இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை உடன் விடுதலை செய்யுமாறு கோரி அக்குறணை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் தொழுகையை தொடர்ந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. தொழுகையை தொடர்ந்து அக்குறணை நகரில் ஒன்று கூடிய பெரும் திரளான மக்கள் ‘முஸ்லிம் உரிமைகளை பேசிய அசாத் சாலியை விடுதலை செய்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாளத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
கைது செய்யப்பட்டு நாலாம் மாடியினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் உண்ணாவிரதத்தினில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய ஒருமைப்பாடு என்று அரசியல் பிழைப்பு நட்த்தும் அடிபடைவாதிகள் ஆசாத் சாலியை மைகிந்த சர்வாதிகார அரசு கைது செய்தமை குறித்து மூச்சுக்கூட விடவில்லை. சாதாரண மக்களே போராடுகிறார்கள்.