இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன.
இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்கவேண்டுமெனப் போராடிய பீட்டா அமைப்புக்கெதிராக தமிழக இளைஞர்கள், பெண்கள் என தமிழகமே திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
ஜல்லிக்கட்டினால் பன்னாட்டு நிறுவனங்கள் மீது மக்களுக்கு எழுந்த கோபத்தினால் ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவுற்றதும், தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கொக்கக்கோலா போன்ற குளிர்பானங்களை அருந்துவதில்லையெனவும், அதற்குப் பதிலாக உள்நாட்டில் மக்களால் தயாரிக்கப்படும் பழங்களில் தயாரிக்கப்படும் பானங்களையே அருந்துவதாகவும் மக்கள் முடிவெடுத்தனர்.
மக்களின் இம்முடிவை அடுத்து தமிழ் நாட்டு வணிகர் சங்கங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான பெப்சி, கொக்கக்கோலா குளிர்பானங்களை தாம் விற்பனை செய்யப்போவதில்லையெனவும் அறிவித்தனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோப அலையானது, மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து பெப்சி, கொக்கக்கோலா நிறுவனங்களின் விற்பனையானது 5.3 வீதமாகச் சரியத் தொடங்கியுள்ளது.
அத்துடன், கர்நாடகாவில் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கொக்கக்கோலா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அவ்வாறே ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களிலும் மூடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோபமானது, தற்போது அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குத் தூண்டியுள்ளது