இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு சாரி சாரியாக மக்களை கொன்று குவித்த போது உலகம் முழுவதும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஐ.நா சபை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக நாடகமாடிக் கொலைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. உலகின் அதிகார மையங்களான அனைத்து நாடுகளும் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டன. தமிழ்த் தலைமைகள் இந்த நாடுகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இனக்கொலையாளிகளாலும், வியாபார வெறியர்களாலும் தமிழ் மக்கள் சூழப்பட்ட இந்த ஐந்து வருடங்களில், நிலங்க்கள் பறிக்கப்பட்டன, வடக்கும் கிழக்கும் இராணுவமயமாக்கப்பட்டு இராணுவத்தின் காலடியில் வாழுமாறு மக்கள் உத்தரவிடப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டனர், சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்கிறது.
இனச்சுத்திகரிப்பினுள் தமிழ் மக்கள் வாழும் அதே வேளையில் அரசியல் தலைமைகள் அதனை வியாபாரமாக்கிக் கொண்டன. உலகம் முழுவதும் அகதிகள் விதைக்கப்பட்டனர். இலங்கை அரச பாசிசத்தின் கொலைக் கரங்களிலிருந்து தப்பிச்சென்றவர்கள் இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம். இந்தியா போன்ற நாடுகளிலும் ரோகோ,பெனின்,தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் அனாதரவாக விடப்பட்டனர். இவர்களின் அனாதரவான நிலை குறித்து தமிழ்த் தலைமைகள் கவனத்தில் கொள்ளவில்லை.
அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனம் UNHCR உலகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளைக் கண்டுகொள்வதில்லை. கடந்தவாரம் இந்த நிறுவனத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மலேசியாவிலிருந்து இலங்கை அரசின் கொலைக்கூடத்திற்கு நாடுகடத்தப்பட்டனர்.
இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்ததை நடத்தி அகதிகளை விடுவிப்பதற்கோ, மலேசிய அரசு மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ UNHCR எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் உலகம் முழுவதுமுள்ள அகதிகளைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட அகதிகளை மீள அழைக்குமாறு கோரியும் சமூக உணர்வுள்ளவர்களின் இலாப நோக்கற்ற போராட்டத்தின் அவசியம் உணரப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனிலுள்ள அலுவலகத்தின் முன்பதாக 06.06.2014 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து அகதிகளுக்கான போராட்டக்குழுவினால் இனியொரு இணையத்தின் ஆதரவுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முகவரி:
UNHCR (UN Refugee Agency)
Strand Bridge House
138 – 142 Strand
London
WC2R 1HH
காலம்: 06.06.2014 (வெள்ளி) நேரம்: மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை.
-அகதிகளுக்கான போராட்டக்குழு
இப்படியான போராட்டங்கள் நிச்சயம் தேவை. அண்மையில் மலேசியா போன்ற நாடுகள் நமது இனத்துக்கு நடந்த கொடுமைகள் தெரியாமல் அந்த மூவரையும் அனுப்பியதா? எனவே ஆசிய நாடுகளிலும் இப்படியான போராட்டங்கள் மூலம் எமதினத்தின் அழிப்புகளை பரப்ப வேண்டும்.
30 வருடத்திற்கு மேலாக இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கடுமையான போர் காலங்களிலும் கூட தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் புலமபெயர்ந்து வாழும்நாடுகளோ அல்லது அகதிகள் சம்பந்தமான நிறுவனங்கள்
மட்டுமே காரணமல்ல.
அகதி அந்தஸ்த்து கிடைத்ததும் இலங்கைக்கு போய் வந்த தமிழர்கழும்தான். புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 75 %க்கு மேலானவர்கள் அகதிகளாக வந்து குடியேறியவ்ர்கள்தான். இவர்களில்
வதிப்பிட அனுமதிகள் கிடைத்தவுடன் இலங்கை போய்வராதவர்களை
விரல் விட்டே எண்ணலாம்.
இலங்கைத்தமிழர் தாம் விடும் தவறுகளை முதலில் திருத்தாமல்
உலகில் எந்தநிறுவனமோ நாடுகளோ உதவும் என எதிர்பார்த்தால்
ஏமாற்ரமே கிடைக்கும்.
What’ wrong in them visiting SL again? Who told you that is the reason they are being tight on asylum seekers now? When you have residence in the West it gives them additional security when they visit SL again. I know there are number of people who did not go back for fear of persecution. And this this not just with SL refugees, people from other nations too have done it.
இலங்கைத்தமிழரென்றால் சிங்களவராலும் அரச இராணுவத்தாலும்
தாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்துக்கு முக்கியமில்லாது
போயுள்ளது. அதுமட்டுமல்ல தனிப்பட்ட ஒவ்வொருவரின்
அரசியல் ஈடுபாடுகளை மட்டுமே கருத்திற்கொள்கின்றார்கள்.
இதனால் தான் 5 முதல் 10 வருடம்வரை எதுவித முடிவுமின்றி
இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள்.
பெருந்தொகையான பணத்தை கையில் வைத்திருந்தால் எந்தக்
குற்ரம் செய்திருந்தாலும் இலங்கையில் எதுவித பயமுமின்றி
போய்வரலாம்.
Some times that itself ie having a lot of money becomes the reason for them go after the Tamils.
இராணுவ அடக்குமுறையின்கீழ் மக்கள் வாழ்ந்தாலும் நேரடியான உயிராபத்து எதுவும் இல்லை என்றே வெளியுலகம் கருதுகிறது, அதற்கு ஆதரவாக அரசசாா்பு தமிழ் தலைமைகள் இந்த நாடுகளுக்கு தவறான செய்திகளை வழங்குவதால் மேலும் நிலமை மோசமாகிறது.
இலங்கைத்தமிழா்களைப்பொறுத்தவரையில் தற்சமயம் யாருமே அங்கு வாழ விரும்பவில்லை காரணம் இராணுவ அடக்குமுறை மட்டுமல்ல பொருளாதார பிரச்சனையும்,குடும்ப உறவுகள் வெளிநாடுகளில் வாழ்வதால் தாமும் அவா்களுடன் இணைந்துவிட்டால் என்ன என்ற காரணங்களும் அடங்கும்.இதற்கு முடிவு எப்போது என்பதே கேள்வி.