சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அiமைச்சரைக் கைதுசெய்யுமாறு நீதி அமைச்சர் இட்ட உத்தரவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இதன்மூலம் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இனவாதப் போக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எந்தவொரு விசாரணையுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் அண்மையில் சந்தித்தபோது, அரசியல் கைதிகள் விடயத்தில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிடமுடியாது என கைவிரித்திருந்தார். அத்துடன், அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக தாம் அனைவருடனும் கதைத்தே முடிவினை எடுக்கவேண்டுமெனவும், தான் தனியாக முடிவெடுக்கமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இனப்படுகொலையாளியான முன்னாள் பாதுகாப்புச் செயலiர் கோத்தாபய ராஜபக்ஷ தமது தந்தையாருக்கான நினைவிடத்தை அமைப்பதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக நீதியமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பிக்குகள் குழுவொன்று மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் கோத்தாபய ராஜபக்ஷவைக் கைது செய்யவேண்டாமென மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சாதாரண குற்றங்களைப் புரிந்த தமிழ் இளைஞர்களை வருடக்கணக்காக எந்தவொரு விசாரணையுமின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைத்திருக்கும் சிங்களப் பேரினவாத அரசாங்கம், நாட்டில் மிகக்கொடிய இனப்படுகொலையை நடத்தியவரும், அரச சொத்துக்களைக் கொள்ளையடித்தவருமான கோத்தாபய ராஜபக்ஷவை தொடர்ந்தும் காப்பாற்றி தனது பேரினவாதத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.