இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப் பெருமாளை தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இணக்கம் காணப்பட்ட து.
இந்நிலையில், வரதராஜப்பெருமாளும் அவரது கட்சிக்காரர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனித்துப் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி நகர சபையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
தமிழர் சமூக ஜனநாயக கட்சியை தமிழரசுக் கட்சியுடன் இணைப்பதற்கு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.
பேச்சில் இணக்கம் காணப்பட்டநிலையில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலினை தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியிடமிருந்து 50பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப்பெருமாள் மாவை சேனாதிராஜாவை பலமுறை தொடர்புகொண்டபோதிலும் மாவை சேனாதிராஜா பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 12ஆம் நாள் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்ததுடன், அதற்கான கட்டுப்பணத்தையும் கட்டியுள்ளனர்.