கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எத்தனை நாட்களில் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கும் நேற்று முன்தினம் இந்திய அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அவருடன் ரஷிய நாட்டைச் சேர்ந்த அணு உலை கட்டுமானம், கட்டமைப்பு நிறுவன தலைவர்
ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான தேயிலை அபிவிருத்திச் சபையின் தலைவி ஜானகி குருப்பு, ஜனாதிபதியின் அதிகாரத்தை சபைக்குள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சபையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேயிலை அபிவிருத்திச் சபையின் கட்டத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை ஜானகிக்கு நெருக்கமான நிறுவனமொன்றுக்கு வழங்கி, பாரிய கொடுக்கல், வாங்கல் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்ட அலுவலக அறைகளைக் கூட முற்றாக அகற்றிவிட்டு, அவற்றை சுமார்
திமுக குடும்ப அரசியலில் உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது. ஸ்டாலின் மதுரை வந்தபோது மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான அழகிரி சீனா சென்று இருந்தார். அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரை வரவேற்கவும் அதிக அளவில் யாரும் செல்லவில்லை. இதனால் ஸ்டாலினும், கட்சி மேலிடமும் அதிருப்தியில் இருந்தது. இதனையடுத்து இவ்வாறு வரவேற்க வராத அழகிரியின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு திமுக தலைமைநிலையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியது. இந்நிலையில் இன்று சீனாவில் இருந்து மதுரை வந்து
“தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்தை உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே கருத்தைக் கொண்டது. நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை. தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிராக, இலங்கையில் சிங்களர்களால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும், நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான், நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கின்ற மத்திய
ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டுமென்ற ஆணித்தரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்காத இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப்பயணமாகுமென விமர்சித்துள்ள நவமமாஜக் கட்சி, ஆதிவாசிகளை பார்வையிடுவது போன்று தமிழ் மக்களை இக் குழு பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில் இந்திய, இலங்கை உடன்படிக்கை 1987 இல் கையெழுத்திட்டு அதன் மூலமே 13 ஆவது
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழு இன்று மாலை 5 மணியளவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேசினார். ராஜபக்ஷேவுடன் சேர்ந்து சுஷ்மா காலை உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ராஜபக்ஷேவுடன் சுஷ்மா ஆலோசனை நடத்தியதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.
தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். தமிழினத் தலைவன் வேடம் போட்டிருந்த கருணாநிதிக்கு நிகராக நடிப்பதற்கு ஜெயலலிதா கற்றுக்கொண்டதன் எதிரொலியாக இப்போது கருணாநிதி தமிழ் ஈழம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளால் ஈழத் தமிழர்கள் வெறும் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். 2009 இல் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கருணாநிதியுடன் இணைந்து ஒரு நாடகத்தையே நடத்தியதாக கோதாபாய ராஜபக்ச கூறியிருந்தார். அதே கோதாபய இப்போது
அரசியல், பொருளாதாரத் துறையில் எவ்வாறு ஆதிக்க சக்திகளின் ஆதிக்கம் நிலவுகின்றதோ