விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில் விவசாயி தீக்குளிப்பு!

கடந்த 14ஆம் நாள் வடமராட்சி அல்வாய், வதிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த விவசாயி 60 வயதுடைய உதயராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி கடந்த வருடம் வெங்காயப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தும் மழையின்மையால் குறித்த பயிர்ச்செய்கை பாதிப்படைந்துள்ளது.

இந்தவருடம் கத்தரி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தும், அதுவும் அழிவடைந்த நிலையில் சில நாட்களாக விரக்தியடைந்திருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று, குறித்த விவசாயி  மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன், யாருமற்ற இடத்தில் தனக்குத் தானே தீமூட்டி இறந்துள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு உணவு போடும் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்யும் நிலையில், வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள், இரவிரவாய் ஒன்றுகூடி கட்சிக்கூட்டம்  நடத்துகின்றார்கள்.

 

One thought on “விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில் விவசாயி தீக்குளிப்பு!”

  1. Peninsula needs a faculty of Agriculture. Counselling to farmers.

Comments are closed.