெரியும். எவரை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். அதை விடுங்க.
      தோழர் கிருபன், சேகுவேரா அவர்களுக்கு உங்களைப்போன்றவர்கள் அள்ளி அடித்த சேற்றைவிட எங்களைப்போன்றவர்கள் அதிகம் அடித்து விடவில்லை.. ஏன்? எங்கள் அனைவரையும் விட சேகுவேரா அவர்களின் மனைவி எலிடியாவும் அவரின் உறவுகளும் அவருக்கு வாரியடித்த நாத்த சேற்றைவிடவா நாம் அதிகம் அடித்துவிட்டோம்? அதுதான் தாங்கள் ஒப்புக்கு போர்குற்றம் என்று விளித்துள்ளீர்களே அந்த போரின் குற்றவாளியான மகிந்த மாத்தையாவையும் அவர் பரிவாரங்களையும் அவர்கள் கட்டித்தழுவி விருந்து கொடுத்து நினைவுப்பரிசுகளும் கொடுத்தனுப்பியதைதான் சொல்லுகின்றேன். இதைவிட அந்த உண்மையான போராளிக்கு யார் சேரடிப்பார் சொல்லுங்கள்.
      இங்கு யார்தான் சம்பந்தத்தோடு எழுதுகிறார் கிருபன். அதுமாதிரித்தான் நானும். அசோக் யோகனுக்கும் எனக்கும் ஒரே ஒரு சம்பந்தமட்டுமுண்டு மீன்பாடும் தேனாடு என்பதுதான் அது. கட்டுரைகளும் கதை அவிழ்ப்புகளும் எங்களாலும் நிறைய எழுத முடியும் இங்கு காணும் புதினங்களை விட ஆனால் ….

  6. ஓணான் says:
    13 years ago

    “நான்  PLOTE லிருந்து குப்பை கொட்டும்வரைக்கும் PLOTE நல்லாய்த்தான் இருந்தது, எப்ப எனக்கு பிரதேசவாதத்தை இந்தியா ஊட்டியதொ அப்போதிருந்து PLOTE கெட்டுப்போச்சு” இச்சுருக்கதை எப்படி சுத்திப் பிளிஞ்சாலும் இதுதான் சக்கை 

  7. karan says:
    13 years ago

    அசோக் நீங்கள் தளத் தோழர்களை முற்போக்காக காட்டப்பாக்கிறுர் . தளக் கமிட்டியைச் சேர்ந்த முத்து என்பவர் பம்பாய் கப்ரன் ரவி என்ற வாமதேவன் கும்பலோடும் பாலமோட்டை சிவத்தோடும் எந்தவகையில் உறவு வைத்தார். பம்பாயில் இவர் என்ன செய்தார். சொல்லமுடியுமா?

  8. தயாளன says:
    13 years ago

     அசோக்

    ஈ.என்.டி.எல்.எப் விட்டு  வெளியேறிய நாங்கள் மிகவும் கொடுமையான துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்தோம். கிழக்கு மாகாணத் தோழர்கள் என்பதால் உடனடியாக தோழர்களை இலங்கைக்கு அனுப்பமுடியவில்லை. மிக மிக உளச்சுமைகளை இக் காலங்களில் நான் அனுபவித்தேன். தோழர்களை நாட்டுக்கு மிகவும் பாதுகாப்பாக அனுப்பிவைப்பதில் எங்கள் காலம் கழிந்தது. அதன் பின் தோழர் ஈஸ்வரன் நாட்டிற்கு சென்றார். என்னால் செல்லமுடியவில்லை. நானும் மிஞ்சிய தோழர்களும் தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் விவசாயத் தோட்டம் ஒன்றைச் செய்தோம். அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டினோம்.

    – ஏன் நீங்கள் LTTE யுடன் இனைய முயற்சிக்கவில்லை ?

    – இந்த காலகட்டத்தில் உங்களுடன் இருந்தவர்கள் யாராவது LTTE யுடன் இணைந்தார்களா ?

  9. செய்வினை says:
    13 years ago

    //டேவிட் ஐயா, சண்முகலிங்கம், துளசி, யூலி, தங்கராஜா தோழர், மணியம் போன்றோர்களும் ராஜனோடு ஆதரவாக நின்றார்கள்.//…….அசோக்

    இந்தக் கட்டுரை வெளிவந்த சமயத்தில்,இதில் குறிப்பிட்ட சண்முகலிங்கம் என்பவர்,கனடாவில் காலமாகிவிட்டாரென செய்தி வந்தது.இது,அவரை அறிந்தவர்களுக்காக,என்னால் எழுதப்படும் சேதி மட்டுமே.

  10. அசோக் says:
    13 years ago

    மகேன் மாசில், நீங்கள் எல்லா விடயங்களையும் முன் முடிவுகளிலிருந்தும் அனுமானங்களிலிருந்துமே பார்க்கின்றீர்கள். ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆய்வு- ஆராய்தல் , உண்மையைத் தேடல் , சரியான முடிவுகளுக்கு வருதல் என்ற எதுவுமே உங்களிடம் இல்லாமல் இருப்பது கவலை தருகிறது. இயல்பான மத்தியதர வர்க்க மேலாண்மை சமூகத்திற்குரிய பகை உணர்ச்சி , பொறாமை , கொள்ளல் பலிவாங்குதல் , அவமானப்படுத்தல் போன்ற குணாம்சங்களால் நீங்கள் ஆட்கொள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றீர்கள். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது ஆய்ந்து -ஆராய்ந்து உண்மைத் தன்மையோடு வைத்தல் உங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. முன் ஒரு பின்னூட்டத்தில் நான் ஒரு கொலையை செய்ததாக என்னை கொலைக் குற்றவாளியாக்கினீர்கள்!. இது சட்டப் பிரச்சனை என்பதால் இனியொருவிலிருந்து நீக்கப்பட்டது. (இது தொடர்பாக நான் சட்ட நடவடிக்கை எடுப்பதால் இது பற்றி பின்னர் கதைப்போம்) இப்போது இந்த சம்பவத்தில் இன்னொருவரை மீது கொலைக் குற்றம் சாட்டுகின்றீர்கள். இந்த ‘’வதந்தி கிளப்பும் மனநோய்’’ ஆரோக்கியமானதல்ல. இணைய வெளியின் செயல்பாடுகளை அதன் பாதக- சாதக அம்சங்களை தயவு செய்து விளங்கிக் கொள்ள முயலுங்கள். தோழர் கால் மார்க்ஸ் சொன்னதுபோல் ‘அனைத்தையும் சந்தேகியுங்கள்’. ஆனால் வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்.

    இத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தோழர் பொலிசில் சரணடைந்து சிறைத்தண்டனை பெற்று பின் விடுதலையாகி இன்று புலம்பெயாந்த நாடொன்றில் வாழ்கின்றார் என்பதும் , அவர் அரசியல் வாழ்விலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
    தயவுசெய்து மீண்டும் உங்கள் ‘’வதந்தி கிளப்பும் கற்பனை குதிரையை’’ தட்டி எழுப்பி இன்னும் சிலர் தோழர்களின் பெயர்களை பட்டியல் இட்டு அவர்களையும் கொலைக் குற்றவாளி ஆக்கிவிடாதீர்கள் நண்பரே.

  11. Mani says:
    13 years ago

    அசோக் தோழர் தொடரை வாசிக்கிறேன். மறைக்கப்பட்ட சம்பவங்கள் வெளியெ கொண்டுவருகிறீhகள். நன்றி இல்லாவிட்டால் சிலபேர் விதம்விதமாக வரலாறு சொல்லுவார்கள். இப்போது பிண்ணூட்டம் எழுதுபவர்களைப்பார்த்தால் இது தெரியும். கேள்விச் செவியன் ஊரைக்கெடுப்பான். இதைதான் ஒராள் தொடர்ந்து உங்களுக்கு எதிராக செய்கிறார் போல் தெரிகிறது. நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.புளாட் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் நீங்கள் எழுத வேண்டும். உடப்பு பொன்னுத்துரையை உங்களக்குத் தெரியுமா அவருக்கும் முகுந்ததுனுக்கும் கடைசில் நேரத்தில் பெரிய பிரச்சனை நடந்தது.இதைப்பற்றி தெரியுமா. தெரியுமானால் இதையெல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

  12. Vijey says:
    13 years ago

    அசோக்..
    பதில்கள் பெறுமதியானவை. கடந்த காலத்தின் பதிவுகள். தெளிவாக இப்போதுதான் முன்வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
    மற்றப்படி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், தன்னுடன் பழகியவர்களிடம், புலிகள் குறித்து முன்வைத்த விமர்சனமானது நமது கவனத்திற்குரியதாகும்.
    “படிமுறைச் சமூக சமூகமொன்றில் இவ்வாறனதொரு இயக்கம் தான் தோன்ற முடியும்”
    ஆக,
    நமது கடந்த காலம் – அதுதான் யதார்த்தமான சூழல் – தற்போது பதிவகளாக வருகிறது.

    கடந்த கால செயற்பாடுகள் புனிதங்கள் அற்றவை.
    நமது போராட்டமும் சிந்தனைகளும் பிரச்சினைகளை எதிர்கொண்ட முறைகளும் பதிவாக வரட்டும்
    முடிந்தால் அதிலிருந்து கற்றுக் கொள்வோம்.
    விஜய்

  13. S.G.Ragavan says:
    13 years ago

    அசோக் அவர்களே!
    ஈஸ்வரன் பின்னாளில் மீண்டும் பிளாட் (DPLF ) அமைப்பில் இணைந்தாரா? மலையக மக்கள் முன்னணி, தலைவர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக இருந்த சமயம் இலங்கை படை புலன் ஆய்வாளர்களால் கடத்திச் செல்லப் பட்டு காணாமல் போகச் செய்யப் பட்டாரா? ஈஸ்வரன் பற்றிய தகவல் என்ன?

    பிளாட் அமைப்பு அழிவடைய தமிழ் சமுகம் மத்தியில் ஏலவே நிலவி வந்த சமூகச் சிந்தனைகள் பிரதேச சமுக வேறுபாடுகளுடன் அமைப்பில் நிலவிய சமச் சீரற்ற தொடர்பாடல்கள் என்பவற்றுடன் பின் தளத்தில் நிலை கொண்டதால் “ரா” அமைப்பின் ஊடுருவலும் காரணமாக இருந்ததா?

    பிளாட் அமைப்பு பின்தளத்திலும் , தளத்திலும் சிதைந்து போக சிவராம் காரணமாக இருந்தாரா? (குறைந்த பட்ச காரணமாவது இருந்ததா?)

    EPRLF இல் டக்லஸ் தேவானந்த , பிளாட் மாணிக்க தாசன், LTTE அமைப்பில் கிட்டுவின் உதவியாளரக இருந்த தற்போது கனடாவில் வசிக்கும் ரகீம் போன்றோர் இலங்கை அரசின் புலன்ஆய்வுப் பிரிவால் உள்ளிருத்திகளாகப் பயன் படுத்தப் பட்டனர் என்பது உண்மையாக இருக்குமா?

  14. Red land says:
    13 years ago

    ///அந்நேரங்களில் தோழர்களின் துன்ப துயரங்களிலிருந்து தப்பியோடியவர்களும்இ இன்று தங்கள் சொகுசான வாழ்க்கைக்கான வளங்களை உத்தரவாதப்படுத்திக்கொண்டுஇ முள்ளிவாய்க்காலுக்குப் பின் ‘’பிழைப்பு அரசியல்’’ செய்யவந்தவர்களுமே இன்று எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள் ///.அசோக்.
    நீங்கள் சொல்வது 100 க்கு 100 வீதம் உண்மை.

  15. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    One monk said on national television that there are seventeen groups. I am adding the eighteenth one – VPOS – Dr. Velupillai Puvanesarajah and Others. Research Triangle. North Carolina, USA. Velupuvy@aol.com. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...