வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் யாழ். மாநகரசபை முதல்வராக போட்டியிடுவார் என தமிழரசுக்கட்சி அறிவித்துள்ள நிலையில், இன்|று அவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
இந்நிலையில், ஆர்னோல்ட்டுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பிஆர்.எல்.எவ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட சில வர்த்தகர்கள் இணைந்து பொது வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், வர்த்தகர்களால் வித்தியாதரன் பரிந்துரைக்கப்பட்டாலும், அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அக்கட்சியின் சட்டத்தரணியான மணிவண்ணனை களமிறக்கினால் மாத்திரமே தாம் ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் வர்த்தகர்களுக்கிடையில் பொது வேட்பாளர் தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், மணிவண்ணனைக் களமிறக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், இக்கட்சிகள் மாநகர முதல்வர் தெரிவில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், நாளை மணிவண்ணனின் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.