மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது விவசாயிகள் போராட்டம்.
மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, போன்ற அறிவிப்புகளுக்கு எதிராகக் கூட நாடு தழுவிய அளவில் இத்தனை பெரிய போராட்டங்கள் வெடிக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகம் ஆன போது முஸ்லீம்கள் மட்டுமே பெருவாரியாகப் போராடினார்கள். அது முஸ்லீம்களின் போராட்டம் என்று சுருங்கிய நிலையில் இந்து விவசாயிகள் இத்தனை எழுச்சியோடு போராடுவது மோடி அரசை அச்சமடைய வைத்துள்ளது.
மோடி அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “விவசாய மசோதாக்கள் விவசாயிகள் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும்” என்றார். ஆனால், அதை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்.
பல்லாயிரம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விட்ட நிலையில் டெல்லி எல்லையில் போலீசார் லட்சக்கணக்கான விவசாயிகளை தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் இரவில் நுழைய முயலும் போது போலீசார் அவர்களை தடுக்கிறார்கள். விவசாயிகளுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் நிலையில் போலீசாருக்கே விவசாயிகள்தான் உணவு சமைத்துக் கொடுக்கிறார்கள்.
ராம் லீலா மைதானம்
டெல்லியில் எந்த போராட்டம் நடந்தாலும் அது ராம் லீலா மைதானத்தில்தான் நடக்கும். ஆளு ம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவின் ஆதரவாளரான அன்னா அசாரே ராம் லீலா மைதானத்தில்தான் போராட்டம் நடத்தினார். ஆனால், இப்போது விவசாயிகளை டெல்லியில் இருந்து வெகு தூரம் விலகியிருக்கும் புராரி மைதானத்தில் போய் போராடுமாறும் அப்படி அங்கு சென்றால் அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். ஆனால், அந்த கோரிக்கைகளை விவசாயிகள் நிராகரித்து விட்டனர். ராம்லீலா மைதானத்தில் தங்களை போராட அனுமதிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.
விவசாயிகள் போராட, புராரி மைதானத்தில் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் புராரி மைதானம் ஆயிரக் கணக்கான போராடும் விவசாயிகளுக்கு போதாது. ராம் லீலா மைதானம் போன்ற பெரிய
டெல்லியில் கடுங்குளிர் நிலவும் நிலையில் ஆறு மாதங்களுக்கு தேவையான உணவோடு டெல்லிக்கு வந்திருப்பதாக
விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, குளிரிலும், மாசுபாட்டிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஐந்தாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் துவக்கத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜாஸ்தான் மாநில விவசாயிகள்தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது, ஆனால், இப்போது இந்த போராட்டம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் ஒட்டுக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி திரண்டு வருகிறார்கள்.
பஞ்சாபில் இருந்து வந்த விவாசயிகள் டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டத்தை தொடரும் நிலையில், உத்தரபிரதேச விவசாயிகள் உ.பி கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என போராடுகிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்த இத்தனை ஆண்டுகள் முதன் முதலாக பெருந்திரள் இந்து விவசாயிகள் பாஜக ஆட்சிக்கு எதிராக போராடுவது அரசியல் ரீதியாக என்ன மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.