உலகத் தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் முழுமூச்சுடன் , உத்வேகத்துடன் எழுதத் தொடங்கி மிகுந்த கவனத்தைப் பெற்ற படைப்பாளியாகத் திகழ்கின்றார். தனது கதை சொல்லும் பாணியினால் அனைவரது கவனத்தையும் பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஐம்பதாண்டு கால இலக்கியப் பணியினைக் கெளரவிக்கும் முகமாகக் காலம் சஞ்சிகை விழாவொன்றினை எதிர்வரும் 23ந் திகதி எடுக்கின்றது.
23 May, Saturday 2009 (5pm- 7pm)
Munk center, 1 Deronshire place, Toronto University
சிறப்பு பேச்சாளர்: கருணாகர மூர்த்தி (எழுத்தாளர்)
சிறப்பு விருந்தினர்: எம்.ஏ. நுஃமான் (தமிழ்துறைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்). வாழும் தமிழ் புத்தகங்களின்; கண்காட்சியும் இடம் பெறும் (12pm-7pm)
காலம் / kalam@tamilbook.com/ 416-7311752








எப்போதும் போலவே உனது இராடசியங்களுடன் மட்டும் கனவை நிறுத்து.
பாதங்களில் அப்பிய ஒரு அவலத்தின் கடைசி வாpயும் வீங்கித் தொpகிறது.
இருண்டு போன கண்களுடன் மிகத் தொலைதூரத்தில் எறிந்து விட்ட விரல்களைப் பற்றிப் பிடிக்க நாம் ஏன் நமது விரல்களை அறுத்தெறிய வேண்டும்?
இறுகப் பற்றியிருக்கும் நமது விரல்களை விலத்தி குழந்தையை யார் அழைத்துப் போவது?
எனது குழந்தையின் மரணம் உனக்கு ஒரு தேசம் தரும் என்று எழுதிவைத்த பொய்யை யார் அவிழ்ப்பது?
ஐம்பது என்ன அறுநூறு வருடங்களானாலும் அவிழ்க்க முடியாத விதை அது.
கற்சுறா
அடாது மழை பெய்தாலும் தொடாந்து மக்கள் கொல்லப்பட்டாலும் விடாது செல்வம் புத்தகக் கண்காட்சி நடாத்துவார். இவரது பணி பணம் நிரப்புவதே.
வாழ்க செல்வம் வளா;க பணம்