எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் புளொட் அமைப்பிலிருந்து போட்டியிடவிருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பெண் வேட்பாளர் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் ரௌவுடிக் கும்மலால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ கட்சிகளுக்கிடையில் ஆசனப் பங்கீட்டில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளது.
இம்மோதல்கள் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
அண்மையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புளொட் அமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையிலான குழுவினர், ‘தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், அதை மீறி தேர்தலில் போட்டியிட்டால் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் அச்சமடைந்த, குறித்த பெண் வேட்பாளர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.