Tag Archives: Labour

சிரிய அகதிகளை அனுமதிக்க கோரி இலண்டன் மக்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்..

Refugees welcome, not arm dealers

இன்று லண்டன் மாநகரில் “அகதிகளை வருவதற்கு அனுமதிக்கவும்” என்று கோரியும், “ஆயுத விற்பனை வேண்டாம்” என்று கோரியும், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்களினால் மற்றும் பொது மக்களினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர்கள் சிலர் பங்கு கொண்டதையும் அவதானிக்ககூடியதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தங்களை தாங்களே ஆள விருப்பங்கொண்டவர்கள், என்பதனை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன், ,மனித உரிமை , மற்றும் அகதிகள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட முன்வந்தமை, பராட்டுக்குரியதும் ஆகும்.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், அதிக தமிழர்கள் கலந்து கொள்ளாதது, வருத்தத்திற்கு உரியது என்பதுடன், இன்றும், புலிகள் பற்றிய கோசத்தை மட்டும் முன்வைத்து, போராட்டத்தை மந்த கதியில், எதனை நோக்கி நக‌ர்த்துவது என்பதே தெரியாத ஒரு வழியில், மக்களை மந்தைகளாக்கி, போராட்டம் பற்றிய, சில போதுமான, தேவையான தகவல்களை தருவிக்காது, தமக்கேயான உரிமையை, இலகுவாக, சுய நிர்ணய உரிமையின் மூலம், மற்றைய இன மக்களுடன் இணைந்து, எவ்வழியில் முன்னெடுத்துச் செல்லலாம், என்பதனை பற்றிய, தொலைநோக்கு சிந்தனை இன்றியும், மக்களை எவ்விதத்தில் அரசியல்மயப்படுத்தி, தமது உரிமைகளை வென்றெடுக்கச் செய்யலாம் என்பதனையும், புரிய வைக்காமல், ஜெனீவா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையென மட்டும் நம்பி நிற்காமல், போராடுவது எவ்வழியில் என்பதனை அறிந்த, சில தன்னார்வம் கொண்ட செயற்பாட்டாளர்களை புறக்கணிக்காது, அவர்களை மக்களிடம் துரோகிகளாக்கி, மந்தகதிப்படுத்தாது, அவர்களினயும், சகலரினையும் இணைத்து, போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய அவசியம், தற்போதைய நிலமையில், மிக மிக அவசியம் ஆனதாகும்.

இலண்டன் வாழ் நகர மக்கள், தமது வேலைகளை பொருட்படுத்தாது, ஆயுத விற்பனையாளர்களுக்கு எதிராகவும், “Welcome Refugees, Not Arms Dealers” என கோசம் எழுப்பி, சிரிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, அகதி அந்தஸ்து வழங்கிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்தியது மட்டும் அன்றி, தம்மால் இயன்ற வழிகளில்,” ExceL Centre”ல் DSEi ஆயுத விற்பனைக்கான கண்காட்சி நடைபெறுவதினை, கடந்த ஐந்து நாட்களாக தடுக்க போராடி வருகின்றனர் என்பதோடு, இன்று தம்மால் இயன்ற மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தினை நடத்தி, தங்களிடம் உள்ள பலத்தால், நகரை சிறிது மணி நேரம் ஸ்தம்பிக்கச்செய்ததுடன், நகரின் பல பாகங்களிலும் இருந்து வந்து, சிறப்பாக ஆயுத கண்காட்சிக்கான ஆயுத வருகையினையும், தடுத்து நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோபின் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் ( ஜெரமி கோபினின் உரை பற்றிய காணொளி – https://www.youtube.com/watch?v=RwTuedChp6c  ) ஆர்ப்பாட்டத்தில், பறை – சுதந்திரத்திற்கான குரல் அமைப்பு, மற்றும் தமிழ் அகதிகளுக்காக மற்றும் தமிழ் மக்களுக்காக‌, தாம்மாலான வழிகளில், மற்றைய இன அமைப்புக்களுடன் போராடும், தமிழ் போராட்டக்குழுவான தமிழ் இணைந்தோர் அமைப்பு “Tamil Solidarity” ( https://www.facebook.com/TamilSolidarity2009?fref=ts )” என்பன,

Protest

தம்மாலான வழிகளில் சிறிது பங்கினை ஆற்றியதுடன், தமிழர்கள் இன்னும் இன்னும் அரசியல் ரீதியாக‌ வளர வேண்டியதன் அவசியத்தினையும், மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து, பொது திட்டமொன்றினூடாக, சகலரும் இணைந்து, ஒற்றுமையுடன், ஈழ தமிழர்களிற்கான விடிவினை நோக்கி, பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும், புரிந்து கொண்டு, இளையவர்களை பணிகளிற்கு அமர்த்தி, அவர்களிற்கான போதிய அறிவுகளை வழங்கி, இனவாதங்களை அவர்கள் மனதுகளில் விதைக்காது, அவர்களிற்கு பொதுவுடமை கொள்கைகளில் உள்ள நன்மைகள் பற்றிய அறிவினை புகட்டுவதன் மூலம், எஞ்சி இருக்கும், தமிழினத்தை காக்க, போராட முன்வரவேண்டும் என்பதினையும், இவ்வாறான போராட்டங்களில் கலந்துகொள்வதனூடாக, உண்மையான விடுதலை போராட்டத்திற்கான வழியை கண்டறியலாம் என்பதினையும், எமது மக்கள் புரிந்துகொண்டு, மக்கள் நலன் காக்க முன்வரவேண்டும் என கோரி நிற்கிறோம்.

போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட சில காணொளிகள்
https://www.youtube.com/watch?v=-f5m8OtPMDI

உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளும், அவர்களின் இயக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் http://inioru.com/ngos-and-arm-makers/