தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை.
அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இந்து சமய மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.
கற்கும் பாடசாலையில் தமது சமயத்துக்குரிய ஆசிரியர் இல்லாத நேரத்தில் கற்பிக்கப்படும் சமயத்தை கற்று எழுதிய எத்தனையோ மாற்று சமய மாணவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
ஆதாரம் கேட்கின்றீர்களா?
நானே அதற்கு சிறந்த உதாரணம்:
ஒரு முஸ்லீமாக இருந்தும் நான் கற்ற தமிழ்பாடசாலையில் இஸ்லாம் பாடம் கற்பிக்கப்படாத காரணத்தால் பல ஆண்டுகளாக இந்து சமயத்தை பரீட்சைக்கு எழுதிவந்திருக்கின்றேன். (ஒரு முறை இரண்டாவது உச்ச புள்ளியைப் பெற்ற காரணத்தால் அப்படத்திற்குரிய ஆசிரியர் என்னைப் பலர் முன்னிலையில் பாராட்டியதோடு என்னைக் காண்பித்து குறைவான புள்ளிபெற்ற இந்து மாணவர்களை கண்டித்துமிருக்கின்றார்)
இதைஅடக்குமுறை என்றா கூறுவது..?
குறித்த பாடசாலைகளில் பயிலும் இந்து மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்து கற்கின்றார்கள் என்பதற்குரிய ஒரு ஆதாரத்தையாவது இந்தச் செய்தியை எழுதிய அல்லது வெளியிட்ட நபர்களால் வெளியிட முடியுமா?