ஜெயாவின் நிலை தொடர்பாக இரு கோணங்கள் முன்வைக்கப்பட்டடன. முதலாவது அரசின் கோணம். அதாவது காய்ச்சலில் அனுமதி, உடல்நிலை முன்னேற்றம் என்பதாகும். இதில் பல ஓட்டைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், நீ்ர்ச்சத்து குறைவிற்கு 10 நாட்களிற்கு மேல் அப்போலவில் ஒரு மாடியினையே ஒதுக்கி சிகிச்சை ஏன்? உள்ளூராட்சித் தேர்தலிற்கான விண்ணப்ப பட்டியலிலோ, காவிரிப்பிரச்சனை தொடர்பான சட்டரீதியான மனுவிலோ ஜெயாவின் கையெழுத்து இல்லாமை. ஆளுனரின் அறிக்கையின் சொற்களே visit, wish என்றவாறு தெளிவற்றே உள்ளன, மாறாக ஜெயாவிடம் நேரடியாக பழக்கூடையினை கொடுத்ததாகவவோ அல்லது அவா ஏதாவது பதில் கூறியதாகவோ தகவல் இல்லை. இந்த ஓட்டைகள்
இரண்டாவது கோணமான ஜெயா மூளை மரணமடைந்து விட்டார் அல்லது கோமாவிலுள்ளார் என்ற தமிழிச்சியின் கோணத்தினை வலுப்படுத்தியது. இதுவும் நம்பும்படியாகவில்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு நிலையெனின் இப்போதே கட்சியின் முக்கியஸ்தர்களிடையே அடுத்த முதல்வரிற்கான காய்நகர்த்தல்கள் மறைமுகவாகவேனும் தொடங்கியிருக்கும். மற்றையது நீண்ட நாட்களிற்கு இவ்வாறான நிலையினை மறைத்துவைக்கமுடியாது. எனவே இந்த கருத்து ராம்குமார் விடயத்தில் ஓரளவிற்கு உண்மைகளை வெளிக்கொண்டுவந்த தமிழச்சியின் நம்பத்தன்மையினை இழக்கச் செய்வதற்காக வேண்டுமென்றே தமிழச்சிக்கு கசியவிடப்பட்டட வதந்தியாகவே இதுவாகவிருக்கலாம்.
மூன்றாவது சாத்தியம்:
மேற்கூறிய இரு கருதுகோள்களும் பொய்த்துவிட்டதால் மூன்றவதாக ஒரு உண்மை இருக்கவேண்டுமே அதனை ஆராய்வதே இவ்வாக்கத்தின் நோக்கம். உண்மையில் ஜெயா சில காலமாகவே உடல்நலம் குன்றியயவராகவே (வயது, உடல்பபருமன் காரணமாக) உள்ளார். இதனை சென்ற தேர்தல் பிரச்சசாரத்தின்போதே அறிந்துகொள்ளமுடிந்தது. இதனுடன் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதனை மிகைப்படுத்தி நீண்டநாட்களிற்ககு இந்தப் பதட்டத்தினைத் தொடர்ந்துவைப்பதன் மூலம் மிகப் பெரிய அனுதாப அலையினைத் தோற்றுவிக்கமுடியும். அதன்மூலமாக வரப்போகும் உள்ளூராட்சித்தேர்தலில் அனுதாப வாக்குகளைப் பெருமளவில் பெறமுடியும்.
கடந்தமுறை சட்டசபைத்தேர்தலிலேயே வெறும் ஒரு வீத வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக ஆட்சியினைப் பிடித்தது. இதனை விட முக்கியமான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. அந்தத் தீர்ப்பின் மீதான ஒரு அனுதாபரீதியான தாக்கத்தினைச் செலுத்துவது என்பதாகும். மீறியும் தீர்ப்பு பாதகமானால் சிறை செல்வதனைத் தவிர்க்கலாம் . தீர்ப்பு வந்த பின்பு மார்புவலி என்று மருத்துவமனையில் போய்ப்படுப்பது பழைய நடைமுறை , தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதனை முன்கூட்டியே ஊகித்து மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெறுவது புதிய நடைமுறை (new style).
இந்த நடிப்பின் மூலம் சிறைவாசத்திற்கு பதில் ஐந்து நட்சத்திர வசதியுடன் மருத்துவமனையில் இருந்துகொள்ளலாம். ஜெயலலிதாவிற்கு நடிப்பபதற்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.
அதேநேரம் திமுகவிற்கு இதனை வைத்து அரசியல் செய்யச் சொல்லிக் கொடுக்கத்தேவையில்லை. அவர்களின் திட்டம் பதட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் இரத்தத்தின் இரத்தங்களை வதந்திகள் மூலம் குழப்பி கலவரங்களிலீடுபட வைப்பதன் மூலம் சட்ட ஒழுங்குப் பிரச்சனையினை உருவாக்கி ஆளும் அரசினை மத்திய அரசின் மூலம் கலைக்கவைப்பது அல்லது மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கச்செய்வது என்பதே இந்த அரசியல்.
மொத்தத்தில் அம்மா நன்றாக நடிக்க , கலைஞர் அதனை நன்றாகஅரசியல் செய்ய பாவப்பட்டு நிற்பது என்னவோ அப்பாவி மக்களே!
Found the truth from all posts and has been dreaming for jumping on the CM CHAIR AFER PURCHASING MANY BLACK SHEEP , BESIDES GIVING MINISTER POST FOR BUILDING EMPIRES IN BANGALORE AND MYSORE.
பாரதிய சனதாவும் சசிகலா கும்பலின் சதியே இது. முதலில் வழக்குத்தீர்ப்பபு பாதகம் என்ற தகவலினை யெயாவிற்கு கசியவிட்டு அவரினை நாடகமாடவைத்து, அவவினை தனிமைப்படுத்தி, கட்சி ,ஆட்சி கட்டுப்பாட்டினை சசிகலாவிடம் வழங்கவைத்து மறைமுக ஆட்சியினை நடாத்தவுள்ளது.